search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் தக்காளி, சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து உச்சம்
    X

    பாளை மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள காய்கறிகள்.

    நெல்லையில் தக்காளி, சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து உச்சம்

    • நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • இன்று தக்காளி விலை ரூ.4 குறைந்து ரூ.120-க்கு உழவர் சந்தைகளில் விற்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை அதிகரித்து காணப்படுகிறது.

    வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தாகவும், உள்ளூர் தக்காளி வரத்து முற்றிலுமாக நின்று விட்டதாகவும், அதன் காரணமாகவே விலை ஏற்றம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தக்காளி, சின்ன வெங்காயம் உள்பட காய்கறிகளின் விலை சற்று குறைந்த நிலையில், நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.140 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் உழவர் சந்தைகளில் ரூ.110 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று ரூ.12 அதிகரித்து ரூ.124-க்கு விற்பனையானது.

    ஆனால் இன்று தக்காளி விலை ரூ.4 குறைந்து ரூ.120-க்கு உழவர் சந்தைகளில் விற்கப்பட்டது. அதேபோல் பாளை மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 முதல் ரூ.135 வரை விற்பனையானது. மேலும் மார்க்கெட்டில் இன்று காலை சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.150 வரையிலும், இஞ்சி ரூ.250-க்கும், பூண்டு ரூ.200 முதல் ரூ.240 வரைக்கும் விற்பனையானது. அதேபோல் மிளகாய் கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது. உருளை, பீட்ரூட், புடலங்காய் தலா ரூ.40-க்கு விற்பனையானது.தொடர்ந்து தக்காளி விலை உச்சத்தில் நீடிப்பதால் இல்லத்தர சிகள் புளியை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி பயன்பாடு அதிகரித்து, தக்காளி சட்னியின் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. அதே நேரத்தில் விலை உயர்ந்த உணவு ரகங்கள் விற்பனை செய்யப்ப டும் பெரிய ஓட்டல்களில் மட்டுமே தக்காளி சட்னியை பார்க்க முடிகிறது. சிறிய ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் தக்காளி சட்னி நிறுத்தப்பட்டு விட்டது.

    Next Story
    ×