search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி யூனியனில் 5 பஞ்சாயத்துகளில் வாரச்சந்தைகள்- யூனியன் கூட்டத்தில் தீர்மானம்
    X

    யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின் தலைமையில் கூட்டம் நடந்த காட்சி.

    நாங்குநேரி யூனியனில் 5 பஞ்சாயத்துகளில் வாரச்சந்தைகள்- யூனியன் கூட்டத்தில் தீர்மானம்

    • கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக ஒரு பெரிய வாரச்சந்தை இலங்குளம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் அமைப்பது என்ற தீர்மானிக்கப்பட்டது.
    • குடிநீர் தேவைக்காக அவசரகால ஆழ்துளை கிணறுகள் அமைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நாங்குநேரி யூனியன் சாதாரண கூட்டம் யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை சேர்மன் இசக்கி பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர குமார், ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆரோக்கிய எட்வின், ஸ்டீபன் ஜோசப் ராஜா, சங்கரலிங்கம், மீனா சுப்பையா, செந்தூர் பாண்டியன், முத்துலட்சுமி, லட்சுமி, கிறிஸ்டி, முருகேசன், ஜெபக்கனி செந்தில்ராஜ், செல்வ பிரேமா, செல்வி இலக்கண், அகஸ்டின் கீதாராஜ், பிரேமா எபினேசர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய பகுதிகளுக்கு தேவைப்படும் கோரிக்கைகளை குறித்து பேசினர்.

    இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக ஒரு பெரிய வாரச்சந்தை இலங்குளம், தளபதி சமுத்திரம், சங்கனாங்குளம், இறைப்புவாரி, ராஜாக்கள்மங்கலம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் அமை ப்பது என்ற தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தேவையான இருக்கைகள் வாங்குவதற்கும், மழைக்கால வேலையாக தேவைப்படும் குளங்களில் புதியமடை, மறுகால் கட்டுவது, மதகுகளை சீரமைப்பது, தண்ணீர் செல்லும் கால்வாய்களை அகலப்படுத்துவது என்றும், 27 ஊராட்சிகளிலும் குடிநீர் தேவைக்காக அவசரகால ஆழ்துளை கிணறுகள் அமைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய பொறியாளர்கள் சபரிகாந்த், பாக்யராஜ், மீனாட்சி, ஒன்றிய மேலாளர் மலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×