கழிவறையில் வழுக்கி விழுந்த கொத்தனார் சாவு

கழிவறைக்கு சென்றபோது தவறி வழுக்கி விழுந்தார். புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கழிவறையில் வழுக்கி விழுந்த கொத்தனார் சாவு
Published on

மதுக்கூர்:

மதுக்கூர் அருகே விக்ரமம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 51) கொத்தனார். சம்பவத்தன்று சுப்ரமணியன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் கழிவறைக்கு சென்றபோது தவறி வழுக்கி விழுந்தார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுப்ரமணியன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com