search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narayana Swamy Temple"

    • விழா நாட்களில் அய்யா அன்ன வாகன பவனி, சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.
    • முக்கிய நிகழ்ச்சியாக பால் வைத்தல், அய்யா அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் வானவேடிக்கை,மேளதாளத்துடன் பவனி நடந்தது.

    உடன்குடி:

    உடன்குடி சந்தையடியூரில் தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் நாராயணசுவாமி கோவிலில் ஆடி, ஆவணி மாத பால்முறை திருவிழா 6 நாட்கள் நடந்தது. தொடர்ந்து விழா நாட்களில் அய்யா அன்ன வாகன பவனியும், அய்யா நாக வாகனம், குதிரை வாகனம், கருடன், அனுமார் வாகனங்களில் பவனி வருதல், தர்மம் எடுத்தல், திருவிளக்கு வழிபாடு, உம்பான் தர்மம் வழங்கல், சந்தனக்குடம் பவனி, சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. முக்கிய நிகழ்ச்சியாக பால் வைத்தல், அய்யா அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் வானவேடிக்கை,மேள தாளத்துடன் பவனி நடந்தது. ஏராளமான மக்கள் சப்பரத்திற்கு சுருள் வைத்தனர். 6 நாள் நடந்த விழாவிலும் அன்பு கொடிமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர்மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • விழா நாட்களில் அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி இடம்பெற்றது.
    • தேரோட்டத்ததையொட்டி அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஸ்ரீமந்ஆதிநாராயண சுவாமி கோவிலில் ஆனிமாத தேரோட்டத் திருவிழா கடந்த 30-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி இடம்பெற்றது. திருவிழாவின் 8-ம் நாளான கடந்த 7-ந் தேதி பரிவேட்டை விழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 11-ம் நாளான நேற்று நடந்தது.

    இதையொட்டி அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அய்யா நாராயணசுவாமி தேருக்கு எழுந்தருளினார். பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் இலவசமாக மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. ரதவீதிகளை சுற்றி தேர் நிலைக்கு வந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஸ்ரீமந் ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்டத் திருவிழா இன்று தொடங்கியது.
    • அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேஷ பணி விடைகளும் நடத்தப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஸ்ரீமந் ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்டத் திருவிழா இன்று தொடங்கியது.

    1-ம் திருநாளான இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேஷ பணி விடைகளும் நடத்தப்பட்டது.

    அதனைதொடர்ந்து மூலஸ்தானத்தில் இருந்து பக்தர்கள் கொடி பட்டத்தை எடுத்து வந்து, கோவிலை சுற்றி வந்தனர். அதன்பின் மேளதாளங்கள் முழங்க, சங்கு நாதம் இசைக்க கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    விழாவில் களக்காடு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். திருவிழாவின் 8-ம் நாளான வருகிற 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பால் கிணற்றின் அருகே பரிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ம் நாளான வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று பகல் 12 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • சவலாப்பேரி ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் ஆடித்திருவிழா கொண்டாடப்பட்டது.
    • சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை அருகே சவலாப்பேரி ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் ஆடித்திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

    விழாவையொட்டி கோவிலில் காலை பக்தர்கள் சந்தனகுடம் ஊர்வலம் நடைபெற்றது. மதியம் அய்யாவழி உச்சிப்படிப்பு பாடி, அய்யாவுக்கு பணிவிடைகள் நடந்தது.

    பின்னர் மாலை வாகனத்தில் அய்யா எழுந்தருளி, பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் பெண் பக்தர்கள் கும்மியடிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் மதியம் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமன் நாராயணசாமி கோவில் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

    • அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.
    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 11-ம் நாளான 4-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஸ்ரீமந் நாராயணசுவாமி கோவில் 93-வது ஆனி திருவிழா கடந்த 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாளான நேற்று 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பரிவேட்டை விழா நடந்தது.

    இதையொட்டி மாலையில் அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஊருக்கு மேற்கே உள்ள காலங்கரை ஆற்றில் இறங்கி பரிவேட்டையாடினார்.

    விழாவில் களக்காடு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 11-ம் நாளான 4-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×