என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடக்கன்குளம் பள்ளியில் 33 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
- வெளிநாடு, வெளி மாநிலம், பிற மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவ -மாணவிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
- 33 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் படித்தபோது நடந்த நிகழ்வுகளை பரிமாறி கொண்டனர்.
பணகுடி:
வடக்கன்குளம் நேரு தேசிய மேல்நிலைப்பள்ளியில் 1989-90-ம் ஆண்டு பிளஸ்- 2 வகுப்பில் பயின்ற மாணவ-மாணவிகளின் 33 ஆண்டுகளை கடந்த சந்திப்பு நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
வெளிநாடு, வெளி மாநிலம், பிற மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவ -மாணவிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 33 ஆண்டு களுக்கு பிறகு பள்ளியில் படித்த போது நடந்த நிகழ்வுகளை பரிமாறி கொண்டனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக பாடல் பாடியும், முன்னாள் மாணவியின் மகள் பரத நாட்டி யம் ஆடியும் சந்திப்பு நிகழ்ச்சியை வெகுவாக கவர்ந்தனர்.
Next Story






