search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. மாநாட்டில் 1 கோடி பேர் பங்கேற்பு
    X

    புதிய உறுப்பினர் சேர்க்கையை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அருகில் நிர்வாகிகள் ரமேஷ்,முருகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

    அ.தி.மு.க. மாநாட்டில் 1 கோடி பேர் பங்கேற்பு

    • மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 1 கோடி பேர் பங்கேற்றனர்.
    • இந்தியாவே திரும்பி பார்க்கிற வகையில் இந்த மாநாடு அமையும்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் வார்டு எண் 94,95, 96, மதுரை கிழக்கு தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த இலக்கியேந்தல், பனைக்குளம், ராஜாக்கூர், திண்டியூர், கருப்பாயூரணி,, வெள்ளி யங்குளம், அரும்பனூர், காதக்கிணறு, புதுப்பட்டி, சிட்டம்பட்டி, பூலாம்பட்டி, கொடிக்குளம், நரசிங்கம், ஒத்தக்கடை, திருமோகூர், புது தாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

    திருப்பரங்குன்றத்தில் நடந்த முகாமிற்கு திருப்ப ரங்குன்றம் கிழக்குப்பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தற்போது தி.மு.க. விழுந்து கொண்டு வருகிறது. நமக்கு இது சரியான தருணமாகும். தி.மு.க. தனது பலவீனத்தை மறைக்க உறுப்பினர் சேர்க்கையை தேடிச் செல்கிறது. ஆனாலும் யாரும் சேரவில்லை. இன்றைக்கு அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையில் மக்கள் ஆர்வமாக இணைந்து வருகின்றனர். இதன் மூலம் நாம் பலம் வாய்ந்த இயக்கமாக உள்ளோம்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் திருப்ப ரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலூர் ஆகிய 3 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் தலா 1 லட்சம் வீதம் 3 லட்சம் உறுப்பி னர்களை சேர்த்து விட வேண்டும். அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் எடப்பாடியாரின் கரங்களால் விருதுகள் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் அனுமதி இல்லாமல் மதுபார்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள்தோறும் பல லட்சம் ரூபாய் வரை சென்று கொண்டி ருக்கிறது. எத்தனை மது பார்கள் உரிமை பெற்றது? என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் பாரம்பரியமிக்க, கலாச்சார மிக்க செங்கோல் வைப்பது நமக்கு பெருமையாகும்.

    வருகிற ஆகஸ்டு 20-ந் தேதி மதுரை ரிங் ரோடு அருகே 50 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் மாநாடு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இதில் ஒரு கோடி தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவே திரும்பி பார்க்கிற வகையில் இந்த மாநாடு அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×