search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
    X

    முகாமை கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    தஞ்சையில், தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

    • கருப்பை, வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.
    • முடக்கத்தான் அடை மற்றும் தினை லட்டு போன்றவை வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை , பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்துத்துறை இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு இன்று மருத்துவ முகாமை நடத்தியது. புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் கருணாநிதி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இம்முகாமினை கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இம்முகாமில் தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பன்னோக்கு உயர்தர மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருதய மருத்துவம், நுரையீரல் , காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பிரிவுகளும், ஹூமோகிளோபின், இரத்த வகை கண்டறிதல், சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு, இ.சி.ஜி. ஸ்கேன், கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மருத்துவ குழுவினரால் 250 தூய்மை பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு ஆசோசனைகள் வழங்கப்பட்டது. இதில் 43 தூய்மை பணியாளர்கள் மருத்துவர்களால் மேற்பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதனைதொடர்ந்து இயற்கை யோக தினமான இன்று ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யாபழம், வாழைப்பழம், நெல்லிக்காய், ஊட்டச்சத்து பொடி, உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரி உள்ளிட்டவை அடங்கிய "நலவாழ்வு பைகள்" முகாமில் பங்கேற்ற தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் நிலவேம்பு குடிநீர், மூலிகை தேநீர், பானகம், சிவப்பு அவுல், முளைகட்டிய பயிர் வகைகள், முடக்கத்தான் அடை மற்றும் தினை லட்டு போன்றவை வழங்கப்பட்டது.

    மேலும் கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் தமிழ்நாடு அளவில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றமைக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், மருத்துவர் முத்துகுமாருக்கு சுழற்கேடயத்தை வழங்கினார். கரந்தை, மகர்நோம்புசாவடி, சீனிவாசபுரம் சிறப்பிடம் பெற்றதற்காகவும் மருத்துவ குழுவினருக்கு பாரா ட்டுகளை தெரிவித்தார்.

    இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாநகராட்சி மாநகர்நல அலுவலர் டாக்டர். சுபாஷ் காந்தி தலைமையிலான மருத்துவர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×