என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
வேலை வாங்கி தருவதாக ரூ. 50 லட்சம் மோசடி- நிதி நிறுவன அதிபர் கைது
By
மாலை மலர்2 May 2018 7:45 AM GMT

சிவகங்கையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக நிதி நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வசந்த நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். நிதி நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு தமிழகம் முழுவதும் 81 கிளைகள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதி கண்ணன்- சுகன்யா ஆகியோரிடம் தனது நிறுவனத்தில் மேலாளர், மண்டல மேலாளர் பதவி தருவதாக ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அதற்கு பணம் தேவைப்படும் என்று தெரிவிக்கவே, கண்ணன்-சுகன்யா பல தவணைகளில் ரூ. 10 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மாதங்கள் பல ஆகியும் ராதாகிருஷ்ணன் வேலை தரவிலலை. இதுகுறித்து பல முறை கேட்டபோதும் உரிய பதில் கிடைக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கணவன் - மனைவி இருவரும் நேற்று காளையார் கோவிலுக்கு வந்து ராதாகிருஷ்ணனிடம் பணத்தை தருமாறு கேட் டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கண்ணன்-சுகன்யாவை ராதாகிருஷ்ணன் தரப்பினர் தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்த சுகன்யா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வேலை தருவதாக 50-க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.#tamilnews

Next Story
×