என் மலர்
சிவகங்கை
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை ராமசந்திர பூங்கா கோர்ட் வாசல் அருகே அமைப்புச் செயலாளரும் மாவட்ட செயலாளருமான கே.கே.உமாதேவன் தலைமையிலும் நகர் செயலாளர் அன்புமணி முன்னிலையிலும் மே தினவிழா பொதுகூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பரமநாதன், செய்தி தொடர்பாளர் இளந்தமிழ் ஆர்வலன், தலைமை பேச்சாளர் காஞ்சி பாஸ்கரன், இளைஞர் இளம்பெண் பாசறை இணை செயலாளர் அந்தோணிராஜ், இளைஞரணி இணைச் செயலாளர் இறகுசேரி முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தேர்போகி பாண்டி ஆகியோர் சிறப்புரையாற்றினர்
இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் சக்தி, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் அண்ணாமலை, தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி. முத்து, வடக்கு ஒன்றிய செயலாளர் மந்தக்காளை, விவசாய பிரிவு இணை செயலாளர் அர்ச்சுணன், தொகுதி செயலாளர் மகேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் குருமுருகானந்தம், சரஸ்வதி கணேசன், கங்கைசக்தி, மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் கார்த்திகைசாமி, சக்தி முருகன், ஆட்டோ பாலா, துரைபிரபு, விஜி, மற்றும் மாவட்ட நகர, ஓன்றிய உள்ளிட்ட ஏராளமான நிர்வகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வசந்த நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். நிதி நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு தமிழகம் முழுவதும் 81 கிளைகள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதி கண்ணன்- சுகன்யா ஆகியோரிடம் தனது நிறுவனத்தில் மேலாளர், மண்டல மேலாளர் பதவி தருவதாக ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அதற்கு பணம் தேவைப்படும் என்று தெரிவிக்கவே, கண்ணன்-சுகன்யா பல தவணைகளில் ரூ. 10 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மாதங்கள் பல ஆகியும் ராதாகிருஷ்ணன் வேலை தரவிலலை. இதுகுறித்து பல முறை கேட்டபோதும் உரிய பதில் கிடைக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கணவன் - மனைவி இருவரும் நேற்று காளையார் கோவிலுக்கு வந்து ராதாகிருஷ்ணனிடம் பணத்தை தருமாறு கேட் டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கண்ணன்-சுகன்யாவை ராதாகிருஷ்ணன் தரப்பினர் தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்த சுகன்யா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வேலை தருவதாக 50-க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.#tamilnews
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சின்னக்கோடக்கொடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது45).
இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், அறிவழகன் (17) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். அறிவழகன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
மலேசியாவில் வேலை பார்த்த சேகர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
இங்கு வந்தது முதல் உமா மகேஸ்வரிக்கும், அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட் டது. நேற்று இரவும் சேகர் - உமாமகேஸ்வரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் சேகர் கட்டிலில் படுத்துவிட்டார்.
இந்த நிலையில் இரவு 11 மணி அளவில் தூக்கத்தில் இருந்து எழுந்த அறிவழகன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கட்டிலில் படுத்து இருந்த தந்தையை கழுத்தில் வெட்டினார். இதில் சேகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
தகவல் கிடைத்ததும் தேவகோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாயுடன் தகராறு செய்ததால் தந்தையை கொலை செய்த அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.
பெற்ற மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் தேவகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தலைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர், அதே பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (30) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கடந்த சில மாதங்களாக முத்துலட்சுமியிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு பத்மநாபன் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்தன்றும் 2 பேருக்கும் தகராறு ஏற்பட ஆத்திரம் அடைந்த பத்மநாபன் மனிதாபமானமின்றி மனைவி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். உடல் கருகிய அவர் வலியால் அலறித்துடித்தார்.
உடனே அக்கம், பக்கத்தினர் முத்துலட்சுமியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 60 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு முத்துலட்சுமியிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
பெண்ணை கொலை செய்ததாக பத்மநாபன் மீது திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 37). மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளரான இவர், வீட்டிலேயே முட வைத்திய சாலை நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ்கரன் தனது நண்பர்களுடன் ரிஷிகேஷ் சென்று விட்டார். நேற்று இரவு வீட்டில் அவர் மனைவி தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் வீட்டு வாசலில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பெட்ரோல் குண்டுகள் வெடித்து கதவு சேதமடைந்தது. மேலும் அங்கு இருந்த துணிகளும் எரிந்தது. சத்தம் கேட்டு எழுந்த பாஸ்கரனின் மனைவி வெளியே வந்து பார்த்தபோது பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பாஸ்கரனின் சகோதரர் பிரபாகரன் குன்றக்குடி போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#petrolbomb #rss
மானாமதுரை:
மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் ஆனந்த வல்லி சோமநாதசுவாமி மற்றும் வீரஅழகர் கோவில்கள் உள்ளன.
மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவது போல் மானாமதுரையில் உள்ள இரு கோவில்களிலும் 10 நாட்கள் விழா நடைபெறும். ஆனந்தவல்லி கோவிலின் சித்திரை திருவிழாவின் கடைசி நாளில் தேரோட்டம் நடந்தது.
அதைத்தொடர்ந்து சந்தன காப்பு உற்சவம் நடந்தது. கொடி இறக்கத்துடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விழா நிறைவு பெறுகிறது.
வீரஅழகர்கோவிலில் கடந்த 26-ந்தேதி சுந்தரராஜப் பெருமாளுக்கு காப்பு கட்டு தலுடன் சித்திரை திருவிழா தொடங்கியது. தினமும் சுந்தரராஜப்பெருமாள்கருடன், யானை, அனுமன் வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
இன்று (29-ந்தேதி) இரவு 10 மணிக்கு வைகை ஆற்றில் எதிர்சேவை நடை பெறுகிறது. இதில் சுந்தர ராஜப்பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல் லக்கில் எழுந்தருளுகிறார்.
நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு மானாமதுரையில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் ஆனந்தவல்லி சோமநாதசுவாமி கோவில் எதிரே உள்ள வைகை ஆற்றில் வீரஅழகர் இறங்குகிறார்.
1-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 4 மணிக்கு சேஷ வாகனத்தில் சென்று மானாமதுரை கிராமத்தார்கள் நிலாச்சோறு நிகழ்ச்சியில் எழுந்தருளு கிறார்.
வீரஅழகர் கோவிலில் வருகிற 5-ந்தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது35), கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக இளையான்குடி அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த பூமிநாதன் (37) என்பவருடன் சேர்ந்து நுங்கு வியாபாரத்தில் ஈடுபட்டார்.
சிவகங்கை வாரச்சந்தை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு முத்துப்பாண்டி நின்றபோது, பூமிநாதன் வந்தார். அவர் ஏதோ கேட்க 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாற ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
பூமிநாதன் தனது இடுப்பில் சொருகியிருந்த அரிவாளை எடுத்து முத்துப்பாண்டியை வெட்டினார். அப்படியும் ஆத்திரம் அடங்காத அவர், முத்துப்பாண்டி தலையை தனியாக துண்டித்து ரத்தம் சொட்ட... சொட்ட... எடுத்து சென்றார்.
சுமார் 100 மீட்டர் தூரம் சென்றதும் அங்கு முத்துப் பாண்டி தலையையும், அரிவாள் மற்றும் தான் வைத்திருந்த கூடையையும் சாலையில் வைத்து விட்டு நடந்தார்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை பதட்டத்தை ஏற்படுத்தியது. அந்த வழியே சென்றவர்கள் அலறியடித்து ஓடினர். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து பூமிநாதனை கைது செய்தனர்.
முத்துப்பாண்டி தலை மற்றும் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வியாபார பணம் தொடர்பான முன் விரோதத்தில் கொலை நடந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கு உமா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
கொலை நடந்த இடம் முன்பு டாஸ்மாக் கடை உள்து. இந்த கடையை அகற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கடையால் தினமும் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இனியாவது டாஸ்மாக் கடை அகற்றப்படும? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
திருப்பவனத்தை சுற்றிலும் வைகை ஆற்று பகுதியில் தொடர் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் லாரிகளில் மணல் அள்ளப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. சில இடங்களில் மாட்டு வண்டிகளில் அள்ளி வந்து தனிநபருக்கு சொந்தமான தோட்டங்களில் கொட்டி வைத்து அதன் பின்னர் லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர். திருப்புவனம் நகர் பகுதியில் அதிகாலை முதல் 9 மணி வரை இரு சக்கர வாகனங்களில் ஒரு நடைக்கு 10-ல் இருந்து 20 சாக்குகள் வீதம் அடுக்கி மெயின் சாலையிலேயே மணலை கடத்தி வருகின்றனர்.
சில இடங்களில் பெண்கள் சாக்குகளில் அள்ளி தலைச்சுமையாக கொண்டு செல்கின்றனர். திருப்புவனத்தில் உள்ள வைகை மேம்பாலம் அருகே மதுரை, திருப்புவனம், அருப்புக்கோட்டை ஆகிய குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வைகையாற்றின் கீழ்பகுதியில் திருப்புவனம் புதூர், மடப்புரம் மற்ற கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தொடரும் மணல் கடத்தலால் குடிநீர் திட்டங்களில் நீர் ஆதாரம் குறைந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
வைகையாற்றின் கரையோரங்களில் 20ஆண்டிற்கு முன்பு குடிநீர் ஆதாரம் நல்ல முறையில் இருந்து வந்தது. தற்சமயம் கடும் வெயில் காரணமாகவும், இந்த பகுதியில் நடைபெறும் மணல் திருட்டாலும் நீர் மட்டம் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. வைகையாற்று கரையோரம் முன்பு தென்னந்தோப்பு அதிகமாக இருந்து வந்தது. ஒவ்வொரு தோப்பிலும் 300முதல் 500வரை தென்னமரங்கள் இருந்தது. அப்போது நல்ல பயிர் விளைச்சல் இருந்து வந்தது. தென்னை விவசாயிகள் அதிக தேங்காய்களை வெட்டி நல்ல வருமானத்தை பெற்றனர்.
ஆனால் இன்று தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தென்னை விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் குறைவாக உள்ள தென்னமரங்களில் போதிய விளைச்சல் இல்லை. தற்போது உள்ள கடுமையான வெயிலால் சில மரங்கள் கருகி வருகின்றன. முன்பு 3 மணி முதல் 4 மணி வரை தண்ணீர் பாய்ச்சிய இடத்தில் தற்போது 20 மணி நேரம் வரை பாய்ச்சும் நிலை உள்ளது. வைகையாற்றில் நடைபெறும் இந்த மணல் திருட்டால் சில இடங்களில் பெரிய, பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன. இந்த பள்ளங்களில் இரவு நேரத்தில் திருடர்கள் பதுங்குவதற்கு மிகவும் வசதியாகவும் உள்ளது.
இப்பகுதியில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்றால் வைகையாற்றில் செயல்பட்டு வரும் பல குடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் வரும். எனவே சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் இந்த மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திருப்புவனம் பகுதியில் உள்ள குடிநீர் திட்டங்கள் தப்பிக்கும். மாறாக தற்போது வெயில் கடுமையாக அடித்து வருவதால் திருப்புவனம் வைகை ஆற்று பகுதி பாலைவனமாக மாறும் நிலை உள்ளது.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் செழியன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர். இவருக்கு சொந்தமான செங்கல் சூளை காரையூர்- திருவுடையார்பட்டி சாலையில் உள்ளது.
இந்த சூளையில் 4 கூடாரம் வைக்கப்பட்டுள்ளது. ஒரு கூடாரத்தில் பச்சை செங்கல் மற்றும் 2 டிராக்டர்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
நேற்று இரவு எதிர்பாராத விதமாக செங்கல் சூளையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தங்கியிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைக்க முயன்றனர்.
திருப்பத்தூர் தீயணைப் புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் ஒரு கூடாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் எரிந்து நாசமானது. திருப்பத்தூர் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
செங்கல் சூளையில் தீ விபத்து தானாக நிகழ்ந்ததா? அல்லது வேறு யாராவது தீ வைத்துச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள விரகனூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகள் ஆர்த்தி. சம்பவத்தன்று வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
இதனால் பதட்டமடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுரேஷ்குமார் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் திருவானந்தம் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகிறார்.
திருப்புவனம்அருகே உள்ள பூவந்தி சரகத்துக்குட்பட்ட அதிகரை கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதன். இவரது மகள் முத்து இருளாயி (வயது 25). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற முத்து இருளாயி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காண வில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்.






