என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • சங்கரா மீன் கிலோ ரூ.200 முதல் 300-க்கு விற்பன செய்யப்பட்டது.
    • மீன்களின் வரத்து அதிகம் இருந்ததால் விலை குறைந்தது.

    தஞ்சாவூர்,

    தஞ்சை கொண்டிராஜபா ளையம் பகுதியில் தற்காலிக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இங்கு தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

    பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களில் மீன்கள் வாங்க அதிகளவில் கூட்டம் இருக்கும்.

    இந்த நிலையில் இன்று உள்ளூரில் பிடிக்கப்பட்ட உயிர் மீன்கள் மற்றும் நாகை, ராமேஸ்வரம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

    மீன்களின் வரத்து அதிகம் இருந்ததால் அவற்றின் விலையும் கணிசமாக குறைந்தது.

    சங்கரா மீன் கிலோ ரூ.200 முதல் 300-க்கு விற்பன செய்யப்பட்டது.

    இதேப்போல் இறால் கிலோ ரூ.250, நண்டு ரூ.250 முதல் 300-க்கும், கெண்டை மீன் ரூ.150, கிழங்கா ரூ.150-க்கு விற்பனையானது. மீன்களில் விலை குறைவாக இருந்ததால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது .

    காலையில் மழை பெய்தாலும் பொருட்படுத்தாமல் மக்கள் ஏராளமானோர் வந்து தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர்.

    இதனால் மீன் மார்க்கெட் பரபரப்பாக இயங்கியது.

    • சட்டப்பணிகளின் நோக்கமானது அனைவருக்கும் சமநீதி பெற வேண்டும்.
    • யாராக இருந்தாலும் அவர் தரப்பு நியாயத்தை சொல்வதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப் பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தா மார்டின் வழிகாட்டுதல்படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தஞ்சாவூர் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி இந்திராகாந்தி தலைமையில் தேசிய சட்டசேவைகள் தினத்தை முன்னிட்டு கல்லுரி மாணவர்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாமானது தஞ்சாவூர் பாரத் மற்றும் அறிவியல் கல்லுரியில் நடைபெற்றது.

    இம்முகாமில் சார்பு நீதிபதி இந்திரா காந்தி பேசியதாவது:-

    தேசிய சட்ட சேவைகள் தினம் என்பது தேசிய சட்ட சேவைகள் அதிகார சட்டம் அமலுக்கு வந்ததை நினைவு கூறும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சட்டப்பணிகளின் நோக்கமானது அனைவருக்கும் சமநீதி பெற வேண்டும். நாட்டில் உள்ள கடைக்கோடியில் இருப்பவருக்கும் சாமானிய மக்களும் கூட சமநீதி பெற வேண்டும் என்பதே இதன் குறிக்கோளாகும்.

    மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர் யாராக இருந்தாலும் அவர் தரப்பு நியாயத்தை சொல்வதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப் பட வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பபு சட்டத்தின் ஒரு சிறப்பம்சமாகும்.

    மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வழக்க றிஞர்கள் பாலகிருஷ்ணன் ,சக்திவேல் , கல்லூரி முதல்வர் குமார், பேராசியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இம்முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் நிர்வாக அலுவலர்ச ந்தோஷ்குமார் மற்றும் சட்டத்தன்னா ர்வலர்கள் செய்திருந்தனர்.

    • 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது.
    • மது போதையில் ஆற்றில் தவறி ஆற்றில் விழுந்தது தெரிய வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சுற்றுலா மாளிகை அருகே ஓடும் புது ஆற்றங்கரையோரம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஆனால் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் இறந்து கிடந்தவர் தஞ்சை வண்டிக்கார தெருவை சேர்ந்த மணவாளன் (வயது 45 ) என்பதும் , கோவையில் வெல்டராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் தீபாவளி பண்டிகைக்காக மணவாளன் தஞ்சாவூருக்கு வந்திருந்தார்.

    அப்போது படித்துறையில் இருந்து மது அருந்தி உள்ளார். போதை அதிகமாகவே தவறி ஆற்றில் விழுந்து மூழ்கி இறந்தது தெரியவந்தது.

    • மின்சாரம் தடைபட்டதால் இருளில் கொசுக்கடியால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்கள்‌.
    • தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூதலூர்:

    திருக்காட்டுபள்ளி நகரில் அதிகாலை 12.30 மணியில் இருந்து திடிர் என மின்சாரம் தடைபட்டது.

    தூறல் மழையும் குளிரிலும் தவித்த மக்கள் மின்சாரம் தடைபட்டதால் இருளில் கொசுக்கடியால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்கள்.

    மின்சாரம் எப்போது வரும் என்று தெரியாத நிலையில் திருக்காட்டுபள்ளி நகர மக்கள் விடிய விடிய அவதிப்பட்டனர்.

    5மணி நேர மின்சார தடைக்கு பிறகு காலை 6 மணியளவில் மீண்டும் மின்சாரம் கிடைத்தது.

    இரவு நேரங்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க உரியவாறு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 8 ஆண், 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் பிறந்துள்ளன.
    • தீபாவளி பண்டிகைகளில் குழந்தை பிறந்தது தங்களுக்கு பரிசாக திகழ்கிறது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் கோர்ட்டு அருகில், அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கும்பகோணம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    அதன்படி தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் அவசர சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.

    இந்த ஆஸ்பத்திரியில் தினமும் சுகபிரசவமாகவும், அறுவை சிகிச்சையின் மூலமும் ஏராளமான குழந்தைகள் பிறக்கின்றன.

    அதன்படி தீபாவளி பண்டிகை நாளில் 8 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் சுக பிரசவமாக 6 குழந்தைகளும், அறுவை சிகிச்சை மூலம் 6 குழந்தைகளும் பிறந்துள்ளன.

    குழந்தைகளும், தாய்மார்க ளும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

    குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள், தீபாவளி பண்டிகை பரிசாக தங்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • தஞ்சையில் பொதுக்கூட்டத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
    • பொதுக்கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி கடந்த மாதம் 4-ந்தேதி நடைபெற இருந்த கூட்டம் மழை காரணமாக நாளைமறுதினம் 16-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர் கன மழை பெய்யும் எனவும், தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி வருகின்ற 16-ந்தேதி புயல் சின்னமாக மாறும் என அறிவித்துள்ளது.

    எனவே பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் பெற்று 16-ந்தேதி நடைபெற இருந்த 52-ம்ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தஞ்சையில் நடந்த பூத்கமிட்டி கூட்டத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.

    • தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டது.
    • சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, கொரநாட்டுக் கருப்பூர் ஊராட்சி, கீழத் தெருவில் வசித்து வரும் கவிதா சேகர் மற்றும் ஞானமணி, அருள்தாஸ் ஆகியோரது குடிசை வீடுகள் தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டு, மிகவும் பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் நேரில் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கி, ஆறுதல் கூறினார். மேலும் அரசு நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்தார்.

    நிகழ்வில், கும்பகோணம் வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சுதா அம்பிகாபதி, துணைத் தலைவர் சரவணன், மாவட்ட திமுக பிரதிநிதி உதயம் கோவிந்த், ஒன்றிய அவைத்தலைவர் அபிராமிசுந்தரம் மற்றும் திமுக நிர்வாகிகள் பாஸ்கர், உலகநாதன், கருணாகரன், பழனிசாமி, சுரேஷ், பாலையா, ரமேஷ் உள்ளனர்.

    • காலை மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.
    • நவ.18-ஆம் தேதி சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் முருகனின் நான்காம் படை கோவில் அமைந்துள்ளது.

    கட்டுமலையால் ஆன இந்த தலம் நக்கீரரால் திருமுருகா ற்றுப்படையிலும், அருணகிரி நாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமாகும்.

    மேலும் பிரபவ முதல் அட்சய முடிய அறுபது தமிழ் வருட தேவதைகளும் இந்த கோயிலில் திருப்படிகளாக அமையப்பெற்று முருகனுக்கு சேவை செய்து வருகின்றன.

    இத்தகைய சிறப்புடைய சுவாமிநாத சுவாமிக்கு கந்தசஷ்டி விழா நேற்று திங்கள்கிழமை காலை தொடங்கியது.

    இதில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து படி இறங்கி உற்சவ மண்ட பத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு மலர் அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து விழா நாள்களில் காலை மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான நவ.18-ஆம் தேதி சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேகமும், அன்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள், உபயதாரர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 1 வாரமாகவே விட்டு விட்டு மழை பெய்து வந்தது.
    • கனமழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் கனமழை கொட்டியது. பின்னர் நள்ளிரவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் லேசாக பொழிந்த மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறியது. விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. தஞ்சை, வல்லம், திருவையாறு, ஒரத்தநாடு, நெய்வாசல் தென்பாதி, கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை, மஞ்சலாறு, கீழணை, மதுக்கூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் கனமழை கொட்டியது. இன்று காலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    தொடர் மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் தஞ்சை சீனிவாசபுரம் ராஜராஜசோழன் நகரில் உதிய மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், பேரளம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டியது. இன்று காலையில் இருந்து மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி உள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    பலத்த காற்றுடன் பெய்த மழையால் தஞ்சை சீனிவாசபுரம் ராஜராஜ சோழன் நகரில் உதிய மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்து  கிடப்பதை காணலாம்.

    பலத்த காற்றுடன் பெய்த மழையால் தஞ்சை சீனிவாசபுரம் ராஜராஜ சோழன் நகரில் உதிய மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்து கிடப்பதை காணலாம்.

    மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 1 வாரமாகவே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நேற்றில் இருந்து கனமழை கொட்டி வருகிறது. இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலை வரை தொடர்ந்து இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இடையில் சிறிது நேரம் மட்டுமே வெறித்த மழை மீண்டும் பெய்ய தொடங்கின. பகல் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில், கொள்ளிடம், திருமுல்லைவாசல் உள்பட மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கனமழை கொட்டியது.

    தொடர் மழை காரணமாக பழையார் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 6000 மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளை மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதேப்போல் பூம்புகார், வானகிரி பகுதி மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.

    தமிழகத்திலேயே அதிக கனமழை பொழியும் சில மாவட்டங்களில் நாகை மாவட்டமும் ஒன்று. தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையால் நாகை மாவட்டத்தில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகை, கீழ்வேளூர், திருப்பூண்டி, வேதாரண்யம், நாகூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் பெய்யும் கனமழையால் வெள்ளக்காடாக மாறின. பல வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கின. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். தொடர்ந்து பகல் முழுவதும் பெய்த மழை இன்று இரவும் நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    கனமழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் மழை பெய்வதால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் வெயில் அடிக்கும்போது தான் உப்பு உற்பத்தி தொடங்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்யும் மழை சம்பா சாகுபடி உகந்ததாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஏரி, குளம், குட்டைகளும் வேகமாக நிரம்பி வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    கனமழையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் ஒரே நாளில் 1993 மி.மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு (மி.மீ) :-

    வேளாங்கண்ணி-135.10, வேதாரண்யம்-112.6, நாகை-111.20, கோடியக்காடு-103.2, திருப்பூண்டி-101.60, மயிலாடுதுறை-84.1, பொறையாறு-77.1, திருவாரூர்-74, சீர்காழி-73.2, நன்னிலம்-66, கொள்ளிடம்-63.8, கீழணை-58.50, மன்னார்குடி-50, மஞ்சளாறு-35.60, நெய்வாசல் தென்பாதி-32, கும்பகோணம்-31, தஞ்சாவூர்-26.30.

    • டிரோன்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி பறந்தது இது 3-வது முறையாகும்.
    • ஒரு டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது ஆகும்.

    பெரோஸ்பூர்:

    பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் திண்டிவாலா கிராம பகுதியில் இந்திய எல்லைக்குள் ஆளில்லா டிரோன் பறந்தது. இதை பார்த்த எல்லைப்பாதுகாப்பு படைவீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தி செயல் இழக்க செய்தனர்.

    விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து போதை பொருட்கள் கடத்தல் கும்பல் இந்த டிரோனை அனுப்பி வைத்திருந்தது தெரியவந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டிரோன்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி பறந்தது இது 3-வது முறையாகும். இதில் ஒரு டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது ஆகும்.

    • தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் டன் கணக்கில் பட்டாசுக் கழிவுகள் குவிந்துள்ளன.
    • தஞ்சை மாநகராட்சியில் மட்டும் இன்று 120 டன் குப்பைகள் குவிந்து இருந்தன.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சா கமாக கொண்டாடப்பட்டது.

    மக்கள் புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துகளை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர்.

    தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் டன் கணக்கில் பட்டாசுக் கழிவுகள் குவிந்துள்ளன.

    அதனை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி தஞ்சை மாநகராட்சியில் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.

    தஞ்சை மாநகராட்சியை பொறுத்தவரை வழக்கமாக நாளொன்றிற்கு சுமார் 100 முதல் 120 டன் குப்பை வரும். 51 வார்டுகளிலும் சேகரிக்கக் கூடிய குப்பை ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் சேர்க்கப்பட்டு தரம் பிரிக்கப்படும். கடந்த சில நாட்களாக தீபாவளி விற்பனை மாநகரம் முழுவதும் நடைபெற்றது.

    தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடித்தது மற்றும் துணிமணிகள் விற்பனை பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வழக்கமாக சேகரமாகும் குப்பைகள் என தஞ்சை மாநகராட்சியில் மட்டும் இன்று 120 டன் குப்பைகள் குவிந்து இருந்தன.

    இதில் பட்டாசு கழிவுகள் மட்டும் சுமார் 20 டன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் 600 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் பட்டாசுக் கழிவுகளை சேகரிக்க ஏற்பாடு மேற்கொள்ள ப்பட்டது.

    கழிவுகளை கொண்டு செல்வதற்காக 40 கனரக வாகனங்கள் பயன்ப டுத்தப்பட்டன.

    • ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு சென்ற டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., தீபாவளி கொண்டாடினார்.
    • அனைவருக்கும், புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி அவர்களுடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தார்.

    தஞ்சாவூர்:

    தீபாவளி திருநாளில் ஆதரவற்றோர், முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை மங்களபுரத்தில் உள்ள அதுல்லாம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு சென்ற டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., அங்குள்ள அனைவருக்கும், புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி அவர்களுடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தார்.

    முதியவர்கள், சிறுவர்களைப் போல் மத்தாப்புகளை கொளுத்தி உற்சாகமடைந்தனர்.

    குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களுக்கு , எம்.எல்.ஏ.வுடன் இணைந்து தீபாவளி கொண்டாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க பகுதி செயலாளர்கள் நீலகண்டன் (கீழவாசல்), சதாசிவம் (மருத்துவ கல்லூரி), மண்டல குழு தலைவர் கலையரசன், கவுன்சிலர்கள் ஆனந்த், அண்ணா.பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×