தனியார் நிறுவன ஊழியர்-மூதாட்டி மாயம்

தனியார் நிறுவன ஊழியர்-மூதாட்டி மாயமாகினர்.இதுகுறித்து மகன் போஸ் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்-மூதாட்டி மாயம்
Published on

மதுரை

மதுரை பெத்தானியபுரம் பாத்திமா நகரை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது34). வெள்ளரிப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி மனைவி, 1 ஆண் குழந்தை உள்ளனர்.

கடந்த 23-ந் தேதி தீபாவளியையொட்டி மாமனார் வீட்டிற்கு மனைவி, குழந்தைகளை அழைத்து சென்றார். அதன் பிறகு கடந்த 2-ந் தேதி முதல் அழகர்சாமியை காணவில்லை. அவரது செல்போனும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மனைவி பாண்டீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு காவல் நிலைய ஆய்வாளர் முகமது இத்ரிஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மூதாட்டி

மதுரை சுவாமி சன்னதி, வடுக தட்டாரசந்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி கமலம் (75).

கடந்த 7-ந் தேதி காலை வெளியே சென்ற மூதாட்டி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மகன் போஸ் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com