என் மலர்tooltip icon

    மதுரை

    • பஸ் நிலையத்தில் திரிந்த வடமாநில பெண்ணை கடத்த முயன்றனர்.
    • அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் அந்த பெண்ணை மீட்டனர்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் கடந்த 2 நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிந்து வந்துள்ளார். அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அவரை நேற்று இரவு சிலர் ஆட்டோவில் கடத்தி செல்ல முயன்றனர்.

    அப்போது அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் அவருக்கு உணவு, குடிநீர் கொடுத்து பழ மார்க்கெட் வணிக வளாகத்தில் பத்திரமாக தங்க வைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் எந்த அறக்கட்ட ளையினரும் அந்த பெண்ணை காப்ப கத்தில் சேர்க்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் வக்கீல் முத்துக்குமார், சாம் சரவணன், ரெட்கிராஸ் மூகாம்பிகை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் போலீசார் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மதுரையில் 17 மையங்களில் குடிமைப்பணி தேர்வு நடந்தது.
    • 15 கல்வி மையங்களில் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    மதுரை

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் குடிமைப்பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு மதுரை மாவட்டத்தில் 17 மையங் களில் இன்று நடந்தது. இதில் 6 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். மதுரை மாவட்டத்தில் 15 கல்வி மையங்களில் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 9.30 முதல் 11.30 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் தேர்வு நடந்தது.

    • விபத்தில் வாலிபர் இறந்தார்.
    • பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள சோலங்குருணை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(24). இவர் திருப்பூரில் வேலை பார்த்தார். ஊருக்கு வந்த இவர் வலையங்குளத்தை சேர்ந்த இருளப்பன் மகன் மூர்த்தி(24) என்பவருடன் நல்லூர் பகுதியில் உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிளை மூர்த்தி ஓட்டினார். அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் மூர்த்தி படுகாயமடைந்தார். அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜ்குமார் கொடுத்த புகாரின்பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடு புகுந்து பெண்ணிடம் நகை திருடப்பட்டது.
    • இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள வலங்காங்குளம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(40). அரசு பஸ் மெக்கானிக். இவரது மனைவி வனிதா(35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டாமல் வனிதா கீழ் பகுதியிலும், கனகராஜ் மாடியிலும் தூங்கியுள்ளனர். அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் வனிதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர்.

    அப்போது வனிதா கூச்சலிட்டதை கேட்டு கனகராஜூம், அக்கம் பக்கத்தினரும் வந்தனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயங்கி விழுந்து இறந்த வாலிபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கடந்த 24-ந் தேதி மாலையில் பரிதாபமாக இறந்தார்.

    மதுரை

    மதுரை வெள்ளக்கல் முனியாண்டி கோவில் அருகில் கடந்த 20-ந் தேதி இரவு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மயங்கி கிடந்தார். தகவலறிந்த அயன்பாப்பாக்குடி கிராம உதவியாளர் செல்லப்பாண்டி மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 24-ந் தேதி மாலையில் பரிதாபமாக இறந்தார்.

    அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. நெற்றியில் கருப்பு மச்சமும், இடது கால் முட்டியில் பழைய காயத்தழும்பும் காணப்படுகிறது. இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊரணியில் மூழ்கி முதியவர் பலியானார்.
    • மூழ்கி பலியானவர் சாத்தங்குடியைச் சேர்ந்த அய்யர் என்பது தெரியவந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் உள்ள சாத்தங்குடி பஸ் நிறுத்தம் அருகே ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் இன்று காலை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுபற்றி பொதுமக்கள் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவர் பிணத்தை மீட்டனர்.

    விசாரணையில் ஊரணியில் மூழ்கி பலியானவர் சாத்தங்குடியைச் சேர்ந்த அய்யர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமறைநாதர்-வேதநாயகி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் சப்பரத்தில் புறப்பாடு நடந்தது.
    • ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூ ரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட திருமறை நாதர்-வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாதம் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    இைதத்தொடர்ந்து முக்கிய நிகழ்வாக மாங்கொட்டை திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு திருவாத வூர் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், சண்டி கேஸ்வரர், திருமறைநாதரு டன் பிரியாவிடை, வேத நாயகி அம்பாள் ஆகிய பஞ்ச மூர்த்திகள் சப்பரத்தில் புறப்பட்டு வந்தனர்.

    திருவாதவூர், கொட்டகுடி விலக்கு, ஆண்டிபட்டி, பதினெட்டாங்குடி, மில் கேட், தெற்குப்பட்டி வழி யாக மேலூர் நகர் பகுதியில் முழுவதும் சுற்றி வந்து இன்று மாலை மேலூர் சிவன் கோவிலை சென்றடைகிறது.

    வரும் வழிதோறும் பல மண்டகப்படிகளில் பஞ்ச மூர்த்தி சுவாமிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனைகள் செய்யப்படுகிறது. மீண்டும் நாளை காலை மேலூரில் இருந்து புறப்பட்டு திருவாத வூர் கோவிலை திரும்பச் சென்றடைகிறது.

    வருகிற 31-ந் தேதி சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. ஜூன் 1-ந் தேதி காலையில் தேரோட்டம் நடைபெறு கிறது இதில் ஆயிரக்க ணக்கான கிராம மக்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுப்பார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • வணிக வரித்துறை அதிகாரிகள் லஞ்சத்தொகையை பாதியாக குறைத்து ரூ.10 ஆயிரம் தந்து விட்டால் லாரியை விடுவிப்பதாக கூறினர்.
    • பதிவுகள் உண்மை என்பது தெரிய வந்ததையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி இது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு காகித பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்னையில் இருந்து கடந்த 2021 செப்டம்பர் 9-ந் தேதி புறப்பட்டது. மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் வணிக வரித்துறை அதிகாரி சசிகலா மற்றும் கணேசன், பாலகுமார் ஆகியோர் சோதனைக்காக லாரியை நிறுத்தினர்.

    அப்போது ஆவணங்களை பரிசோதித்த போது காகித பண்டல்களுக்கான இணைய வழி ஆவணங்களை செப்டம்பர் 13 என்ற தேதிக்கு பதிலாக, காகிதம் வாங்கிய தேதியான செப்டம்பர் 9-ந் தேதி என்று தவறுதலாகப் பதிவாகியுள்ளது. இதனால் வணிக வரித்துறை அதிகாரிகள் ஆவணங்களில் தேதி சரியாக குறிப்பிடாததால் அபராதம் விதிக்க வேண்டும், அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டனர். இதையடுத்து லாரி டிரைவர் சரவணன், உரிமையாளர் நாராயண சாமியை தொடர்புகொண்டு இதுகுறித்து தெரிவித்தார். ஆவணங்களில் தேதி தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், சரியான ஆவணங்களை அனுப்பி வைப்பதாகவும் லாரியை விடுவிக்குமாறும் உரிமையாளர் கூறியுள்ளார்.

    இதையடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள் லஞ்சத்தொகையை பாதியாக குறைத்து ரூ.10 ஆயிரம் தந்து விட்டால் லாரியை விடுவிப்பதாக கூறினர்.

    இதில் லாரி டிரைவர் சரவணன் தன்னிடமுள்ள ரூ.5 ஆயிரத்தை தருவதாகவும் மீதித்தொகையை தூத்துக்குடி சென்று அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ரூ.5 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு வணிக வரி அதிகாரிகள் லாரியை விடுவித்தனர். இந்த நிலையில் லாரி டிரைவர் சரவணன், வணிக வரித்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது, ரூ.5 ஆயிரம் கொடுத்தது உள்ளிட்ட அனைத்தையும் தனது செல்போனில் பதிவு செய்து உரிமையாளரிடம் அளித்திருந்தார்.

    இதையடுத்து உரிமையாளர் கொடுத்த தகவலின்பேரில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் லாரி டிரைவர் சரவணனின் கைப்பேசியை பெற்று அதில் உள்ள பதிவுகளின் உண்மைத்தன்மையை அறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பதிவுகள் உண்மை என்பது தெரிய வந்ததையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி இது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து மதுரை ஜெய்ஹிந்துபுரம் சரக மாநில வரி அலுவலராக பணிபுரியும் சசிகலா, மதுரை வணிக வரித்துறை அலுவலகத்தில் மாநில துணை வரி அலுவலராக பணிபுரியும் கணேசன், மாநில துணை வரி அலுவலர் பாலகுமார் ஆகிய 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    • ஆட்டோவில் கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • ஆட்டோவில் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவையும், வாள், கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

    அங்கு ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த திருநகர் நெல்லையப்பபுரம் மலைச்சாமி மகன் அஜய்(21), தனக்கன்குளம் கார்த்திகா நகர் பாலகிருஷ்ணன் மகன் கண்ணன்(32), தனக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் தெரு மாரியப்பன் மகன் தீபக்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர். ஆட்டோவில் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவையும், வாள், கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 1 கோடி பேர் பங்கேற்றனர்.
    • இந்தியாவே திரும்பி பார்க்கிற வகையில் இந்த மாநாடு அமையும்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் வார்டு எண் 94,95, 96, மதுரை கிழக்கு தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த இலக்கியேந்தல், பனைக்குளம், ராஜாக்கூர், திண்டியூர், கருப்பாயூரணி,, வெள்ளி யங்குளம், அரும்பனூர், காதக்கிணறு, புதுப்பட்டி, சிட்டம்பட்டி, பூலாம்பட்டி, கொடிக்குளம், நரசிங்கம், ஒத்தக்கடை, திருமோகூர், புது தாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

    திருப்பரங்குன்றத்தில் நடந்த முகாமிற்கு திருப்ப ரங்குன்றம் கிழக்குப்பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தற்போது தி.மு.க. விழுந்து கொண்டு வருகிறது. நமக்கு இது சரியான தருணமாகும். தி.மு.க. தனது பலவீனத்தை மறைக்க உறுப்பினர் சேர்க்கையை தேடிச் செல்கிறது. ஆனாலும் யாரும் சேரவில்லை. இன்றைக்கு அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையில் மக்கள் ஆர்வமாக இணைந்து வருகின்றனர். இதன் மூலம் நாம் பலம் வாய்ந்த இயக்கமாக உள்ளோம்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் திருப்ப ரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலூர் ஆகிய 3 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் தலா 1 லட்சம் வீதம் 3 லட்சம் உறுப்பி னர்களை சேர்த்து விட வேண்டும். அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் எடப்பாடியாரின் கரங்களால் விருதுகள் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் அனுமதி இல்லாமல் மதுபார்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள்தோறும் பல லட்சம் ரூபாய் வரை சென்று கொண்டி ருக்கிறது. எத்தனை மது பார்கள் உரிமை பெற்றது? என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் பாரம்பரியமிக்க, கலாச்சார மிக்க செங்கோல் வைப்பது நமக்கு பெருமையாகும்.

    வருகிற ஆகஸ்டு 20-ந் தேதி மதுரை ரிங் ரோடு அருகே 50 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் மாநாடு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இதில் ஒரு கோடி தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவே திரும்பி பார்க்கிற வகையில் இந்த மாநாடு அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இலவச அமரர் ஊர்தி வசதி அதிகளவில் ஏற்படுத்தி தரவேண்டும்.
    • அமைச்சரிடம் பூமிநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.

    மதுரை

    மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பூமிநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிக நோயாளிகள் வருகை தரக்கூடிய அரசு மருத்துவ மனையாக மதுரை ராஜாஜி மருத்துவமனை உள்ளது.

    இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வயது முதிர்ந்த நோயாளிகள் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைவதும், விபத்தில் பலியாகும் உடல்கள் பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதும் அதிகளவில் உள்ளது.

    நாள் ஒன்றுக்கு 20-க்கும் மேற்பட்ட மரணம் அடைந்த வர்களின் உடல் அவர்களின் சொந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல போதிய இலவச அமரர் ஊர்தி இல்லாமல் அதிக நேரம் மருத்துவ மனையில் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

    இங்கு சிகிச்சை பலனின்றி விபத்துக்கு உள்ளாகி இறப்பவர்கள் அதிகம் பேர் ஏழை குடும்பத்தினர் தான். அவர்களுக்கு தனியார் அமரர் ஊர்தியில் பணம் செலுத்தி உடலை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

    எனவே அரசு சார்பில் அதிக அளவில் இலவச அமரர் ஊர்தி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் ரூ.2928 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்படும்.
    • நகராட்சிகளுக்கு திடக்கழிவு வாகனங்கள், எல்.இ.டி. விளக்குகள் வாங்கப்பட்டு உள்ளன.

    மதுரை

    மதுரை நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒபுளாபடித்துறை பாலம் திறப்பு விழா, அலங்கா நல்லூர், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, திருமங்கலம், திருப்பரங் குன்றம், சேடப்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றியங்களில் கட்டப்பட்டு உள்ள 1191 ஊரக குடியிருப்பு களுக்கான கூட்டு குடிநீர் திட்ட தொடக்க விழா ஆகி யவை இன்று மதுரையில் நடந்தது.

    நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மேற்கண்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர வின்படி மதுரை மாவட்டத் தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வரு கிறது. அதன்படி ரூ.188 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள், ரூ.2.18 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால், ரூ.21.4 கோடி மதிப்பில் கல்வி வேளாண்மை திட்டப்பணிகள் நடை பெற்றுள்ளது.

    ரூ.15 கோடி மதிப்பில் தெருவிளக்குகள் எல்.இ.டி. பல்புகளாக மாற்றப்பட்டு உள்ளது. ரூ.347.8 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    ரூ.58.2 கோடி மதிப்பில் நீர்நிலைகள் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது. ரூ.5 கோடி மதிப்பில் மின் மயானம் அமைக்கும் பணி கள் நடந்து வருகின்றன. ரூ.2.88 கோடி மதிப்பில் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.14.7 கோடி மதிப்பில் புதிய சந்தைகள் உருவாக்கப் பட்டுளது. ரூ.6.9 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. ரூ.2.50 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ரூ.2.37 கோடி மதிப்பில் பள்ளி கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. இதர மாநகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகள் ரூ.54.8 கோடியில் நடந்து வருகிறது.

    மதுரை மாநகராட்சிக்கு இந்த அரசு ஒரு ஆண்டில் மட்டும் ரூ.217.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மதுரை மாவட்ட நகராட்சியான மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி யில் ரூ.27.25 கோடி செல வில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. மேலும் நகராட்சிகளுக்கு திடக்கழிவு வாகனங்கள், எல்.இ.டி. விளக்குகள் வாங்கப்பட்டு உள்ளன.

    மேலும் பல கோடி ரூபாய் மதிப்பில் பூங்காக்கள், மயானங்கள், புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. திருமங்கலத்தில் நவீன பஸ் நிலையம் அமைக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் மணிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு ரூ.107.46 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. மாநகராட்சியில் ரூ.717 ேகாடி மதிப்பிலும், நகராட்சிக்கு ரூ.95 கோடி மதிப்பிலும், குடிநீர் வடிகால் வாரிய திட்டத்திற்கு ரூ.2008 கோடி என மதுரை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.2928 கோடியே 30 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. வரும் காலங்களில் இன்னும் அதிக வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தமிழ கத்தின் 2-வது தலை நகரமாகவும், கோவில் நகர மாகவும் விளங்கும் மதுரைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அமைச்சர் பழனி வேல் தியாகராஜன், மதுைர மாவட்டத்தில் முத்தாய்ப் பான திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் நேருக்கு நன்றி தெரிவித்தார்.

    இந்த விழாவில் அமைச்சர் ராஜகண்ணப் பன், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், வெங்கடேசன் எம்.பி, மேயர் இந்திராணி, நகராட்சி நிர்வாக இயக்கு னர் பொன்னையா, கலெக் டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, தி.மு.க. நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×