என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
    X

    காரைக்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

    காரைக்குடி அருகே சித்திவயலில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே சாக்கோட்டையை அடுத்த சித்திவயலில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. சித்திவயல்-சாக்கோட்டை சாலையில் நடைபெற்ற பந்தயத்தில் மொத்தம் 29 வண்டிகள் கலந்துகொண்டன. பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.

    முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 8 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை காரைக்குடி அழகுதேவி வண்டியும், 2-வது பரிசை சாக்கோட்டை கோதையம்மாள் வண்டியும், 3-வது பரிசை காரைக்குடி கருப்பணன் சேர்வை வண்டியும் பெற்றது.

    பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 21 வண்டிகள் கலந்து கொண்டன. சின்ன மாட்டு வண்டி மேலும் 2 பிரிவுகளாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை பொய்யாதநல்லூர் அப்பாஸ் வண்டியும், 2-வது பரிசை வெளிமுத்தி சூரியாபவுன்ராஜ் வண்டியும், 3-வது பரிசை கே.புதுப்பட்டி கரைமேல் அய்யனார் வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை பொய்கைவயல் முத்துக்கருப்பர் வண்டியும், 2-வது பரிசை தேவகோட்டை சரவணன் செட்டியார் வண்டியும், 3-வது பரிசை நற்கனியேந்தல் சுரேஷ் மற்றும் மித்திரங்குடி சுப்பையா வண்டியும் பெற்றது. வெற்றிபெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    Next Story
    ×