என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் கீழையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அருள்செல்வன். இவரது மகன் பரணிதரன்(வயது 21). இவர் சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி என்ஜினீயரிங் படித்து வந்தார். அப்போது பரணிதரனுக்கு, அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இவர்களது காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வந்தது. இந்த காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த எதிர்ப்பை மீறி பரணிதரன் பெற்றோர், இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தனது மகளை காணவில்லை என அந்த பெண்ணின் பெற்றோர் சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதற்கிடையே மாணவியின் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு இருவரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் பெற்றோருக்கு பயந்து நாகையில் உள்ள உறவினர் வீட்டிற்கு காதல் ஜோடியினர் வந்துள்ளனர். அங்கு வந்த அவர்கள் இருவரும் நாகை காடம்பாடியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் உயிருக்கு போராடிய இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
நாகையை அடுத்த டாட்டா நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். மீனவர். இவருடைய மகன் சிவா (வயது 25). இவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்காக கீரைக்கொல்லை தெரு ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் சிவா மீது மோதியது. இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பான புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாடா மாவட்டத்தை சேர்ந்தவர் பர்வந்த் (வயது 35). இவரது மனைவி ரிங்கு (30).
இந்த நிலையில் பர்வந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து நாகை மாவட்டம் பூம்புகார் தர்மகுளத்துக்கு வந்தார். பின்னர் அங்கு நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் பர்வந்த் வீட்டில் இருந்தார். அப்போது அவரது மனைவி ரிங்கு வெளியே புறப்பட்டு சென்றார்.
இதையடுத்து இரவில் மனைவி ரிங்கு வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் பார்த்த போது அங்கு பர்வந்த் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு திடுக்கிட்டார். கணவரின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். இதைதொடர்ந்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பர்வந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நிதி நிறுவன அதிபர் பர்வந்த் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். தொழிலில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது அவரிடம் பணத்தை பெற்றவர்கள் ஏமாற்றியதால் இந்த முடிவை எடுத்தாரா? குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மரையூர் பகுதியை சேர்ந்தவர் சவுரிராஜன் (வயது 31). இவருக்கும் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியை சேர்ந்த ஆர்த்தி (29) என்ற இளம் பெண்ணுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆர்த்திக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் நேற்று ஆர்த்தியின் வீட்டுக்கு அவரது தந்தை கலியபெருமாள் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் ஆர்த்தி பிணமாக கிடந்தார். இதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் ஆர்த்தியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரையும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கலியபெருமாள் பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். அதில் ‘தனது மகள் ஆர்த்தி சாவில் மர்மம் உள்ளது. இதை விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் வரதட்சணை பிரச்சினையால் ஆர்த்தி இறந்தாரா? என்று மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. தேன்மொழி மேல் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
இதுபற்றி தகவல் அறிந்த வலிவலம் போலீசார், அங்கு சென்று பெண் உடலை மீட்டனர். அப்போது அந்த பெண்ணின் கழுத்து பகுதி துணியால் நெரிக்கப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதி விசாரணையை துரிதப்படுத்தினர். இதுதொடர்பாக வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அவர் கிள்ளுக்குடியை அடுத்த கடலாகுடி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி குஞ்சுபிள்ளை (வயது57) என்பவருடைய மனைவி மாரியம்மாள் (42) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து குஞ்சு பிள்ளையிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர் மனைவி இறந்த சோகம் இல்லாமல் பதில் கூறினார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே மனைவி உடலை பாண்டவையாற்றில் பார்த்து விட்டு குஞ்சுபிள்ளை எதுவும் தெரியாதது போல் சென்றதும் தெரிய வந்தது. இதனால் குஞ்சுபிள்ளையிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதல் விவகாரத்தில் மாரியம்மாளை, குஞ்சுபிள்ளை கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.
மாரியம்மாள், பல ஆண்களுடன் நெருங்கி பழகி வந்தார். இது பின்னர் கள்ளத்தொடர்பாக மாறியது. இதனால் மாரியம்மாள், கள்ளத்தொடர்பால் பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் மாரியம்மாள் நீண்ட நேரம் கழித்து வீட்டுக்கு வந்ததாகவும் தெரிகிறது.
இதனால் குஞ்சுபிள்ளை, மாரியம்மாளிடம் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறினார். ஆனால் அவர் கேட்காமல் வாக்குவாதம் செய்து வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த குஞ்சுபிள்ளை, சம்பவத்தன்று மனைவி மாரியம்மாளை, கடலாகுடியை சேர்ந்த தினேஷ்குமார் (19) என்ற வாலிபர் துணையுடன் கழுத்தை துணியால் நெரித்துக்கொலை செய்துள்ளார். பின்னர் மனைவி உடலை பாண்டவையாற்றில் வீசி சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து குஞ்சு பிள்ளையும், கொலைக்கு உறுதுணையாக இருந்த தினேஷ்குமாரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் மாளிகையில் உள்ள உயர்அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரை காப்பாற்ற வழக்கு திசை திருப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து வெளிகொண்டுவர வேண்டும். எனவே பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
திருச்சி முக்கொம்பு அணை உடைந்ததற்கு மணல் கொள்ளை தான் காரணம் என்று கூறியதற்கு தமிழக முதல்-அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்மேலாண்மை குறித்து புரிதல் இன்னும் தேவை. மேலணை உடைந்து பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கீழ் அணையின் உறுதி தன்மை குறித்து இதுவரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித ஆய்வும் நடத்தவில்லை. கீழணையில் போக்குவரத்தை முற்றிலும் தடைசெய்து போக்குவரத்தை மாற்றவேண்டும். தமிழகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை.
முல்லைப்பெரியாறு அணை திறந்ததால் கேரளாவில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டதாக கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால்தான் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு பிறமாநிலங்களை விட தமிழகம்தான் அதிக அளவில் உதவி செய்து வருகிறது. இருமாநில மக்களிடம் உள்ள நல்உறவை கேரளஅரசு பிளவுபடுத்தக்கூடாது. முல்லைப்பெரியாறு அணையின் உறுதி தன்மையை ஆய்வு செய்து தொடர்ந்து 142 அடி நீர்தேக்குவதற்கான முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகள் வாங்கிய கடனை செலுத்தவில்லை என்று அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்க்கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாகக்குழு கூட்டம் கூடி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பாமக மாநில தலைவர் கோ.க.மணி, மாநிலப் பொருளாளர் திலகபிரபா, புதுச்சேரி மாநில பொருப்பாளர் தன்ராஜ், மாநில துணை பொதுசெயலர் பழனிசாமி, நாகை மாவட்ட செயலர் விமல் , முத்துகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #ramadoss #thiruvarurelection
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளிலும், 65 விசைப்படகுகளிலும் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாள்தோறும் அதிகாலையில் பைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் மதியம் கரை திரும்புகின்றனர். விசைப்படகில் செல்லும் மீனவர்கள் ஓரிரு நாட்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். நாள்தோறும் மீனவர்கள் வலைகளில் ஷீலா, காலா, வாவல், கூரல், நண்டு, இறால் மீன்கள் கிடைக்கின்றன.
தற்போது ஆறுகாட்டுத்துறை கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் சீலா மீன்கள் அதிக அளவு சிக்குகின்றன. இதில் ஒரு கிலோ முதல் 3 கிலோ வரை எடையுள்ள சீலா மீன்கள் கிடைக்கின்றன.
3 கிலோ எடையுள்ள சீலா மீன்கள் கிலோ ரூ.750-க்கும், 2 கிலோ எடையுள்ள சீலா மீன்கள் கிலோ ரூ.500-க்கும், ஒரு கிலோ எடையுள்ள மீன்கள் கிலோ ரூ.350-க்கும் வியாபாரிகள் மீனவர்களிடம் இருந்து வாங்கி செல்கின்றனர். காலா மீன்கள் ரூ.400 முதல் ரூ.500 வரையும், வாவல் மீன்கள் ரூ.500 முதல் ரூ.900 வரையிலும், கூரல் மீன்கள் கிலோ ரூ.400-க்கும் நீலக்கால் நண்டு ரூ.400-க்கும், புள்ளிநண்டு ரூ.250-க்கும் இறால் ரூ.200 முதல் ரூ.500 வரையிலும், மட்லீஸ் கிலோ ரூ.60-க்கும் விற்பனையாகின்றன.
மீன்கள் அதிகளவில் கிடைப்பதால் மீனவர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் மீன்பிடிக்க செல்கின்றனர். நாளை(ஞாயிற்றுக்கிழமை) பவுர்ணமி வருகிறது. அதற்கு பிறகு வெளிச்சமாக நேரத்தில் அதிகளவில் கூரல் மீன் சிக்கும் என்பதால் மீனவர்கள் அதிக அளவில் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அதிகளவில் ஷீலா மீன்கள் கிடைப்பதாலும், மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சின்னபெருந்தோட்டத்தில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி அம்பேத்கரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு தரப்பினரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இவரது பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததாக கூறி திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சீர்காழி கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து ஏற்கனவே வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்த திருமுருகன் காந்தி ,சீர்காழி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு நீதிபதி விடுப்பில் இருந்ததால் உடனடியாக மயிலாடுதுறை கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து திருமுருகன் காந்தி மீண்டும் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். #ThirumuruganGandhi
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் அல்லிவிளாகம் பாலக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் 83 அட்டை பெட்டிகளில் 3 ஆயிரத்து 984 மதுபாட்டில்களை புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கார் டிரைவர் நன்னிலம் தாலுகா கூத்தனூரை சேர்ந்த வெற்றிவேந்தன் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.
இதைப்போல மயிலாடுதுறை அருகே கருவி முக்கூட்டில் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1,600 சாராய பாக்கெட்டுகளை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியை சேர்ந்த சண்முகவேல் (37) என்பவரை கைது செய்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வர பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மயிலாடுதுறை அருகே மணல்மேடு போலீஸ் சரகம் கிழாய் கிராமம் பாரதி நகரை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 60). விவசாய கூலி. அதே பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மணிமாறன் (வயது 28). விவசாய கூலி. சம்பவதன்று அப்பகுதி பஸ் ஸ்டாப்பில் குமாரசாமி படுத்திருந்த போது அங்கு நின்று கொண்டு மணிமாறன் செல்போனில் சத்தமாக பேசி கொண்டு இருந்தாராம்.
இதனால் அவரை குமாரசாமி கண்டித்ததால் ஆத்திரமடைந்த மணிமாறன் அவரை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்து இது குறித்து கூறியுள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது குமாரசாமி மயங்கி கிடந்ததால் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் மணல்மேடு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து மணிமாறனை கைது செய்தார். #tamilnews
கொள்ளிடக்கரையில் ஏற்பட்ட உடைப்பால் நாதல்படுகை கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர் நேற்று தனது மனைவி, குழந்தைகளை அழைத்து கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு சென்றார்.
பின்னர் வீட்டை பார்வையிடுவதற்காக ரவி நேற்று மாலை வந்தார். அப்போது வெள்ளத்தில் சிக்கிய அவரது கூரைவீடு இடிந்து கிடந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து மனவேதனையில் இருந்த ரவி, நேற்று இரவு திடீரென பூச்சி மருந்தை குடித்து விட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






