என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டிணம் காவல் சரகம் வடமழை மணக்காடு பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் அய்யப்பன்(வயது34). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 3 1/2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த 10-ந்தேதி செம்போடையில் உள்ள தனது குலதெய்வம் கோவிலுக்கு மனைவி சரஸ்வதியை அய்யப்பன் அழைத்துள்ளார். ஆனால் அவர் குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டும். அதனால் வரவில்லை என்று கூறினாராம். இதனால் மனமுடைந்த அய்யப்பன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டாராம். உடனடியாக அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இதுகுறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சீர்காழி:
நாகை மாவட்டம் பூம்புகார் மந்தக்கரை தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது75). விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (60). இவர்களின் மகன் பாலசுப்பிரமணியன் (43). இளநீர் வியாபாரம் செய்து வந்த இவர், அடிக்கடி மதுகுடித்துவிட்டு தனது தந்தை கலியபெருமாளிடம் சொத்துக்களை கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாலசுப்பிரமணியன், கலிய பெருமாளிடம் சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்கும்படி தகராறு செய்தார். அதற்கு கலியபெருமாள் மறுப்பு தெரிவித்தார். இதனால் தந்தை-மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியன், உருட்டுக்கட்டையால் தனது தந்தை கலியபெருமாளையும், தாய் சரஸ்வதியையும் சரமாரியாக அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலியபெருமாள் பரிதாபமாக இறந்தார். சரஸ்வதிக்கு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிர மணியனை கைது செய்தனர். தந்தையை மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த செட்டிப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சாரதம்பாள் (68). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.
கடந்த 5-ந்தேதி தனது 2 வது மகன் தமிழ்செல்வன் (33) என்பவர் தாயாரை வீட்டில் விட்டு விட்டு அங்குள்ள கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது சாரதம்பாளை காணவில்லை. உறவினர்கள் வீடு மற்றும் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து தமிழ்செல்வம் கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். சப் -இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து சாரதம்பாளை தேடி வருகிறார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தை சேர்ந்த பக்கிரி சாமி மகன் செந்தில் (வயது 38) விவசாயி. இவரது தம்பி ராஜேந்திரனின் மனைவி ஜெய்சூரியா. இவர் வேதாரண்யம் அரசு கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் நாலு வேதிபதி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் படித்து வருகிறார். இவர் பஸ்சில்செல்லும் ஜெய்சூரியாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜெய்சூரியா வீடு வரை மோட்டார் சைக்கிளில் சென்று நோட்டமிட்டு உள்ளார். இதனை கண்ட செந்தில், விக்னேசை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் செந்திலை கத்தியால் குத்தி உள்ளார். மேலும் விக்னேசுடன் வந்த இன்னொருவர் கம்பியால் செந்திலை தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த செந்திலை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது பற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவபாலன், ரோசினின் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து செந்திலை தாக்கிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் புஷ்பவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை செல்லக்கன்னி வாய்க்காலில் 30 வயது மதிக்க தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் முக்கால் கால் சட்டையும், டீ சர்ட்டும் அணிந்து இருந்தார்.
முதலில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என கூறப்பட்டது. பின்னர் அதனை உறவினர்கள் மறுத்தனர். எனவே பிணமாக கிடந்தவர் யார்? என்பது தெரியவில்லை.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து ராமநாதபுரம் கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபரின் பிணம் இன்று கோடியக்கரைக்கு எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள குரவப்புலம் தெற்கு காடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ரத்தினம் (65). கடந்த ஒரு வாரத்திற்கு முன் இவர் தனது இளைய மகன் முத்துராமன் வீட்டிற்கு வந்தார். கடந்த 5-ந் தேதி அவர் திடீரென இறந்தார்.
அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக ரத்தினத்தின் மூத்த மருமகள் காந்திமதி வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அருணாசலம், சப்- இன்ஸ்பெக்டர் தேவபாலன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் ரத்தினம் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இக் கொலை தொடர்பாக ரத்தினத்தின் இளைய மகன் முத்துராமனை போலீசார் கைது செய்தனர். ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள சொத்துக்காக தாயை அவர் அடித்து கொன்றது தெரிய வந்துள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள குரவப்புலம் தெற்கு காடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ரத்தினம் (65). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பாலகிருஷ்ணன் கடந்த 15 வருடத்துக்கு முன் இறந்து விட்டார்.
இதனை தொடர்ந்து அவரது 2 மகன்களும் சொத்தை பிரித்து கொண்டனர். தாய்க்கும் சொத்து ஒதுக்கப்பட்டது. இரு மகன்கள் வீடு, உறவினர் வீடுகளுக்கு ரத்தினம் சென்று வந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் இளைய மகன் வீட்டிற்கு ரத்தினம் வந்தார். கடந்த 5-ந் தேதி இரவு அவர் திடீரென இறந்தார்.
அவரது சாவில் மர்மம் இருப்பதாக மூத்த மருமகள் காந்திமதி வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அருணாசலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ரத்தினம் உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் பிராந்தியங்கரை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(50) விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு கஷ்டப்பட்டு வந்தாராம். கடந்த 27-ந் தேதி உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் விவசாய பணிக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் இருந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் இறந்து விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தீ அருகில் இருந்த காசிமாயன்(53), சுந்தர் (40), செல்லப்பாண்டி(36), பன்னீர் செல்வம்(40) ஆகிய 4 பேரின் கூரை வீடுகளுக்கும் பரவியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 5 வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசம் அடைந்தன. இந்த தீவிபத்தில் 5 வீடுகளில் இருந்த பொருட்கள் மற்றும் புத்தகங்கள் எரிந்து சேதமடைந்தன. இதன் சேதமதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
தகவல் அறிந்து நாகை உதவி கலெக்டர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தமிழக அரசின் உதவி தொகை ரூ.5 ஆயிரமும், 5 கிலோ அரிசி மற்றும் மண்எண்ணெய் ஆகியவற்றை வழங்கினர்.
மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயபால் அங்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, தலா ரூ.2 ஆயிரம் வழங்கினார். இந்த தீவிபத்து குறித்து நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் பூம்புகார் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரெங்கநாதன். தற்போது இவர் ஓ. பன்னீர் செல்வம் அணியில் உள்ளார்.
இவரது வீடு செம்பனார் கோவில் அருகே உள்ள பரசலூர் மெயின் ரோட்டில் உள்ளது. ரெங்கநாதன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று இருந்தார்.
இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தது. வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த 45 பவுன் நகை, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ரூ. 41 ஆயிரம் ரொக்கப் பணம், பட்டுப்புடவைகளை கொள்ளையடித்து சென்றது.
இன்று காலை வீடு திரும்பிய ரெங்கநாதன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் துலோத்துங்கன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.
கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ.வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் செம்பனார் கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமன். இவருக்கு சொந்தமான பைபர் படகை ஆறுகாட்டுத்துறையில் கரையோரம் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று படகு உரிமையாளர் ராமன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மனோஜ், மகேஷ் ஆகிய மூவரும் மீன் பிடிப்பதற்காக படகை எடுக்க சென்றனர். ஆனால் கரையில் நிறுத்தி வைத்திருந்த படகு, அதிலிருந்த இன்ஜின், 5 லிட்டர் டீசலோடு மாயமானது தெரியவந்தது. இது குறித்து அனைத்து மீனவ கிராமங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மாயமான படகு காமேஸ்வரம் கடற்கரை பகுதியில் ஆள் இன்றி தனியாக செல்வதை கண்ட அப்பகுதி மீனவர்க்ள அதனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் இதுபற்றிய தகவலின் பேரில் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் படகை கொண்டு வர காமேஸ்வரத்திற்கு சென்றுள்ளனர்.
ஆறுகாட்டுத்துறையில் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த அந்த படகு கடும் சூறாவளி காற்று காரணமாக கயிறு அறுந்து கடலுக்குள் சென்று காமேஸ்வரம் பகுதிக்கு வந்தது.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேச்சாவடியை சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவர் மகன் வெற்றி என்ற வெற்றிவேல் (வயது 30) ரவுடி. இவர் மீது மயிலாடுதுறை, பொறையாறு, செம்பனார் கோவில், குத்தாலம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் 2013-ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மயிலாடுதுறை ரேவதி நகரை சேர்ந்த லோகேஸ் என்பவரை வெற்றிவேல் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று இரவு 10.30 மணியளவில் மயிலாடுதுறை எம்.ஜி.ஆர். காலனியில் வெற்றிவேல் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
அவரை கொலை செய்த மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெற்றிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடு துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






