என் மலர்
மதுரை
- திருமங்கலம் அருகே வாலிபர் கொலையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்கள் ரெயில் நிலையத்தில் பதுங்கியிருந்தபோது சிக்கினர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த போஸ் மகன் பாரதிராஜா (வயது 35). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சந்தன பாண்டியன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.
2 மாதத்திற்கு முன்பு புதுப்பட்டியில் உள்ள கோவில் திருவிழாவில் பாடல் போடுவது தொடர்பாக பாரதிராஜாவுக்கும், சந்தனபாண்டிக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் பாரதிராஜாவை கைது செய்ய முயன்றபோது அங்கிருந்து அவர் தலைமறைவாகிவிட்டார்.
பின்னர் ஜாமீன் பெற்று கடந்த 10-ந் தேதி பாரதிராஜா சொந்த ஊருக்கு வந்தார். அன்று இரவு புதுப்பட்டியில் உள்ள டீக்கடையில் நண்பர் சரவணகுமாருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பாரதிராஜாவை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
உடனிருந்த சரவணக்குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டது. அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பாரதிராஜாவை கொலை செய்தது சந்தனபாண்டியும், அவரது நண்பர்களும் என தெரியவந்தது. இதையடுத்து சந்தனபாண்டி, ராம கிருஷ்ணன், கோகுல்,பரத் பாக்கியராஜ் விக்கி ஆகிய 6 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
மற்ற 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், திருமங்கலம் ரெயில் நிலையத்தில் பதுங்கி இருந்த போலீசார் கைது செய்தனர். 5 பேரையும் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்துக்கு 5 பேரையும் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 51 ஏழை எளிய மணமக்களுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
- இந்த தகவலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை
ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதய குமார் பேசியதாவது:-
வெள்ள தடுப்பு மற்றும் வெள்ளமீட்பு நடவடிக்கை களை தி.மு.க. அரசு எடுக்காத காரணத்தால், தற்போது தண்ணீரில் தமிழகம் தத்தளிக்கிறது. இதனால் மக்கள் கண்ணீரில் மிதக்கிறார்கள். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க ஜெயலலிதா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் நிவாரணம் வழங்கப்படும்.
மேலும் பருவ மழை யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் இழப்பீடு தொகையை தி.மு.க. அரசு உடனடியாக வழங்க வேண்டும்.7 பேர் விடுதலைக்கு 2014-ம் ஆண்டு முதல் முதலாக விடுதலைக்கு வித்திட்டவர் ஜெயலலிதா. அதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தை நிறைவேற்றினார். 7 பேர் விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் இந்த இருவர் மட்டும் தான்.
எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டும், ஜெயலலிதா வின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டும், அ.தி.மு.க.வின் 51-வது பொன்விழாவை முன்னிட்டும், ஜெயலலிதா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் பிப்ரவரி 23-ந் தேதி, டி. குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் 51 ஏழை எளிய மணமக்களுக்கு, இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதில் முன்னாள் மூத்த அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கி றார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மதுரை வைகை ஆற்றில் கொள்ளையடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் மேற்கண்ட 4 பேரையும் திலகர்திடல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
மதுரை
மதுரை வைகை தென்கரை பகுதியில் ஆயுதங்களுடன் 10 பேர் கும்பல் கொள்ளை யடிப்பதற்காக பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனையின் பேரில், திலகர் திடல் இன்ஸ்பெக்டர் சங்கர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று காலை வைகை தென்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அனுமார் கோவில் படித்துறை பகுதியில் 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் மேற்கண்ட 4 பேரையும் திலகர்திடல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அவர்கள் சிம்மக்கல், வெங்கடசாமி அக்ரஹாரம் செந்தில்குமார் மகன் சந்தோஷ் (20), சிம்மக்கல் சுப்பையா பிள்ளை தோப்பு, பாரதி மகன் பூமிநாதன் (23), மேல அண்ணாதோப்பு, சுடுதண்ணீர் வாய்க்கால் தெரு, கதிரேசன் மகன் ராமர் என்ற யுவா ராம்குமார் (20), அவரது சகோதரர் லட்சுமணன் என்ற யுவராஜ்குமார் என்பது தெரியவந்தது. யுவராம்குமார், யுவராஜ்குமார் ஆகியோர் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- விடுதலை செய்யப்பட்ட 7 பேருக்கும் தலா ரூ.50 லட்சம் நிவாரண தொகையை அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.ம.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
- 31 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மதுரை
அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்று 31 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு பின் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள், இதனை உலகத் தமிழினமே கொ ண்டாடி மகிழ்கிறது,
7தமிழர்களின் விடுதலைக்காக மனித நேய ஆர்வலர்கள், அனைத்து தரப்பு மக்களும் போராடி இருக்கிறார்கள். அவர் களுக்காக அ.தி.ம.மு.க. சார்பில் என் நெஞ் சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,
முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 7தமிழர்களின் விடுதலையை சட்டப் போராட்டம் மூலம் நிறை வேற்றி இருக்கும் திமுக அரசை பாராட்டுகிறோம்.
இந்நிலையில் 32 ஆண்டு களாக இளமையையும், வளமையையும் சிறையி லேயே கழித்து விட்டு வெளியில் வந்திருப்ப வர்களுக்கு இளமையை நம்மால் திரும்பித் தர முடியாது, வளமையை நம்மால் உருவாக்க முடியும், இவர்களின் எதிர்கால நலன் கருதி 7பேருக்கும் தலா 50 லட்ச ரூபாய் நிதி அளித்திட தமிழக அரசையும், முதல்வரையும் கேட்டுக்கொள்கிறேன்,
தமிழகத்திலேயே 7 பேரும் வாழ விரும்பினால் ஒன்றிய அரசிடம் வற்புறுத்தி இந்திய குடிமகன்களாக வாழ சட்ட வழிவகை செய்திட மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
- அரசு அதிகாரி மீது தாக்குதல் நடந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசை ைகது செய்தனர்.
மதுரை
மதுரை ஒத்தக்கடை, நகுலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் திருக்கண்ணன் (வயது 54). இவர் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார சுகாதார மேற்பார்வை யாளராக உள்ளார்.
சம்பவத்தன்று காலை திருக்கண்ணன் மருத்துவ குழுவினருடன், ஒத்தக்கடை அய்யப்பன் நகருக்கு சென்றார். அப்போது அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு யானைக்கால் நோய் தொடர் பாக பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
இதற்கு ஜகதாரணி குடியிருப்பில் வசிக்கும் சந்தோஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை மருத்துவ அதிகாரி திருக்கண்ணன் சமாதானப்படுத்தி விளக்கி கூற முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அவரை சரமாரியாக தாக்கினார்.
இதில் கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக எடுக்கப்பட்ட ரத்த மாதிரி பாட்டில்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக திருக்கண்ணன் ஒத்தக்கடை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசை ைகது செய்தனர்.
- மதுரையில் மழைநீருடன் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

வில்லாபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கியிருப்பதை படத்தில் காணலாம்.
மதுரை
மதுரையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை மாநகரில் மழை நீரை வெளியேற்றுவதற்கான கட்டமைப்புகள் சரி வர அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாக்கடை அடைப்புகள் தொடர் கதையாக உள்ளன.
மதுரை மாநகராட்சி 86-ம் வார்டான வில்லாபுரம் அம்மச்சியார் கோவில் தெருவில், கடந்த ஒரு வார காலமாக பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சினை உள்ளது. இதன் காரணமாக மழை நீருடன் சாக்கடை கழிவுகளும் வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. எனவே அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். அதுவும் தவிர கொசுத்தொல்லை உள்பட பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.
இது தொடர்பாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சியிடம் புகார் கொடுத்தனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை.
இதை கண்டித்தும், மழை, கழிவுநீரை அகற்றக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பகுதி பொதுமக்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து, வில்லாபுரம் ஆர்ச் சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
- கப்பலூர் சுங்கச்சாவடியை கண்டித்து கடையடைப்பு-ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
- திருமங்கலம் சர்வீஸ் சாலையை திருமங்கலம் வாகன ஓட்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைப்படி திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும். ஆனால் விதிகளை மீறி திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டதோடு திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திருமங்கலம், கல்லுப்பட்டி ,பேரையூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி வாகன ஓட்டிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகம் கடந்த 1-ந்தேதி முதல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க போவதாக கூறி மாதாந்திர கட்டணமாக 331 உள்ளூர் வாகனங்கள் செலுத்த வேண்டும் என அறிக்கை விடுத்து கட்டண வசூலில் இறங்கியது இதற்கு திருமங்கலம் வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுெதாடர்பாக கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் அல்லது திருமங்கலம் சர்வீஸ் சாலையை திருமங்கலம் வாகன ஓட்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக உள்ளதை கண்டித்தும், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையை கண்டித்தும் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அன்றைய தினம் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தின் முன் சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப் போவதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதற்கும் மேலாக சுங்கச்சாவடி தரப்பில் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டண வசூல் செய்ய முற்பட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
- மகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- வாஸ்து சாந்தி, புண்ணியாசனம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டிக்கு சொந்தமான சுமார் 500 ஆண்டுகள் பழமையான மகாலிங்க சுவாமி மற்றும் ஜீவசமாதி மடத்தின் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
3 நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, புண்ணியாசனம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு கால யாக பூஜையுடன் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி வானத்தில் கருடன்கள் வட்டமிட ராமேசுவரம், அழகர்கோவில் உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை கலசங்கள் மீது ஊற்றப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை பொருட்களும், அன்ன தானமும் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தொழிலதிபர்கள் கே.ஜி.பாண்டியன், ஏ.வி.பார்த்தி பன் மற்றும் பாலமேடு கிராம அனைத்து உறவின்முறை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாட்டினை கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொரு ளாளர் ஜோதிதங்கமணி, மற்றும் கமிட்டியினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலமேடு போலீசார் செய்திருந்தனர்
- கறி விருந்தில் துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.
- திருமங்கலம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருமங்கலம்:
மதுைர மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கொக்குளத்தை சேர்ந்தவர் தனசேகரன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேர்த்திக்கடனுக்காக திருமங்கலம் காட்டுப் பத்திரகாளி அம்மன் கோவிலில் நேற்று கிடா வெட்டி கறி விருந்து வைத்தார்.
இதில் பங்கேற்குமாறு நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது மதுபோதையில் மதுரை கீழப்பனங்காடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வேதகிரி என்பவருக்கும், திருமங்கலம் அருகே உள்ள அ.தொட்டியபட்டியைச் சேர்ந்த கணபதி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வேதகிரி, தனது காரில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு மிரட்டினார். கறி விருந்தில் துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கணபதி, வேதகிரியின் அலுவலக உதவியாளர் சக்திவேல், கிடா விருந்து வைத்த தனசேகரன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவலறிந்த திருமங்கலம் ஆர்.டி.ஓ. சவுந்தர்யா, தாசில்தார் சிவராமன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற் கொண்டனர்.
கறி விருந்தில் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிய வேதகிரியை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.இந்த நிலையில் மதுரையில் பதுங்கி இருந்த வேதகிரியை நள்ளிரவில் போலீசார் கைது செய்து திருமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான வேதகிரி காங்கிரஸ் பிரமுகர் ஆவார். மேலும் அவர் வைத்திருந்த துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கி என்பது குறிப்பிடத்தக்கது.
- வேட்டைக்கு சென்ற வாலிபர், வேட்டை நாய்களுடன் மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தோட்டத்து உரிமையாளரான அசோக்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 35). கூலி தொழிலாளியான இவர் வேட்டை நாய்களும் வளர்த்து வந்தார். அதனை வைத்து காட்டு பகுதிக்கு சென்று வேட்டையாடுவதிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு மாணிக்கம் தன்னுடைய 5 வேட்டை நாய்களை அழைத்து கொண்டு அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யன கவுண்டன்பட்டி கிராமத்தில் இருக்கும் காட்டு பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றுள்ளார்.
அந்த இடத்தில் அய்யன கவுண்டன்பட்டியை சேர்ந்தவர்களின் தோட்டங்கள் இருக்கிறது. அசோக்குமார் என்பவர் தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் சம்பங்கி பூக்கள் பயிரிட்டிருந்தார். அதனுள் வன விலங்குகள் எதுவும் புகுந்துவிடக்கூடாது என்பதற்காக சம்பங்கி பூக்கள் பயிரிடப்பட்டிருந்த இடத்தை சுற்றி மட்டும் மின்வேலி அமைத்திருக்கிறார்.
சாதாரணமாக பார்த்தால் உடனடியாக தெரியாத வகையில் மின்வேலி மிகவும் மெல்லிய கம்பியை பயன்படுத்தி சிறிதாக அமைக்கப்பட்டிருந்தது. இதனை அறியாத மாணிக்கம், அசோக்குமாரின் தோட்டத்து வழியாக நள்ளிரவில் சென்றிருக்கிறார்.
அப்போது அவரது கால் மின்வேலியில் பட்டுவிட்டது. இதனால் மாணிக்கம் மீதும், அவர் அழைத்து சென்ற வேட்டை நாய்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் மாணிக்கம் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். அவரது வேட்டை நாய்களும் மின்சாரம் பாய்ந்து பலியாகின.
மாணிக்கம் மற்றும் அவரது வேட்டை நாய்கள் இறந்து கிடப்பதை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் அதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணிக்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து தோட்டத்து உரிமையாளரான அசோக்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
- நள்ளிரவு ஆகியும் பாண்டியம்மாள் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மதுரை:
மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் அண்ணாமலையார் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (43). இவர்களுக்கு கண்ணன் (27) என்ற மகன் உள்ளார். பாண்டியம்மாள் மேலஅனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அவருக்கும், அதே மில்லில் வேலை பார்த்த அனுப்பானடி பூம்புகார் நகரை சேர்ந்த செல்வம் (57) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்துள்ளது. வீட்டினுள் பார்த்தபோது பாண்டியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த பாண்டியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பிணமாக கிடந்த வீட்டில் வசித்து வந்த செல்வத்தை காணவில்லை.
அவர் தான் பாண்டியம்மாளை கொன்றுவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் ஆகியோரின் உத்தரவின்பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் பாண்டியம்மாளை கொன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
பாண்டியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அது தொடர்பாக கேட்டபோது தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்து கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொன்று விட்டதாகவும் செல்வம் கூறியிருக்கிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் நிறுவன ஊழியர்-மூதாட்டி மாயமாகினர்.
- இதுகுறித்து மகன் போஸ் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை
மதுரை பெத்தானியபுரம் பாத்திமா நகரை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது34). வெள்ளரிப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி மனைவி, 1 ஆண் குழந்தை உள்ளனர்.
கடந்த 23-ந் தேதி தீபாவளியையொட்டி மாமனார் வீட்டிற்கு மனைவி, குழந்தைகளை அழைத்து சென்றார். அதன் பிறகு கடந்த 2-ந் தேதி முதல் அழகர்சாமியை காணவில்லை. அவரது செல்போனும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மனைவி பாண்டீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு காவல் நிலைய ஆய்வாளர் முகமது இத்ரிஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மூதாட்டி
மதுரை சுவாமி சன்னதி, வடுக தட்டாரசந்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி கமலம் (75).
கடந்த 7-ந் தேதி காலை வெளியே சென்ற மூதாட்டி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மகன் போஸ் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






