என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே தாயை அடித்து கொன்ற மகன் கைது
வேதாரண்யம் அருகே சொத்து தகராறில் தாயை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள குரவப்புலம் தெற்கு காடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ரத்தினம் (65). கடந்த ஒரு வாரத்திற்கு முன் இவர் தனது இளைய மகன் முத்துராமன் வீட்டிற்கு வந்தார். கடந்த 5-ந் தேதி அவர் திடீரென இறந்தார்.
அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக ரத்தினத்தின் மூத்த மருமகள் காந்திமதி வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அருணாசலம், சப்- இன்ஸ்பெக்டர் தேவபாலன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் ரத்தினம் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இக் கொலை தொடர்பாக ரத்தினத்தின் இளைய மகன் முத்துராமனை போலீசார் கைது செய்தனர். ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள சொத்துக்காக தாயை அவர் அடித்து கொன்றது தெரிய வந்துள்ளது.
Next Story






