என் மலர்tooltip icon

    மதுரை

    • பூரண மதுவிலக்கிற்காக ச.ம.க. இறுதிவரை போராடும் என்று சரத்குமார் பேசினார்.
    • இந்தியாவின் இளை ஞர்களின் அறிவை முடக்கி வைப்பதில் வெளி நாட்டு சதி உள்ளது.

    மதுரை

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் கலந்துகொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் போதை பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. போதையால் இளைஞர்களின் அறிவு, ஆற்றல் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.

    போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். போதை பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தாலும் அதனை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    இந்தியாவின் இளை ஞர்களின் அறிவை முடக்கி வைப்பதில் வெளி நாட்டு சதி உள்ளது, போதை பொருள்கள் பல்வேறு ரூபங்களில் இந்தியாவில் ஊடுருவி வருகின்றது. மதுபான கடைகளுக்கு சென்று மதுபானங்கள் வாங்காமல் இருந்தால் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும். அதன் மூலம் மதுவிலக்கை அமல்படுத்த முடியும்.

    மக்கள் நினைத்தால் மட்டுமே மதுவை முற்றிலுமாக ஒழிக்க முடியும். ரூ.40ஆயிரம் கோடி வருவாய்க்காக, மதுவை அரசு விற்க கூடாது, மதுபான வருவாய்க்கு மாற்றாக பிற வருவாய் என்ன கிடைக்கும் என தமிழக அரசு சிந்தித்து பார்க்க வேண்டும்.

    அறிவு, ஆற்றல் இருந்தும் தமிழக இளைஞர்கள் மதுவால் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். பூரண மதுவிலக்கிற்காக சமத்துவ மக்கள் கட்சி இறுதி வரை போராடும். சமத்துவ மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பணி பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

    தமிழகத்தில் பணம் இல்லா அரசியல் நடைபெறவில்லை. தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல்கள் ராணுவ பாதுகாப்பில் நடைபெற வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும் என்றால் மக்களின் எண்ணங்கள் ஒன்றிணைய வேண்டும். மக்களுக்காக மாதந்தோறும் பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதன்படி மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் பொது க்கூட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வரவேற்று பேசினார். மதுரை மாவட்ட செயலாளர்கள், புறாமோகன்(மத்தி), பாலமேடு கார்த்திக்(வடக்கு), மாநில வர்த்தக அணி துணை செயலாளர் கதிரேசன், மாவட்ட செயலாளர்கள் பஞ்சு, சிவாஜி, பூமிநாதன் ஆகியோர் தலைமை மற்றும் முன்னிலை வகித்தனர்.

    கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சுந்தர், முதன்மை துணை பொதுச்செயலாளர் கணேசன், கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன் உள்பட நிர்வாகிகள் விளக்க வுரையாற்றினர். முடிவில் மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ரவி நன்றி கூறினார்.

    • துக்க வீட்டில் தகராறு; 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் சேதுபதி தெருவை சேர்ந்தவர் முனியசாமி (வயது 38). இவரது சகோதரர் மணிகண்டன்(35). இவர்களுக்கும் உறவினர் சுப்பிரமணி(58) என்பவ ருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று வில்லாபுரத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு முனிய சாமி, மணிகண்டன் சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த சுப்பிர மணிக்கும், இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இரு தரப்பினரும் ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் சுப்பிர மணி, முனியசாமி, மணி கண்டன் ஆகிய 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கரு. கருப்பையா பாட்டு பட்டிமன்றம் நடக்கிறது.
    • இரவு 7 மணிக்கு ஓ.ஆர். கண்ணன் குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள குச்சம்பட்டியில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் 120-ம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்று வருகிறது.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 31-ந் தேதி மதியம் அன்னதானமும், இரவு 9 மணிக்கு பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா நடுவராக பங்கேற்கும் சிரிப்பு-பாட்டு பட்டிமன்றமும் நடக்கிறது.

    மதுரை கீழ மாரட் வீதி பந்தடி 4-வது தெருவில் உள்ள பழைய கோண அரசமரம் பிள்ளையார் கோவிலில் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் 11.15 மணிக்குள் விமரிசையாக நடைபெறுகிறது.

    அன்று மாலை 6 மணிக்கு ஓ.வி ஆர்.எம்.ராஜ்குமார் தலைமையில் சிரிப்பு பட்டிமன்ற நடுவரும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பேரவை தலைவருமான திருப்புவனம் கரு.கருப்பையா பங்கேற்கும் நகைச்சுவை சொல் அரங்கம் நடக்கிறது.

    இதனையடுத்து இரவு 7 மணிக்கு ஓ.ஆர். கண்ணன் குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

    • மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஜெயராஜ், அய்யனார், ராமகிருஷ்ணன், பாலமுருகன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    7-ம் நாள் மண்டகப்படியாக சோழவந்தான் விஸ்வகர்மா ஐந்திணை தொழிலாளர்கள் சார்பில் அக்கசாலை விநாயகர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்ட நீதிபதி சுந்தர்ராஜ், சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், தி.மு.க. பேரூர் செயலாளரும், 9-வது வார்டு கவுன்சிலருமான வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

    ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் கண்ணன், மணி, அங்குசாமி, நாகு ஆசாரி, பிச்சைமணி, முருகன், ஜெயராஜ், அய்யனார், ராமகிருஷ்ணன், பாலமுருகன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

    • சாக்கடை மூடாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
    • சாக்கடையை மூடி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் மெயின் ரோடு 100 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பாக தோண்டிய சாக்கடையை மூடாததால் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் அந்த சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இந்தக் கழிவு நீர் சாலையிலும் ஓடுகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சாக்கடையின் அடைப்பை சரி செய்து கழிவு நீர் தடையின்றி செல்லும்படி செய்ய வேண்டும் என்றும், சாக்கடையை மூடி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாநில அளவிலான கூடைப்பந்தாட்டபோட்டி நடந்தது.
    • சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் உள்ள அரசு சண்முகனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சோழவந்தான் கூடைப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான கூடைபந்தாட்ட போட்டி 4 நாட்கள் நடைபெற்றது.

    முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் கொரியர் கணேசன் தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழக முழுவதிலும் இருந்து 24 அணிகள் பங்கேற்றன. முதல் பரிசினை சோழவந்தான் அணியும், 2-ம் பரிசினை வத்தலகுண்டு அணியும், 3-வது பரிசினை ஜேப்பியார் சென்னை அணியும், 4-வது பரிசினை ஆர்.சி.பி.சி. மதுரை அணியும் பெற்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஆகியோர் பரிசு கோப்பையையும் சன்மானமும் வழங்கினர்.

    சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • சோழவந்தானில் பாசன கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.
    • விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் விவசாய பூமியாகும். இங்கு முல்லை பெரியாறு பாசன நீர் மூலம் 3 போகம் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தின் களஞ்சியமாக விளங்கும் சோழவந்தானில் பொதுப்பணித்துறை அதி காரிகளின் மெத்தனத்தால் விவசாயம் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

    சோழவந்தானில் உள்ள வடகரை கண்மாயில் இருந்து வைகை ஆறு வரை 40அடி கால்வாய் முற்றிலும் தூர்ந்துபோய் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள 200 ஏக்கருக்கு மேற் பட்ட விவசாய நிலங்கள் தண்ணீர் வசதி பெறமுடியாமல் உள்ளன. மேற்கண்ட கால்வாயை தூர்வார வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ஆனால் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படாததால் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்க வலை விரித்து வருகின்றன.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு மழையின்போது ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் 40 அடி கால்வாயை தூர்வாரி தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே இதுதொடர்பாக அமைச்சர் மற்றும் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலைக்கான காரணம் குறித்து 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சரவணகுமார்.இவரது மகன் காந்திராஜன் (வயது 28). வேன் டிரைவரான இவர் மதுரை ஜீவாநகரில் பகுதியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மதுரை தெற்குவாசல் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த தெற்குவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காந்தி ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப் பதிந்தனர். கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அந்த தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் காந்தி ராஜன் காதல் விவகாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டதும், அவர் காதலித்து வந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரே அவரை தீர்த்து கட்டிய அதிர்ச்சி தகவலும் வெளியானது.

    மதுரை கீரைத்துறையை சேர்ந்த மாயழகு என்பவரின் மகளை காந்திராஜன் காதலித்து வந்தள்ளார். இதற்கு மாயழகுவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இருந்த போதிலும் அந்த இளம் பெண்ணுடன் காந்திராஜன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த மாயழகின் மகன் காளிதாஸ் (21), 17 வயது சிறுவனான மற்றொரு மகன் ஆகிய இருவரும் காந்திராஜனை வெட்டி கொலை செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து காந்தி ராஜன் கொலை கொலை தொடர்பாக மாயழகு மற்றும் அவரது 2 மகன்களையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் 3 பேரும் இன்று போலீசாரிடம் சிக்கினர். கொலைக்கான காரணம் குறித்து 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சாப்டூர் வனப்பகுதியில் மதுவிலக்கு போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 100 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
    • அந்தப் பகுதியில் டிரம்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் சாப்டூர் வனப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்று தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாப்டூர் கும்பமலை வனப் பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் திருமங்கலம் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு இளவரசன் இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம் மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்தப் பகுதியில் டிரம்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. போலீசார் அவற்றை சோதனை இட்டபோது டிரம்களில் சாராய ஊறல் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து

    அந்த டிரம்களில் இருந்த சுமார் 100 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். மேலும் அந்தப் பகுதியில் சாராய ஊறல்களை பதுக்கி வைத்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் கள்ளச்சாராய புழக்கத்தை தடுப்பதற்காக அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.

    மதுரை

    மதுரை பைபாஸ் ரோடு திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் என்ற சோனையா (42). சத்யா நகரை சேர்ந்த ராஜா, நவீன்.

    இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து முத்துக்குமார் செல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் ராஜா, நவீன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்வி என்பவர் கொடுத்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார் என்ற சோனனை யாவை கைது செய்தனர்.

    • மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வந்தது. .
    • அரசு ஆஸ்பத்திரிக்கு எளிதாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது



    புதிதாக திறக்கப்பட்டுள்ள ஓபுளாபடித்துறை பாலத்தில் வந்த வாகனங்கள் மோதி இன்று விபத்து ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகரின் முக்கிய பகுதியான கோரிப்பாளையம் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, அரசு மருத்துவக்கல்லூரி அமைந்துள்ளது. தென் மாவட்டத்தின் மிக முக்கிய மருத்துவமனையாக இது உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகன பயன்பாடு அதிகம் காணப்படுகிறது.

    இதுபோல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், ஊழியர்கள், பயிற்சி டாக்டர்கள் மற்றும் 200-க்கும் குறைவில்லாத ஆம்புலன்சுகள் தினமும் பயணிக்கும் முக்கியமான சாலையாகவும் உள்ளது.

    இந்த நிலையில் மதுரை வைகை ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட ஓபுளாபாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ள பனகல் சாலையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க ஒருவழிப்பாதையாக மாற்ற போலீசார் திட்டமிட்டு போக்குவரத்து மாற்றத்தை இன்று நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.

    அதன்படி கோரிப்பா ளையம் சந்திப்பில் இருந்து ஆவின் சந்திப்பு நோக்கி செல்லக்கூடிய வாகன போக்குவரத்தில் மாற்றம் இல்லை. திருவள்ளுவர் சிலை, அண்ணா பஸ் நிலை யத்தில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி செல்லக்கூடிய அரசு பஸ் மற்றும் வர்த்தக வாகனங்கள் பனகல் சாலை-சேவாலயம் சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு, இடதுபுறமாக திரும்பி வைகை வடகரை சாலையின் வலதுபுறமாக சென்று செல்லூர், தத்தனேரி மற்றும் திண்டுக்கல் சாலைக்கு செல்ல வேண்டும்.

    தமுக்கம், தல்லாகுளம் செல்லும் வாகனங்கள் வைகை வடகரை சாலையை பயன்படுத்தி குமரன் சாலையில் வலதுபுறமாக திரும்பி பாலம் ஸ்டேஷன் சாலை, கோரிப்பாளையம் வழியாக செல்ல வேண்டும்.

    சிம்மக்கல் வழியாக பெரியார் பஸ் நிலையம் செல்லும் பஸ்கள் வைகை வடகரை சாலை வழியாக புதிதாக கட்டப்பட்ட ஓபுளா பாலம், முனிச்சாலை சந்திப்பு, யானைக்கல் வழியாக செல்ல வேண்டும். இதன் மூலம் ஏ.வி. பாலத்தின் போக்குவரத்து நெருக்கடி குறையும்.

    ஆனால், மருத்துவ மனைக்கு செல்லும் டாக்டர்கள், ஊழியர்கள் சிவசண்முகம்பிள்ளை சாலை கிழக்கு வாசல் வழியாக ஆஸ்பத்திரிக்கு செல்லலாம். சிவசண்மு கம்பிள்ளை சாலையில் இருந்து கோரிப்பாளை யத்திற்கு வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்புலன்சுகள் வைகை வடகரை, சிவ சண்முகம்பிள்ளை சாலை, மருத்துவமனை கிழக்கு வாசல் மற்றும் கோரிப்பா ளையம் சந்திப்பு வழியாக மருத்துவமனைக்கு செல்லலாம்.

    இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக சில வாகன ஓட்டிகள் அவதிபட்டனர். சிறுசிறு விபத்துக்கள் ஏற்பட்டன. இந்த விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • மதுரை மாநகர பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் சிக்கினர்.
    • மது விற்ற 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பகுதியில் சினிமா தியேட்டர் எதிரே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் 2-வது தெருவைச் சேரந்த காஜா மைதீன் (40) என்பது தெரியவந்தது.

    அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா, ரூ.9,740 ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்ற குற்றத்திற்காக காஜா மைதீனையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் ரோடு சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நாகமலை மேலக்குயில்குடியை சேர்ந்த முருகன் (54) என்பவரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவையும், ரூ.14 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் திருமங்கலம் என்.ஜி.ஓ. நகர் 4-வது தெருவை சேர்ந்த திவ்யதர்ஷன் என்பவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்தபோது அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மது விற்பனை

    மதுரை அவனியாபுரம், திருநகர், திடீர்நகர், சுப்பிரமணியபுரம், திலகர்திடல், கரிமேடு, அண்ணாநகர் உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விறபணை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது மது விற்பனை செய்த 26 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 105 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×