என் மலர்
திருநெல்வேலி
+2
- பாபநாசம் அணையில் 5,500 கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும்.
- இன்று முதல் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
சிங்கை:
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையாக பாபநாசம் அணை விளங்குகிறது. இந்த அணை யில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேரடியாகவும், மறைமுக மாகவும் சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
மொத்தம் 143 அடி கொள்ள ளவு கொண்ட இந்த அணையில் 5,500 கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையின்போது குறைந்தபட்சம் 60 அடி வரை அணையில் நீர்மட்டம் இருந்தால் பாசனத்திற்காக திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறிப்பிடத்தக்க அளவு பெய்யாவிட்டாலும், ஓரளவு பெய்த மழையின் காரணமாக இன்றைய நிலவரப்படி 70.90 அடியாக உள்ளது.
இதையடுத்து அணையில் இருந்து ஜூன் 1-ந்தேதி முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தற்போது வரை திறக்கப்படாததால் விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இன்று முதல் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று காலை பாபநாசம் அணையில் இருந்து இன்று காலை பாசனத்திற்காக தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து தாமிரபரணி பாசனத்தில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய்கள், கன்னடியன் மற்றும் நதியுண்ணி கால்வாய்களில் நீரானது இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 18,090 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த நீரானது இன்று தொடங்கி வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை மொத்தம் 105 நாட்களுக்கு திறக்கப்படுகிறது. கார் சாகுபடி, குடிநீர் தேவைக்கென மொத்தம் 3015 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், பொதுப்ப ணித்துறை செயற்பொ றியாளர் மாரியப்பன், தாமிரபரணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜன், பேச்சிமுத்து அவர்கள், வி.கே. புரம் நகராட்சி சேர்மன் செல்வ சுரேஷ் பெருமாள், அம்பாசமுத்திரம் நகராட்சி சேர்மன் பிரபாகர பாண்டியன், அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், களக்காடு நகர்மன்ற துணை தலைவர் பி.சி. ராஜன், மாவட்ட கவுன்சிலர்கள் சாலமோன் டேவிட், பாஸ்கர், அருண் தவசு பாண்டியன், உதவி பொறியாளர்கள் மகேஸ்வரன், ஜெயகணேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சங்கனான்குளம், நவ்வலடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- இட்டமொழி, நம்பிகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நாளை பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
வள்ளியூர்:
வள்ளியூர் மின்கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையங்களான சங்கனான்குளம் மற்றும் நவ்வலடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
சங்கனான்குளம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜய நாராயணம், இட்ட மொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏறாந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.
நவ்வலடி துணை மின் நிலையத்திற்குட்பட்ட நவ்வலடி, ஆற்றங்கரை பள்ளி வாசல், தோட்ட விளை, தெற்கு புளி மான்கு ளம், கோடாவிளை, மரக்கா ட்டு விளை, செம்பொன் விளை, காளிகு மாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்ட ப்பனை, குட்டம், பெட் டைக்கு ளம், உறுமன்குளம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை வள்ளியூர் செயற் பொறி யாளர் வளன்அரசு தெரிவித்தார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஜோசப் ராஜஜெகனை அரிவாளால் வெட்டினர்.
- கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் வள்ளியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
நெல்லை:
வள்ளியூர் காமராஜர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜோசப் ராஜஜெகன் (வயது 46). வக்கீல். இவர் நேற்று காலை வள்ளியூர் மெயின் ரோட்டில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்து கதவை திறந்து கொண்டிருந்தார்.
அரிவாள் வெட்டு
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென அவரை அரிவாளால் வெட்டினர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதில் 2 பேரை பொதுமக்கள் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் நெல்லை அருகே உள்ள மூன்றடைப்பு பேரின்பபுரத்தை சேர்ந்த கார்த்திக் (22), பிரவின் ராஜா (22) ஆகியோர் என்பதும், தப்பி சென்றவர் ஆனந்தராஜ் (40) என்பதும் தெரியவந்தது.
கூலிப்படையினர்
அரிவாள் வெட்டில் ஜோசப் ராஜஜெகனின் தலை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் வள்ளியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் பணத்திற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த வாரம் ஜோசப் ராஜஜெகனை இந்த கும்பல் வெட்டுவதற்காக வெள்ளை நிற காரில் வந்துள்ளனர். ஆனால் சில காரணங்களால் அவர்கள் திரும்ப சென்றுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே காரில் வந்த கும்பல் பேரின்பபுரத்திற்கு சென்றுள்ளனர். இது அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது. இதனை கைப்பற்றிய போலீசார் வக்கீலை எதற்காக இந்த கும்பல் கொலை செய்ய முயன்றனர். முன் விரோதம் காரணமாக நடைபெற்றதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பிச் சென்ற ஆனந்தராஜ் தான் இவர்களை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. எனவே அவரை பிடித்தால் தான் உண்மையான கார ணம் தெரியவரும் வரும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரையும் காவலில் எடுத்து விசா ரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
வள்ளியூரில் மூத்த வழக்கறிஞர் ஜோசப் ராஜ ஜெகனை அவரது அலுவலகத்தில் வைத்து நேற்று கூலிப்படையினர் வெட்டியதை கண்டித்தும், அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கோரியும் வள்ளியூர் மற்றும் நாங்குநேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் வக்கீல்கள் இன்று கோர்ட்டுகளை புறக்கணித்தனர்.இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.
- நகர்ப்புற உள்ளாட்சிகளில் பிரதிநிதிகளாக உள்ளவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
- மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்க பரிந்துரைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
திசையன்விளை:
ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளில் பிரதிநிதிகளாக உள்ளவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் குறித்து அறிவிக்கப்படவில்லை.
மேற்படி நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட உள்ள மாதாந்திர மதிப்பூதியம் போன்று ஊரக உள்ளாட்சி பிரநிதிகளாக உள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோருக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்க முதல்-அமைச்சரிடம் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அப்போது ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன் ஆகியோர் உடனிருந்தனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் சுபாசை அரிவாளால் வெட்டினர்.
- ஆயுதங்களுடன் வரும் கும்பல் கடைகளில் தகராறு செய்வது அடிக்கடி நடக்கிறது.
முக்கூடல்:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அரிராம் தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 40). இவர் முக்கூடல் - ஆலங்குளம் சாலையில் சிவகாமிபுரம் அருகே பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.
அரிவாள் வெட்டு
நேற்று முன்தினம் பங்குக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் பணம் கொடுக்காமல் பங்க் ஊழியரிடம் தகராறு செய்துள்ளனர். இந்நிலை யில் நேற்று 7 பேர் மோட்டார் சைக்கிளில் மீண்டும் பங்குக்கு வந்த அங்கிருந்த ஊழியர் சுபாசை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து ராஜன் பாப்பாக்குடி போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பங்க் ஊழியரை அரிவாளால் சீதபற்பநல்லூரை சேர்ந்த விஜய் (23), கருத்தபாண்டி (30), ரங்கசாமி (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
கடைகள் அடைப்பு
இந்நிலையில் முக்கூடலில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், போலீசார் மெத்தனமாக செயல்படுவதாகவும் கூறி போலீசாரை கண்டித்து இன்று முக்கூடலில் வியா பாரிகள் சங்கம் சார்பில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.
இதனால் முக்கூடல் பஜார் வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், முக்கூடலில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் போலீசார் மெத்தனமாக இருக்கின்றனர்.
குறிப்பாக ஆயுதங்களுடன் வரும் கும்பல் கடைகளில் தகராறு செய்வது அடிக்கடி நடக்கிறது. எனவே இப்பகுதி யில் கூடுதல் போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். வியாபாரிகளை தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- இன்று தக்காளி விலை ரூ.4 குறைந்து ரூ.120-க்கு உழவர் சந்தைகளில் விற்கப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை அதிகரித்து காணப்படுகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தாகவும், உள்ளூர் தக்காளி வரத்து முற்றிலுமாக நின்று விட்டதாகவும், அதன் காரணமாகவே விலை ஏற்றம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தக்காளி, சின்ன வெங்காயம் உள்பட காய்கறிகளின் விலை சற்று குறைந்த நிலையில், நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.140 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் உழவர் சந்தைகளில் ரூ.110 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று ரூ.12 அதிகரித்து ரூ.124-க்கு விற்பனையானது.
ஆனால் இன்று தக்காளி விலை ரூ.4 குறைந்து ரூ.120-க்கு உழவர் சந்தைகளில் விற்கப்பட்டது. அதேபோல் பாளை மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 முதல் ரூ.135 வரை விற்பனையானது. மேலும் மார்க்கெட்டில் இன்று காலை சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.150 வரையிலும், இஞ்சி ரூ.250-க்கும், பூண்டு ரூ.200 முதல் ரூ.240 வரைக்கும் விற்பனையானது. அதேபோல் மிளகாய் கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது. உருளை, பீட்ரூட், புடலங்காய் தலா ரூ.40-க்கு விற்பனையானது.தொடர்ந்து தக்காளி விலை உச்சத்தில் நீடிப்பதால் இல்லத்தர சிகள் புளியை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி பயன்பாடு அதிகரித்து, தக்காளி சட்னியின் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. அதே நேரத்தில் விலை உயர்ந்த உணவு ரகங்கள் விற்பனை செய்யப்ப டும் பெரிய ஓட்டல்களில் மட்டுமே தக்காளி சட்னியை பார்க்க முடிகிறது. சிறிய ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் தக்காளி சட்னி நிறுத்தப்பட்டு விட்டது.
- கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக ஒரு பெரிய வாரச்சந்தை இலங்குளம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் அமைப்பது என்ற தீர்மானிக்கப்பட்டது.
- குடிநீர் தேவைக்காக அவசரகால ஆழ்துளை கிணறுகள் அமைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை:
நாங்குநேரி யூனியன் சாதாரண கூட்டம் யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை சேர்மன் இசக்கி பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர குமார், ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆரோக்கிய எட்வின், ஸ்டீபன் ஜோசப் ராஜா, சங்கரலிங்கம், மீனா சுப்பையா, செந்தூர் பாண்டியன், முத்துலட்சுமி, லட்சுமி, கிறிஸ்டி, முருகேசன், ஜெபக்கனி செந்தில்ராஜ், செல்வ பிரேமா, செல்வி இலக்கண், அகஸ்டின் கீதாராஜ், பிரேமா எபினேசர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய பகுதிகளுக்கு தேவைப்படும் கோரிக்கைகளை குறித்து பேசினர்.
இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக ஒரு பெரிய வாரச்சந்தை இலங்குளம், தளபதி சமுத்திரம், சங்கனாங்குளம், இறைப்புவாரி, ராஜாக்கள்மங்கலம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் அமை ப்பது என்ற தீர்மானிக்கப்பட்டது.
மேலும் அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தேவையான இருக்கைகள் வாங்குவதற்கும், மழைக்கால வேலையாக தேவைப்படும் குளங்களில் புதியமடை, மறுகால் கட்டுவது, மதகுகளை சீரமைப்பது, தண்ணீர் செல்லும் கால்வாய்களை அகலப்படுத்துவது என்றும், 27 ஊராட்சிகளிலும் குடிநீர் தேவைக்காக அவசரகால ஆழ்துளை கிணறுகள் அமைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய பொறியாளர்கள் சபரிகாந்த், பாக்யராஜ், மீனாட்சி, ஒன்றிய மேலாளர் மலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உச்சிமாகாளி நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
- உச்சிமாகாளி திடீரென 10-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
நெல்லை:
பாளை குலவணிகர் புரத்தை சேர்ந்தவர் உச்சி மாகாளி(வயது 39). இவருக்கு வெங்கடேஷ்வரி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். உச்சிமாகாளி நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். மேலும் தென்மண்டல ஐ.ஜி. தலைமையில் இயங்கும் தனிப்படையிலும் இவர் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி வெங்கடேஷ்வரி தென்காசி மாவட்ட போலீசில் டெக்னிக்கல் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் 2 பேரும் தங்களது பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த உச்சிமாகாளி திடீரென 10-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
உடனே அவரை உறவினர்கள் மீட்டு வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே உச்சிமாகாளி மன அழுத்தத்தில் இருந்ததாகவும், யாரிடமும் பேசாமல் இருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை ஏதேனும் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- ஜோசப் ராஜஜெகன் வழக்கம் போல தனது அலுவலகத்திற்கு சென்றார்.
- அலுவலகத்தின் ஷட்டரை திறக்க முயன்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென ஜோசப் ராஜஜெகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்ப முயன்றனர்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் காமராஜர்நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ஜோசப் ராஜஜெகன் (வயது 46). இவர் வள்ளியூர் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் வள்ளியூர் மெயின் ரோட்டில் அலுவலகம் வைத்துள்ளார்.
இன்று காலை ஜோசப் ராஜஜெகன் வழக்கம் போல தனது அலுவலகத்திற்கு சென்றார். அவர் அலுவலகத்தின் ஷட்டரை திறக்க முயன்ற போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்ப முயன்றனர். அதில் ஒருவரை வக்கீல் பிடித்து கொண்டார். மற்றொருவரை அப்பகுதி பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்தனர். ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார்.
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வள்ளியூர் டி.எஸ்.பி. லோகேஷ்வரன், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்ஜோஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த வக்கீலை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மூன்றடைப்பு பகுதியை சேர்ந்த பிரவீன் ராஜா (22), கார்த்திக் (22) என்பதும் நெல்லையில் உள்ள கல்குவாரியில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தப்பி ஓடியவர் ஆனந்த ராஜ் (40) என்பதும் தெரியவந்தது. இவர்கள் எதற்காக ஜோசப் ராஜ ஜெகனை வெட்டினார்கள்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆனி தேரோட்டத்தின் போது நெல்லையப்பர் தேர் உள்பட 5 தேர்கள் வலம் வரும்.
- தேரோட்டத்தின் போது வாகையடிமுனை பகுதியில் தேர் திரும்புவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை சுற்றிலும் 4 ரத வீதிகள் அமைந்துள்ளது. இந்த ரதவீதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி தேரோட்டத்தின் போது நெல்லையப்பர் தேர் உள்பட 5 தேர்கள் வலம் வரும். இதுதவிர ஒவ்வொரு மாதத்திலும் விழாக்களின் போது சப்பரங்கள் வீதிஉலா வரும்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆனி தேரோட்டத்தின் போது வாகையடிமுனை பகுதியில் தேர் திரும்புவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் தெற்கு ரத வீதியில் வாகையடி முனையில் இருந்து சந்தி பிள்ளையார் முக்கு வரையிலும் ஆக்கிர மிப்புகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின்படி இன்று நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தெற்கு ரத வீதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள், கடை கூரைகள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
- மாணவர் பேரவை பதவியேற்பு விழாவிற்கு பள்ளி தாளாளர் தினேஷ் தலைமை தாங்கினார்.
- கல்வி வளர்ச்சி தினத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வள்ளியூர்:
கூடங்குளம் ஹார்வர்டு மெட்ரிக் மேல்நிலை மற்றும் இன்டர்நேஷனல் பள்ளிகளில் மாணவர் பேரவை பதவியேற்பு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் செல்வராணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஹார்வர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
கல்வி வளர்ச்சி தினத்தை முன்னிட்டு காமராஜர் பற்றிய சொற்பொழிவுகளும் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் முதல்வர் முருகேசன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர்கள் ஜெனி, டேனியல், சைலா மற்றும் சுந்தர் செய்திருந்தனர்.
- மூதாட்டியின் முகத்தில் தலையணையால் அமுக்கி, தாக்கி அவர் அணிந்திருந்த 25 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றனர்.
- கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.
நெல்லை:
நெல்லை டவுன் பெரியதெருவை சேர்ந்தவர் கோமதி (வயது 85). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் வீட்டில் படுத்து தூங்கினார்.
நேற்று நள்ளிரவு அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் முகத்தில் தலையணையால் அமுக்கி, தாக்கி அவர் அணிந்திருந்த 25 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






