என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவிழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
நெல்லை அருகே நாராயண சுவாமி கோவில் ஆடித்திருவிழா
- சவலாப்பேரி ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் ஆடித்திருவிழா கொண்டாடப்பட்டது.
- சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை அருகே சவலாப்பேரி ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் ஆடித்திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி கோவிலில் காலை பக்தர்கள் சந்தனகுடம் ஊர்வலம் நடைபெற்றது. மதியம் அய்யாவழி உச்சிப்படிப்பு பாடி, அய்யாவுக்கு பணிவிடைகள் நடந்தது.
பின்னர் மாலை வாகனத்தில் அய்யா எழுந்தருளி, பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் பெண் பக்தர்கள் கும்மியடிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் மதியம் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமன் நாராயணசாமி கோவில் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
Next Story






