அரசு அதிகாரி மீது தாக்குதல்

அரசு அதிகாரி மீது தாக்குதல் நடந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசை ைகது செய்தனர்.
அரசு அதிகாரி மீது தாக்குதல்
Published on

மதுரை

மதுரை ஒத்தக்கடை, நகுலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் திருக்கண்ணன் (வயது 54). இவர் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார சுகாதார மேற்பார்வை யாளராக உள்ளார்.

சம்பவத்தன்று காலை திருக்கண்ணன் மருத்துவ குழுவினருடன், ஒத்தக்கடை அய்யப்பன் நகருக்கு சென்றார். அப்போது அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு யானைக்கால் நோய் தொடர் பாக பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.

இதற்கு ஜகதாரணி குடியிருப்பில் வசிக்கும் சந்தோஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை மருத்துவ அதிகாரி திருக்கண்ணன் சமாதானப்படுத்தி விளக்கி கூற முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அவரை சரமாரியாக தாக்கினார்.

இதில் கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக எடுக்கப்பட்ட ரத்த மாதிரி பாட்டில்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக திருக்கண்ணன் ஒத்தக்கடை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசை ைகது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com