களக்காடு சிதம்பரபுரம் நாராயண சுவாமி கோவிலில் பரி வேட்டை விழா

அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 11-ம் நாளான 4-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
விழாவில் கலந்து கொண்டவர்கள். 
விழாவில் கலந்து கொண்டவர்கள். 
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஸ்ரீமந் நாராயணசுவாமி கோவில் 93-வது ஆனி திருவிழா கடந்த 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாளான நேற்று 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பரிவேட்டை விழா நடந்தது.

இதையொட்டி மாலையில் அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஊருக்கு மேற்கே உள்ள காலங்கரை ஆற்றில் இறங்கி பரிவேட்டையாடினார்.

விழாவில் களக்காடு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 11-ம் நாளான 4-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com