என் மலர்
செய்திகள்

திருப்பத்தூர் அருகே செங்கல் சூளையில் தீ விபத்து
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் செழியன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர். இவருக்கு சொந்தமான செங்கல் சூளை காரையூர்- திருவுடையார்பட்டி சாலையில் உள்ளது.
இந்த சூளையில் 4 கூடாரம் வைக்கப்பட்டுள்ளது. ஒரு கூடாரத்தில் பச்சை செங்கல் மற்றும் 2 டிராக்டர்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
நேற்று இரவு எதிர்பாராத விதமாக செங்கல் சூளையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தங்கியிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைக்க முயன்றனர்.
திருப்பத்தூர் தீயணைப் புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் ஒரு கூடாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் எரிந்து நாசமானது. திருப்பத்தூர் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
செங்கல் சூளையில் தீ விபத்து தானாக நிகழ்ந்ததா? அல்லது வேறு யாராவது தீ வைத்துச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






