search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழையபேட்டையில் பாலப்பணி தொடங்கியதால் அதிகரித்த போக்குவரத்து நெருக்கடி- மாற்றுப்பாதை நாளை முதல் அமல்
    X

    கண்டியப்பேரியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்ற காட்சி.

    பழையபேட்டையில் பாலப்பணி தொடங்கியதால் அதிகரித்த போக்குவரத்து நெருக்கடி- மாற்றுப்பாதை நாளை முதல் அமல்

    • தென்காசியில் இருந்து நெல்லை மாநகரத்திற்குள் வரும் பஸ், லாரிகள் செல்ல மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    • தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பழைய பேட்டை செக்போஸ்ட் அருகே திருப்பி விடப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை-தென்காசி சாலையில் பழைய பேட்டை கண்டியபேரி அருகே சாலை வளைவில் அமைந்துள்ள பழமையான தரைப்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது.

    இதனையொட்டி அந்த வழியாக நெல்லையில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும் பஸ், லாரிகளும், இதே போல் மறு மார்க்கமாக தென்காசியில் இருந்து நெல்லை மாநகரத்திற்குள் வரும் பஸ் மற்றும் லாரிகள் செல்வ தற்கும் மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    அதற்கான முன்னோட்டம் இன்று நடைபெற்றது. அதே நேரத்தில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் கண்டியப்பேரி வழியாக செல்வதற்கு தற்காலிகமாக மண் கொட்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை சோதனை ஓட்டம் தொடங்கிய நிலையில் தென்காசிக்கு செல்லும் பெரும்பாலான பஸ்கள் காட்சி மண்டபத்தில் இருந்து கோடீஸ்வரன் நகர், பேட்டை, திருப்பணி கரிசல் குளம் வழியாக அபிஷேகப்பட்டிக்கு செல்லாமல் காட்சி மண்டபத்தில் இருந்து வழுக்கோடை வழியாக கண்டியப்பேரி பகுதிக்கு சென்று விட்டது.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருபுறமும் வாக னங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது.

    தகவல் அறிந்த போக்கு வரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து போக்கு வரத்து நெருக்கடியை சரி செய்தனர். அதனைத் தொடர்ந்து தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பழைய பேட்டை செக்போஸ்ட் அருகே திருப்பி விடப்பட்டு, புதுப் பேட்டை ரொட்டி கடை பஸ் நிறுத்தம் வழியாக கோடீஸ்வரன் நகருக்கு சென்று மீண்டும் வழுக்கோ டை வந்து தொண்டர் சன்னதி வழியாக மாநருக்குள் இயக்கப்பட்டது.

    இந்த நடைமுறை நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. இன்று சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் புதுப்பேட்டை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனையொட்டி ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு வாகன போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

    காலையில் தென் காசியில் இருந்து வரும் பஸ்கள் எளிதாக நெல்லை க்கு வந்து விடும் நிலையில் நெல்லை யிலிருந்து தென்காசி செல்வதற்கு பெரும் பாலான பகுதி களை பஸ் சுற்றி செல்வதால் பயண நேரம் மிகவும் அதிகரிப்ப தாக பயணி கள் புகார் கூறினர்.

    Next Story
    ×