என் மலர்
செய்திகள்

நாளை காலை 6 மணிக்கு மானாமதுரை வைகை ஆற்றில் வீரஅழகர் இறங்குகிறார்
மானாமதுரை:
மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் ஆனந்த வல்லி சோமநாதசுவாமி மற்றும் வீரஅழகர் கோவில்கள் உள்ளன.
மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவது போல் மானாமதுரையில் உள்ள இரு கோவில்களிலும் 10 நாட்கள் விழா நடைபெறும். ஆனந்தவல்லி கோவிலின் சித்திரை திருவிழாவின் கடைசி நாளில் தேரோட்டம் நடந்தது.
அதைத்தொடர்ந்து சந்தன காப்பு உற்சவம் நடந்தது. கொடி இறக்கத்துடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விழா நிறைவு பெறுகிறது.
வீரஅழகர்கோவிலில் கடந்த 26-ந்தேதி சுந்தரராஜப் பெருமாளுக்கு காப்பு கட்டு தலுடன் சித்திரை திருவிழா தொடங்கியது. தினமும் சுந்தரராஜப்பெருமாள்கருடன், யானை, அனுமன் வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
இன்று (29-ந்தேதி) இரவு 10 மணிக்கு வைகை ஆற்றில் எதிர்சேவை நடை பெறுகிறது. இதில் சுந்தர ராஜப்பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல் லக்கில் எழுந்தருளுகிறார்.
நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு மானாமதுரையில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் ஆனந்தவல்லி சோமநாதசுவாமி கோவில் எதிரே உள்ள வைகை ஆற்றில் வீரஅழகர் இறங்குகிறார்.
1-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 4 மணிக்கு சேஷ வாகனத்தில் சென்று மானாமதுரை கிராமத்தார்கள் நிலாச்சோறு நிகழ்ச்சியில் எழுந்தருளு கிறார்.
வீரஅழகர் கோவிலில் வருகிற 5-ந்தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






