என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

சிறு வியாபாரிக்கு புதிய சைக்கிளை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கிய போது எடுத்த படம்.
களக்காடு அருகே சிறு வியாபாரிக்கு புதிய சைக்கிள்- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்

- கோபால் என்ற வியாபாரி தனக்கு சைக்கிள் வாங்கி தர எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தார்.
- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. விரைவில் சைக்கிள் வாங்கி தருவதாக கோபாலிடம் உறுதி அளித்தார்.
நெல்லை:
களக்காடு நகராட்சி, சிதம்பராபுரம் நாராயண சுவாமி கோவில் திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அந்த ஊரை சேர்ந்த கோபால் என்பவர், தான் சிறிய அளவில் வியாபாரம் செய்து வருவதாகவும், சைக்கிள் வாங்கி கொடுத்தால் தன்னுடைய வியாபாரத்திற்கு அது பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கை வைத்தார்.
புதிய சைக்கிள்
அதனை ஏற்றுக்கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. விரைவில் சைக்கிள் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். அதன்படி நேற்று கோபாலுக்கு களக்காட்டில் தனது சொந்த செலவில் புதிய சைக்கி வாங்கி கொடுத்தார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் வி.என்.கே. அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர் சந்திர சேகர், களக்காடு நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெ க்ஸ், கவுன்சி லர் மீகா, முன்னாள் மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், காங்கிரஸ் கமிட்டி நிர்வா கிகள் துரை, முகம்மது அலி, பாஸ்கரன், விபின், லீலாவதி மற்றும் களக்காடு நகராட்சி காங்கி ரஸ் கமிட்டி நிர்வாகி களும் கலந்து கொண்டனர்.