என் மலர்
நீங்கள் தேடியது "Shop Closing protest"
- மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் சுபாசை அரிவாளால் வெட்டினர்.
- ஆயுதங்களுடன் வரும் கும்பல் கடைகளில் தகராறு செய்வது அடிக்கடி நடக்கிறது.
முக்கூடல்:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அரிராம் தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 40). இவர் முக்கூடல் - ஆலங்குளம் சாலையில் சிவகாமிபுரம் அருகே பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.
அரிவாள் வெட்டு
நேற்று முன்தினம் பங்குக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் பணம் கொடுக்காமல் பங்க் ஊழியரிடம் தகராறு செய்துள்ளனர். இந்நிலை யில் நேற்று 7 பேர் மோட்டார் சைக்கிளில் மீண்டும் பங்குக்கு வந்த அங்கிருந்த ஊழியர் சுபாசை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து ராஜன் பாப்பாக்குடி போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பங்க் ஊழியரை அரிவாளால் சீதபற்பநல்லூரை சேர்ந்த விஜய் (23), கருத்தபாண்டி (30), ரங்கசாமி (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
கடைகள் அடைப்பு
இந்நிலையில் முக்கூடலில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், போலீசார் மெத்தனமாக செயல்படுவதாகவும் கூறி போலீசாரை கண்டித்து இன்று முக்கூடலில் வியா பாரிகள் சங்கம் சார்பில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.
இதனால் முக்கூடல் பஜார் வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், முக்கூடலில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் போலீசார் மெத்தனமாக இருக்கின்றனர்.
குறிப்பாக ஆயுதங்களுடன் வரும் கும்பல் கடைகளில் தகராறு செய்வது அடிக்கடி நடக்கிறது. எனவே இப்பகுதி யில் கூடுதல் போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். வியாபாரிகளை தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






