search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து நீர் திறப்பு- 18 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்

    • பாபநாசம் அணையில் 5,500 கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும்.
    • இன்று முதல் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    சிங்கை:

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையாக பாபநாசம் அணை விளங்குகிறது. இந்த அணை யில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேரடியாகவும், மறைமுக மாகவும் சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

    மொத்தம் 143 அடி கொள்ள ளவு கொண்ட இந்த அணையில் 5,500 கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையின்போது குறைந்தபட்சம் 60 அடி வரை அணையில் நீர்மட்டம் இருந்தால் பாசனத்திற்காக திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறிப்பிடத்தக்க அளவு பெய்யாவிட்டாலும், ஓரளவு பெய்த மழையின் காரணமாக இன்றைய நிலவரப்படி 70.90 அடியாக உள்ளது.

    இதையடுத்து அணையில் இருந்து ஜூன் 1-ந்தேதி முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தற்போது வரை திறக்கப்படாததால் விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இன்று முதல் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று காலை பாபநாசம் அணையில் இருந்து இன்று காலை பாசனத்திற்காக தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

    கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து தாமிரபரணி பாசனத்தில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய்கள், கன்னடியன் மற்றும் நதியுண்ணி கால்வாய்களில் நீரானது இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 18,090 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இந்த நீரானது இன்று தொடங்கி வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை மொத்தம் 105 நாட்களுக்கு திறக்கப்படுகிறது. கார் சாகுபடி, குடிநீர் தேவைக்கென மொத்தம் 3015 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், பொதுப்ப ணித்துறை செயற்பொ றியாளர் மாரியப்பன், தாமிரபரணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜன், பேச்சிமுத்து அவர்கள், வி.கே. புரம் நகராட்சி சேர்மன் செல்வ சுரேஷ் பெருமாள், அம்பாசமுத்திரம் நகராட்சி சேர்மன் பிரபாகர பாண்டியன், அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், களக்காடு நகர்மன்ற துணை தலைவர் பி.சி. ராஜன், மாவட்ட கவுன்சிலர்கள் சாலமோன் டேவிட், பாஸ்கர், அருண் தவசு பாண்டியன், உதவி பொறியாளர்கள் மகேஸ்வரன், ஜெயகணேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×