என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி வியாபாரிகள் சங்க பேரவையினர் அறவழி ஆர்ப்பாட்டம்
    X

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

    மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி வியாபாரிகள் சங்க பேரவையினர் அறவழி ஆர்ப்பாட்டம்

    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் இன்று சிறு வணிகர்களை வதைக்கும் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி அறவழி ஆர்ப்பாட்டம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். தெற்கு மாவட்ட தலைவர் கணேசன், மாநில துணைத்தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார், மாவட்ட துணைத்தலைவர் காமாட்சி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஒருங்கிணை ப்பாளர் அருண்குமார், மாநில இளைஞரணி தலைவர் ஜெயபாலன், மாவட்ட தலைவர் ராகசேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலத் தலைவர் முத்துக்குமார், மாநிலச் செயலாளர்கள் முத்துக்குட்டி, முருகன் ஆகியோர் பேசினார்கள்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞரணி துணைத்தலைவர் மணி கண்டன், சென்னை ஒருங்கிணை ப்பாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து கோஷங்கள் எழுப்ப ப்பட்டது. இதில் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் ஜெபக்கு மார், சுரண்டை ராமர், முகமது ராஜா, பாலா, பிரகாஷ், கண்ணன், கார்த்திகேயன், முருகன், பொன் பெருமாள், பொன் சசிகலா, குமரேசன், முத்துக்குமார், மைதீன், தருவை காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×