என் மலர்
சேலம்
- சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது.
- பொங்கல் பண்டிகை இரு நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து தேவை குறைந்து, பூக்கள் விலை குறைந்து வருகிறது.
அன்னதானப்பட்டி:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பொங்கல் பண்டிகை இரு நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து தேவை குறைந்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்து வருகிறது.
சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய (20. 1.23) பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) : மல்லிகை - ரூ.1600, முல்லை - ரூ.1600, ஜாதி மல்லி - ரூ.1200, காக்கட்டான் - ரூ.600, கலர் காக்கட்டான் - ரூ.600, மலை காக்கட்டான் - ரூ.500, சி.நந்தியா வட்டம் - ரூ.90, சம்பங்கி - ரூ.100, சாதா சம்பங்கி - ரூ.100, அரளி - ரூ.200, வெள்ளை அரளி - ரூ.200, மஞ்சள் அரளி - ரூ.200, செவ்வரளி - ரூ.220, ஐ.செவ்வரளி - ரூ.220, நந்தியா வட்டம் - ரூ.90, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
- இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் வீட்டில் இருந்த லட்சுமி திடீரென மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). தொழிலாளி . இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
லட்சுமியின் தாயார் இறந்ததை அடுத்து அவரது தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டு 2-வது மனைவியுடன் வசித்து வருகிறார். இதனால் லட்சுமியின் தங்கை தனியாக வசித்து வந்தார்.
இதையடுத்து லட்சுமி தனது தங்கை மகேஸ்வரியை (22) தனது கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு தங்கியிருந்தார். சதீஷ்குமார் லட்சுமியின் தங்கை மகேஸ்வரியை விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார். தங்கையை பிரிய மனம் இல்லாத லட்சுமிக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் வீட்டில் இருந்த லட்சுமி திடீரென மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்
கொண்டார். தீயின் தாக்கத்தால் அலறி துடித்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் லட்சுமி சிகிச்சை சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வருகிற 31- ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை அனுமதியின்றி பொதுக் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- 5 நாட்களுக்கு முன்னரே போலீஸ் கமிஷனர் அவர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே கூட்டம் நடத்த வேண்டும்.
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வருகிற 31- ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை அனுமதியின்றி பொதுக் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக் கூட்டம் உள்ளிட்டவை நடத்த விரும்புவோர் முறையாக 5 நாட்களுக்கு முன்னரே போலீஸ் கமிஷனர் அவர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே கூட்டம் நடத்த வேண்டும்.
திருமணம், இறுதிச்சடங்குகள் உள்ளிட்ட இன்றியமையாத நிகழ்ச்சிகளுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படும் என்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோட்டை ஹபீப் தெருவில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டு அப்சரா சாலையில் மாற்று இடம் வழங்கப்பட்டது. மாற்று இடத்தில் மாநகராட்சி அனுமதியுடன் 41 கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- இதையடுத்து அனுமதி இன்றி வைக்கப்பட்ட 6 கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.
சேலம்:
சேலம் மாநகராட்சி உத்தரவின்பேரில் கோட்டை ஹபீப் தெருவில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டு அப்சரா சாலையில் மாற்று இடம் வழங்கப்பட்டது. மாற்று இடத்தில் மாநகராட்சி அனுமதியுடன் 41 கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே இடத்தில் அனுமதியின்றி சிலர் கடைகள் அமைத்தனர். அனுமதியின்றி அமைக்கப்பட்ட கடைகள் காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
41 கடைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு இருப்பதாக வியாபாரிகள் குற்றசாட்டினர். எந்த அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்பட்டன என்பது குறித்து வியாபாரிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மாமன்ற கூட்டம் ஒப்புதல் படியே கடைகள் ஒதுக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து அனுமதி இன்றி வைக்கப்பட்ட 6 கடைகளை அதிகாரிகள் அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சேலம் அம்மாபேட்டை புட்டா நாயக்கர் தெருவில் அண்ணன், தம்பி மீது 4 பேர் சரமாரியாக தாக்கினர்.
- போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை புட்டா நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த். இவர் நேற்று இரவு வீட்டுக்கு செல்வதற்காக புட்டாநாயக்க தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் ஆனந்த் வழி பாதையை விட்டு ஓரமாக நின்று பேசுங்கள் என கூறினார். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த 4 பேர் ஆனந்தை சரமாரியாக தாக்கினர்.
இதை அறிந்த ஆனந்தின் சகோதரர்கள் கார்த்திக் மற்றும் முரளி இருவரும் வந்தனர். எதிர் தரப்பை சேர்ந்த 4 வாலிபர்களின் நண்பர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் கார்த்திக் முரளியை பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.
பலத்த காயம் அடைந்த கார்த்தி மற்றும் முரளி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே வாலிபர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு நிலவியது. அந்த காட்சிகளை வைத்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
- புதிய பஸ் நிலைம் அருகில் வந்தபோது அருகில் இருந்த ஒரு வாலிபர், சந்தோஷ் பாக்கெட்டில் இருந்த ரூ.10000 -ம் மதிப்புள்ள செல்போனை லாவகமாக திருடினார்.
- இதைக்கண்ட சந்தோஷ், சக பயணிக ளின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சேலம்:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அப்பு முதலி காலனி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 32). இவர் தனது ஊரில் ஹார்ட்வேர் கடை வைத்து நடத்தி வருகிறார். சந்தோஷ் நேற்று கடை வேலை விஷயமாக சேலத்திற்கு வந்தார். அவர், பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.
பஸ், புதிய பஸ் நிலைம் அருகில் வந்தபோது அருகில் இருந்த ஒரு வாலிபர், சந்தோஷ் பாக்கெட்டில் இருந்த ரூ.10000 -ம் மதிப்புள்ள செல்போனை லாவகமாக திருடினார். இதைக்கண்ட சந்தோஷ், சக பயணிக ளின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். விசாரணை
யில், அந்த வாலிபர் ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ஜங்கல் காலனி பகுதியை சேர்ந்த அப்பாசாமி மகன் தருண் (20) என்பது தெரியவந்தது.
மற்றோரு சம்பவம்
இதேபோல் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி பகுதியைச் சேர்ந்த சேட்டு (33) என்பவர் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏறினார். புதிய பஸ் நிலையத்தில் இருந்து நுழைவு வாயில் வழியாக பஸ் வெளியே வரும் சமயத்தில் இவரது அருகில் இருந்த 2 சிறுவர்கள், சேட்டு பாக்கெட்டில் இருந்து செல்போனை திருடினார்கள். இதைக் கண்ட சக பயணி ஒருவர் 2 சிறுவர்களையும் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணை நடத்தியதில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களும் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ஜங்கல் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தாரமங்கலம் ஊராட்சி ஒன்றி யத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
- ஒன்றியத்தில் மொத்தம் ரூ.43.06 கோடி மதிப்பீட்டிலான 1,428 எண்ணிக்கையிலான வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றி யத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது அவர் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகளை நிறைவேற்றித்தர துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஒன்றியத்தில் மொத்தம் ரூ.43.06 கோடி மதிப்பீட்டிலான 1,428 எண்ணிக்கையிலான வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் குருக்குப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பவளத்தானூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.12.51 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் கட்டடத்தினை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள்ளும் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, உதவிப் பொறியாளர்கள் கண்ணன், சீனிவாசன், குருக்குப்பட்டி ஊராட்சிமன்றத்தலைவர் வெங்கடாச்சலம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- குமரகிரி அடிவாரம் சிவன் கரடு பகுதியைச் நேற்று இரவு 9.30 மணியளவில் மதன்ராஜ், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி அருகே சாலையை கடக்க முயன்றார்.
- அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மதன்ராஜ் மீது பயங்கரமாக மோதியது. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் சன்னியாசிகுண்டு குமரகிரி அடிவாரம் சிவன் கரடு பகுதியைச் சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 38). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி உஷா (36) என்ற மனைவியுடன் வசித்து வந்தார். நேற்று இரவு 9.30 மணியளவில் மதன்ராஜ், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மதன்ராஜ் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மதன்ராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் பலத்த காயமடைந்தார். இவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதன்ராஜ் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோட்டார்சைக்கிள் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மாசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் விஜய் (22) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
- ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.சி. கருப்பண்ணன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சேலம்:
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. த.மா.கா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவித்ததையொட்டி, தமாகா போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியிட உள்ளது உறுதியாகி விட்டது. இதனை தொடந்து தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை களம் இறக்க அ.தி.மு.க. தீவிர பணியில் இறங்கி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.சி. கருப்பண்ணன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என தெரிகிறது. மேலும் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
காங்கிரஸை எதிர்த்து வலுவான வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் அவர் கருத்துக்களை கேட்டார்.
- கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு.
- "நம்ம இலக்கு ஈரோடு கிழக்கு" என சமூக வலைதளங்களில் அதிமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாகவும், உச்சநீதிமன்ற வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, "நம்ம இலக்கு ஈரோடு கிழக்கு" என சமூக வலைதளங்களில் அதிமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.
- கல்லங்காட்டுவலசு பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இதன் பேரில் சேவல் சண்டை நடத்திய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.4 ஆயிரம் மதிப்பிலுள்ள சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி. சப்-இன்ஸ்பெக்டர். மலர்விழி தலைமையிலான போலீசார் நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது சேவல் சண்டை நடத்திய அதே பகுதியை சேர்ந்த விவசாயி கோகுல்(வயது 23), ராஜகோபால்(26), பவானி, இளங்கோவன்(43), ஈரோடு எலக்ட்ரீசியன் தினேஷ்(29), ஈரோடு நிதி நிறுவன அதிபர் உதயன்(32), ஈரோடு, போட்டோ கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன்(28) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- சங்ககிரி பிஎஸ்என்எல் அலுவலகம் பின்புறம் குடியிருப்பு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக சங்ககிரி டி.எஸ்.பி., ஆரோக்கியராஜிக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
- 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் 3,400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
சங்ககிரி:
சங்ககிரி பிஎஸ்என்எல் அலுவலகம் பின்புறம் குடியிருப்பு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக சங்ககிரி டி.எஸ்.பி., ஆரோக்கியராஜிக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீ ராமன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் போலீசாருடன் அப்பகுதிக்கு சென்று சோதனை யிட்டனர். அப்போது, சூதாட்டம் விளையாடிக கொண்டிருந்த அப் பகுதியைச் சேர்ந்த சந்திரபோஸ் (வயது 44), நலப்பநாயக்கன் தெருவைச் சேர்ந்த மணி (27), அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (28), ராஜேந்திரன் (35), விஜயகுமார் (31), குப்ப னூரை சேர்ந்த நவீன் (28) ஆகிய 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் 3,400 ரூபாயை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






