என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • செல்வகுமார் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
    • கால் தடுக்கி விழுந்ததில் செல்வக்குமாருக்கு பின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டை பெத்தேல்நகர் காலனி குடியிருப்பை சேர்ந்தவர் இசக்கிதுரை. இவரது மகன் செல்வகுமார் (வயது28). ராணுவ வீரரான இவர் அசாமில் பணிபுரிந்து வந்தார்.

    தவறி விழுந்து சாவு

    இவருக்கு திருமணமான நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. தற்போது செல்வகுமார் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    நேற்று இரவு செல்வகுமார், வீட்டின் படிக்கட்டில் கால் தடுக்கி விழுந்துள்ளார். இதில் செல்வக்குமாருக்கு பின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் தனது தாயாரிடம் நலமாக இருப்பதாக கூறிவிட்டு தனது அறைக்குள் சென்று கட்டிலில் படுத்து உள்ளார். இதன் பின்னர் செல்வகுமாரை அவரது தாய் சாப்பிடுவதற்காக கூப்பிட்ட போது அவர் எழுந்திருக்கவில்லை. அங்கு சென்று பார்த்த போது அவர் மயக்க நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தி.மு.க. மகளிரணி உள்ளிட்ட அணி நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆலோசனை நடத்தினார்.
    • புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரச்சாரம் நடத்துவது சம்பந்தமாக சார்பு அணி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜநகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

    நேற்று மகளிரணி, மகளிர் தொண்டரணி, கலை-இலக்கிய பேரவை, இளைஞரணி நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட மகளிரணி தலைவா கமலா நேரு, அமைப்பாளர் மல்லிகா அருள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபிந்தர், துணை அமைப்பாளர்கள் வேல்முருகன், அருள்ராஜ் டார்வின், ஆகாஷ், தில்லைராஜா, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஜெயமாலதி, துணை அமைப்பாளர் அனுராதா ரவி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும், பரிந்துரைத்த மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • பாத்திமா மில்கேட் பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • பேட்டை போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் கடையில் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது.

    நெல்லை:

    நெல்லை பேட்டை மில்கேட் பகுதியை சேர்ந்தவர் செய்யது முகமது பட்டாணி. இவரது மனைவி செய்யதலி பாத்திமா(வயது 52). இவர் மில்கேட் பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அங்கு புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே பேட்டை போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் கடையில் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது. இதையடுத்து பாத்திமா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • நேற்று வழக்கம்போல் பால சுப்பிரமணி சேரன்மகாதேவி அருகே உலகன்குளம் கிராமத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சாலை யோரத்தில் மயங்கி விழுந்தார்.

    நெல்லை:

    களக்காடு அருகே உள்ள மாவடியை சேர்ந்தவர் பால சுப்பிரமணி(வயது 47). இவர் பேக்கரி பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் எடுத்துச்சென்று கிராமங் களில் விற்பனை செய்து வந்தார்.

    நேற்று வழக்கம்போல் சேரன்மகாதேவி அருகே உலகன்குளம் கிராமத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சாலை யோரத்தில் மயங்கி விழுந்தார். உடனே அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சேரன்மகாதேவி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • விழா நாட்களில் அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி இடம்பெற்றது.
    • தேரோட்டத்ததையொட்டி அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஸ்ரீமந்ஆதிநாராயண சுவாமி கோவிலில் ஆனிமாத தேரோட்டத் திருவிழா கடந்த 30-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி இடம்பெற்றது. திருவிழாவின் 8-ம் நாளான கடந்த 7-ந் தேதி பரிவேட்டை விழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 11-ம் நாளான நேற்று நடந்தது.

    இதையொட்டி அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அய்யா நாராயணசுவாமி தேருக்கு எழுந்தருளினார். பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் இலவசமாக மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. ரதவீதிகளை சுற்றி தேர் நிலைக்கு வந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • 44 பந்துகளில் 73 ரன்களை குவித்த அஜித்தேஷ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடினார்.
    • 20 ஓவர் முடிவில் நெல்லை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அபாரமாக வென்றது.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் நடைபெறும் 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் மோதின.

    டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. திண்டுக்கல் அணி பேட்டிங் செய்தது.

    திண்டுக்கல் அணியின் துவக்க வீரர் விமல் குமார் 16 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், சிவம் சிங்-பூபதி குமார் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது.

    குறிப்பாக சிவம் சிங் பந்துகளை சிக்சர்களாக விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

    பூபதி குமார் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த சிவம் சிங் 76 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர் 46 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எட்டினார்.

    அவரைத் தொடர்ந்து ஆதித்ய கணேஷ் 13 ரன்களிலும், சரத் குமார் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. சுபோத் 6 ரன்களுடனும், கேப்டன் பாபா இந்திரஜித் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    நெல்லை அணி தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார். சந்தீப் வாரியர், பொய்யாமொழி, லக்சய் ஜெயின் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் களமிறங்கியது.

    அஜித்தேஷ் குருசுவாமி அதிரடியாக விளையாடினார். 44 பந்துகளில் 73 ரன்களை குவித்த அஜித்தேஷ் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை.

    ரித்திக் ஈஸ்வரன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

    நிதிஷ் ராஜகோபால் மற்றும் அருண் கார்த்திக் தலா 26 ரன்களும், சுகேந்திரன் 22 ரன்களும் எடுத்தனர்.

    19.4 ஓவரின்போது 2 பந்துக்கு 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அஜித்தேஷ் மற்றும் ரித்திக் விளையாடினர்.

    இந்நிலையில், 20 ஓவர் முடிவில் நெல்லை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அபாரமாக வென்றது.

    இதன்மூலம், நெல்லை ராயல் கிங்ஸ் 2வது குவாலிபையர் சுற்றில் வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

    நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியுடன் நெல்லை ராயல் கிங்ஸ் மோதுகிறது.

    • திண்டுக்கல் அணியில் சிவம் சிங்-பூபதி குமார் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது.
    • சிவம் சிங் 46 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசினார்.

    நெல்லை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் நடைபெறும் 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. திண்டுக்கல் அணி பேட்டிங் செய்தது.

    திண்டுக்கல் அணியின் துவக்க வீரர் விமல் குமார் 16 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், சிவம் சிங்-பூபதி குமார் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. குறிப்பாக சிவம் சிங் பந்துகளை சிக்சர்களாக விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பூபதி குமார் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த சிவம் சிங் 76 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர் 46 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எட்டினார்.

    அவரைத் தொடர்ந்து ஆதித்ய கணேஷ் 13 ரன்களிலும், சரத் குமார் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. சுபோத் 6 ரன்களுடனும், கேப்டன் பாபா இந்திரஜித் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    நெல்லை அணி தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார். சந்தீப் வாரியர், பொய்யாமொழி, லக்சய் ஜெயின் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் களமிறங்குகிறது.

    இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியுடன் மோதும்.

    • பாளை மார்க்கெட்டில் இன்று இஞ்சி விலை மேலும் அதிகரித்தது.
    • ஜண்டா ரக வெங்காயம் கிலோ ரூ.180-க்கு விற்பனையாகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.

    வடமாநிலங்களில் பெய்து வரும் மழை, வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி, சாம்பார் வெங்காயம், இஞ்சி, மிளகாய் உள்ளிட்டவைகளின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில் பாளை மார்க்கெட்டில் இன்று இஞ்சி விலை மேலும் அதிகரித்தது. நேற்று கிலோ ரூ.300-க்கு விற்ற நிலையில் இன்று மேலும் ரூ.30 அதிகரித்து கிலோ ரூ.330 ஆக உயர்ந்தது. இதேப்போல தக்காளி கிலோ ரூ.120-க்கும், குண்டு மிளகாய் ரூ.130-க்கும், சாம்பார் மிளகாய் ரூ.120- க்கும் விற்பனையானது.

    சாம்பார் வெங்காயம் தரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. இதில் ஜண்டா ரக வெங்காயம் கிலோ ரூ.180-க்கும், நாட்டு வெங்காயம் ரூ.160-க்கும் விற்பனையாகிறது.

    பீன்ஸ் கிலோ ரூ.100, அவரை ரூ.80, கேரட் ரூ.60க்கு விற்பனையாவதாக வியாபாரி கள் தெரிவித்தனர். அதே நேரம் புடலங்காய், பீட்ரூட், சவ்சவ் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை குறைவாக இருப்பதாகவும் அவை கிலோ ரூ.40க்கும் விற்கப்படு வதாக வியாபாரிகள் கூறினர்.

    பாவூர்சத்திரம்

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.150, மிளகாய் ரூ.120க்கும் விற்பனையாகிறது.

    • காமராஜர் முதல் -அமைச்சராக இருந்த போது பூரணமதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.
    • மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர்.

    நெல்லை:

    பொதுமக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    சமத்துவ மக்கள் கட்சியினர் மனு

    சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் மானூர் தெற்கு ஒன்றியம் செழியன், மாநில செயற்குழு உறுப்பினர் செபஸ்டின், இனைஞர் அணி செயலாளர் முரளி மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய விடுதலை போராட்டம், அகில இந்திய காங்கிரஸ் தலைவர், தமிழ கத்தின் முதல்-அமைச்சர் பதவி என பல்வேறு நிலை களில் மக்களுக்காக பல்வேறு பணிகள், திட்டங் களை தந்தவர் கர்மவீரர் காமராஜர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் பெருந்தலைவர் காமராஜர் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டும் வருகிற 15-ந்தேதி அவரது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. காமராஜர் முதல் -அமைச்சராக இருந்த போது பூரணமதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. எனவே பெருந்தலைவர் காமராஜருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வருகிற 15-ந்தேதி தமிழ கத்தில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாஞ்சோலை தொழிலாளர்கள்

    தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் கொடுத்த மனுவில், கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர்.

    அவர்களின் நினைவாக தாமிரபரணி ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலதத்திற்கு மாஞ்சாலை போராளிகள் நினைவு பாலம் என பெயரிட வேண்டும். தாமிரபரணி ஆற்றங்கரையில் உயிரிழந்த வர்களுக்கு நினைவு தூண் அமைக்க வேண்டும் என 2012-ம் ஆண்டு முதல் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

    • மோட்டார் சைக்கிள் மோதியதில் மில்டன் பலத்த காயமடைந்தார்.
    • சண்முகவேல் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது அவர் மீது லாரி மோதியது.

    நெல்லை:

    பாளை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் மில்டன் (வயது65). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத் தன்று அப்பகுதியில் உள்ள சங்கர் காலனியில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அம்பை அருகே உள்ள சாட்டு பத்தை சேர்ந்தவர் சண்முக வேல்(55). காவ லாளி. இவர் வண்ணார் பேட்டையில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது லாரி மோதியது. இதில் காயமடைந்த அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் இன்று சிறு வணிகர்களை வதைக்கும் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி அறவழி ஆர்ப்பாட்டம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். தெற்கு மாவட்ட தலைவர் கணேசன், மாநில துணைத்தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார், மாவட்ட துணைத்தலைவர் காமாட்சி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஒருங்கிணை ப்பாளர் அருண்குமார், மாநில இளைஞரணி தலைவர் ஜெயபாலன், மாவட்ட தலைவர் ராகசேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலத் தலைவர் முத்துக்குமார், மாநிலச் செயலாளர்கள் முத்துக்குட்டி, முருகன் ஆகியோர் பேசினார்கள்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞரணி துணைத்தலைவர் மணி கண்டன், சென்னை ஒருங்கிணை ப்பாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து கோஷங்கள் எழுப்ப ப்பட்டது. இதில் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் ஜெபக்கு மார், சுரண்டை ராமர், முகமது ராஜா, பாலா, பிரகாஷ், கண்ணன், கார்த்திகேயன், முருகன், பொன் பெருமாள், பொன் சசிகலா, குமரேசன், முத்துக்குமார், மைதீன், தருவை காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக சுப்பிரமணியன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • மோட்டார் சைக்கிள் திருட்டில் முகமது ஹசன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    நெல்லை:

    மேலப்பாளையம் போலீசார் கடந்த 2-ந்தேதி நடந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக விசாரணை நடத்தி சுப்பிரமணியன் என்பவரை கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணை யில், மோட்டார் சைக்கிள் திருட்டில் மேலப்பாளையம் பீடி காலனியை சேர்ந்த முகமது ஹசன்(வயது 27) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவத்தன்று அவரிடம் விசாரணை செய்வதற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரம்மநாயகம் தலைமையிலான போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர்.

    அப்போது ஹசன் போலீ சாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர்.

    ×