என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சென்னை விமான நிலையத்தில் போலி டிக்கெட் வைத்திருந்த என்ஜீனியர் அதிகாரிகள் சோதனையில் சிக்கினார்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் நுழைவு பகுதி வழியாக வாலிபர் ஒருவர் சென்றார். சிறிது நேரத்தில் அவர் அதே வழியாக திரும்பி வந்தார்.

    சந்தேகம் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் வேளச்சேரியை சேர்ந்த என்ஜினீயர் மகேஷ்வரன் என்பதும், மும்பைக்கு செல்ல இருந்ததாகவும் கூறினார். அவர் வைத்திருந்த டிக்கெட்டை சோதனை செய்த போது, போலியானது என்பது தெரிந்தது.

    மகேஷ்வரன், சென்னை விமான நிலையத்துக்குள் பெண் தோழி ஒருவருடன் வந்து இருக்கிறார். அவருடன் விமான நிலைய புறப்பாடு பகுதி வரை உள்ளே செல்வதற்காக போலி டிக்கெட்டுடன் வந்தாரா? அவருக்கு போலி டிக்கெட் கொடுத்தது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
    வண்டலூரில் திருமண மண்டபம் முன்பு மர்ம கும்பலின் திடீர் தாக்குதலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தொடரும் கொலை சம்பவத்தால் வண்டலூர் பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    கூடுவாஞ்சேரி:

    அரக்கோணத்தை அடுத்த புளியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 35) விவசாயி. இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இவர்களது உறவினர் திருமணம் வண்டலூர் மேம்பாலம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. நேற்று இரவு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அரிதாஸ் உறவினர்களுடன் வண்டலூருக்கு வந்து இருந்தார்.

    திருமண மண்டபம் முன்பு அரிதாஸ் நின்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்தனர்.

    அதிர்ச்சி அடைந்த அரிதாஸ் தப்பி ஓட முயன்றார். அவரை 4 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அரிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருமண மண்டபம் முன்பு நடந்த இந்த கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருமணத்துக்கு வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    சிலர் கொலையாளிகளை பிடிக்க முயன்றனர். கல்வீசியும் தாக்கினர். உஷாரான கொலை கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. கொலையுண்ட அரிதாசுக்கு அதே பகுதியை சேர்ந்த சிலருடன் மோதல் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் திருமணத்துக்கு செல்வதை அறிந்த மர்ம கும்பல் அரக்கோணத்தில் இருந்து பின் தொடர்ந்து வந்து கொலை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர்.

    கூடுவாஞ்சேரி, வண்டலூர் பகுதியில் கடந்த 3 நாட்களில், 3 கொலைகள் நடந்த உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் அருள்பதி, புரட்சி பாரதம் கட்சி பிரமுகர் எம்.ஜி. முருகன் ஆகியோர் தீர்த்து கட்டப்பட்டனர். தொடரும் கொலை சம்பவத்தால் வண்டலூர் பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    மாமல்லபுரத்தில் ஷேர் ஆட்டோ - கார் மோதிய விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த போது அவ்வழியே மற்ற வாகனங்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
    மாமல்லபுரம்:

    மணமையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி ஷேர் ஆட்டோ வந்தது. அதில் 9 பேர் பயணம் செய்தனர்.

    பூஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த கார் திடீரென ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து சுமார் 20 அடி தூரத்துக்கு ரோட்டில் உரசியபடி சென்றது.

    இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் இருந்த ஒருவரது கால் முறிந்தது. மேலும் 8 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதேபோல் காரில் பயணம் செய்த ராயப்பேட்டையை சேர்ந்த சுரேந்தர் உள்பட 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து நடந்த போது அவ்வழியே மற்ற வாகனங்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
    கேளம்பாக்கம் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 2 பேரை பிடித்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த தாழம்பூர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 45). தொழிலாளி. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

    நேற்று மாலை இவரது அண்ணன் மகளின் கணவரான சந்தானம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் மோட்டார் சைக்கிளில் தாழம்பூரில் உள்ள தனியார் தோட்டம் அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது 4 பேர் கும்பல் அவரை வழிமறித்து தாக்கினர். இதுபற்றி அறிந்ததும் கஜேந்திரன் அங்கு வந்தார். உடனே அவரை 4 பேரும் சேர்ந்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே கஜேந்திரன் பலியானார்.

    இது குறித்து தாழம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கஜேந்திரன் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நீலகண்டன், கார்த்திக், மணி, சபாபதி ஆகிய 4 பேரும் கஜேந்திரனை தீர்த்துக் கட்டியது தெரிந்தது.

    நேற்று காலை கமலக்கண்ணன் மானாம்பதியில் உள்ள மனைவியை பார்க்க நண்பர் ஒருவருடன் வந்து இருக்கிறார். அப்போது கமலக்கண்ணனின் நண்பர் மட்டும் தனியாக தாழம்பூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பெண் ஒருவரிடம் பேசி இருக்கிறார்.

    இதனை நீலகண்டன் உள்பட 4 பேரும் கண்டித்துள்ளனர். இதில் ஏற்பட்ட மோதலில் மோட்டார் சைக்கிளை பறித்து அவரை விரட்டியடித்தனர்.

    இதுபற்றி அறிந்த கஜேந்திரன், 4 வாலிபர்களையும் தாக்கி மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளார். இந்த மோதலில் கமலக்கண்ணனை தாக்கி கஜேந்திரன் வெட்டி கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

    இந்த கொலை தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்க் ஊழியர் அவரது மனைவியுடன் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வழிப்பறி கொள்ளையர்கள் பணப்பையை பிடித்து ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் திருமேட்ரலீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரேம். இவரது மனைவி புவனேஸ்வரி.

    காஞ்சீபுரம் ரெங்கசாமி குளம் காளத்தி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பிரேம் மானேஜராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி புவனேஸ்வரி அங்கு கிளர்க் ஆக உள்ளார்.

    தினமும் பிரேம் பெட்ரோல் பங்கில் வசூலாகும் பணத்தை இரவில் வீட்டுக்கு எடுத்து சென்று மறுநாள் காலையில் பாங்கியில் செலுத்துவது வழக்கம்.

    நேற்று வசூலான பணம் ரூ.5 லட்சத்தை பிரேம் பையில் வைத்து வீட்டுக்கு எடுத்து சென்றார். இன்று காலையில் பிரேம் அவரது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்குக்கு சென்று கொண்டிருந்தார்.

    காலை 6 மணியளவில் காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளின் பின்னால் பையில் ரூ.5 லட்சம் பணத்தை வைத்திருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் பணப்பையை பிடித்து இழுத்தனர். இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பிரேமும், அவரது மனைவியும் கீழே விழுந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் ரூ.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதுகுறித்து பிரேம் விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து காயம் அடைந்த புவனேஸ்வரி காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை பல்லாவரத்தில், நித்யானந்தா சீடர்கள்- பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த ஜமீன்பல்லாவரம் பச்சையம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு காலி இடத்தில் நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சீடர்கள் சிலர் தங்கி உள்ளனர். இங்கு ஆசிரமம் போல் வைத்து, ஏ.சி. வசதியுடன் கூடிய கன்டெய்னர்களில் பெண் சீடர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.

    இந்த இடம் தொடர்பாக அந்த பகுதியில் ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டு பொதுமக்களுக்கும், நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பெண்களை நித்யானந்தா சீடர்கள், தங்கள் ஆசிரமத்தில் வந்து சேரும்படி வற்புறுத்தியதாகவும், மேலும் அந்த வழியாக செல்லும் பெண்களை பார்த்து கிண்டல் செய்ததாகவும் கூறி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், ஜமீன்பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஆண்களிடம் தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நித்யானந்தா சீடர்கள் தங்கி இருந்த இடத்துக்கு சென்றனர். அங்கு கோபி நித்யானந்தா சொருபானந்தா என்பவரிடம் இது தொடர்பாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள், திடீரென நித்யானந்தா சீடர்கள் தங்கி இருந்த கன்டெய்னர்களை அடித்து நொறுக்கினர். அங்கு போடப்பட்டு இருந்த இரும்பு ஷெட்டுகளையும் பிடுங்கி எறிந்து சூறையாடினர்.

    மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நித்யானந்தா ஆசிரமத்துக்கு சொந்தமான பிரசார வாகனங்கள், கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அப்போது பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கு நின்றிருந்த ஒரு காரையும் கீழே கவிழ்த்து போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பல்லாவரம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக நித்யானந்தா ஆசிரமம் தரப்பில் பல்லாவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், 3 பெண்கள் உள்பட 13 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓ.பன்னீர்செல்வம் எங்கள் அணிக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். கதவுகள் திறந்தே இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

    ஆலந்தூர்:

    அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    டெல்லியில் நடக்கும் ஜி.எஸ்.டி. வரி தொடர்பான 17-வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்கிறேன்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஜெயலலிதா அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு நிறைய சலுகைகளை அறிவித்து உள்ளது. அவர்கள் நலன் கருதி ஜி.எஸ்.டி. கவுன்சிலில் வரி விகிதம் குறைக்க எடுத்துரைக்கப்படும்.

    தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார். அந்த கனவு அவரை தூங்கவிடவில்லை. தூங்காமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்.

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவர் எப்படியாவது முதல்- அமைச்சராக வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்.

    அதனால்தான் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து இருக்கிறார். அதில் எந்தவித நியாயமும் இல்லை.

    ஏற்கனவே அ.தி.மு.க. அரசின் மீது சட்டசபையில் நம்பிக்கை கோரும் போது சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் செய்த கேலிக்கூத்து மக்கள் அறிந்ததே. திரைப்படத்தில் வரும் வசனத்தை போல ‘‘செவ்வாழைத் தோட்டத்தில் குத்தாட்டம் போடும் குரங்குகள்’’ என்பது போல இருந்தது.

    ஜெயலலிதாவின் அரசை கலைக்க வேண்டும் என்று உள்நோக்கத்தோடு செயல்படும் ஸ்டாலினின் செயல்பாடுகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.


    எங்களைப் பொறுத்த வரை ஓ.பன்னீர்செல்வம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். கதவுகள் திறந்தே இருக்கிறது. இந்த கருத்தை ஏற்று ஓ.பன்னீர் செல்வம் வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமனத்தில் திருநாவுக்கரசின் நடவடிக்கைக்குக்கு எதிராக, மாற்றப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்ரீ பெரும்புதூர் பஸ் நிலையத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    ஸ்ரீ பெரும்புதூர்:

    தமிழக காங்கிரசில் 72 மாவட்ட தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்கள் பெரும்பாலானவர்கள் மாற்றப்பட்டனர். ப.சிதம்பரம், தங்கபாலு ஆதரவாளர்களில் ஒரு சிலருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஸ்ரீ பெரும்புதூர் பஸ் நிலையத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சி வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வி.ஆர் சிவராமன் தலைமை தாங்கினார்.

    இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள கூடாது என்று நிர்வாகிகள் எச்சரிக்கப்பட்டனர். அதையும் மீறி ஏராளமானவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தில் பதவி நீக்கப்பட்ட வெளி மாவட்ட தலைவர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவியும் பங்கேற்றார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிமுத்துவும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டார்.

    உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்தின் அருகே பல்வேறு வாசகங்களுடன் பேனர் வைக்கப்பட்டுள்ளன.
    ஆதம்பாக்கத்தில் ராட்சத குடிநீர் தொட்டி உதவி பொறியாளர் அலுவலகத்தை 60-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் பரமேஸ்வர் நகர் பாலகிருஷ்ணபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களாக சரியாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரித்தனர்.

    ஆனாலும் நடவடிக்கை எடுக்காததால் இன்று ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகரில் உள்ள ராட்சத குடிநீர் தொட்டி உதவி பொறியாளர் அலுவலகத்தை 60-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினர். தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    வண்டலூர் அருகே தினமும் மீன் பிடிக்கும் ஏரியில் முதலை நடமாட்டம் உள்ளதால் கிராமமக்கள் பீதியில் உள்ளனர்.

    தாம்பரம்:

    பெருங்களத்தூர் அருகே நெடுகுன்றம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் வண்டலூர் உயிரியல் பூங்கா பின்புறம் உள்ள வனப் பகுதியில் அமைந்து இருக்கிறது.

    இக்கிராமத்தில் உள்ள ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் அப்பகுதி மக்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    இரவு ஏரியில் வலைகளை போட்டு விட்டு காலையில் மீன்பிடிப்பார்கள். அது போல் இன்று காலை ஏரியில் மீன் பிடிக்க வந்தபோது வலையில் முதலை ஒன்று சிக்கி கொண்டு துள்ளியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 6 அடி நீளமுள்ள அந்த முதலை வலைகளை கடித்து கொண்டு தண்ணீருக்குள் சென்றுவிட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கிராமமக்கள் ஏரியில் திரண்டு விட்டனர்

    தினமும் மீன் பிடிக்கும் ஏரியில் முதலை நடமாட்டம் உள்ளதால் கிராமமக்கள் பீதியில் உள்ளனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தின் அருகில் உள்ள வண்டலூர் பூங்காவில் முதலைகள் குஞ்சு பொரிக்கும் போது அதை பறவைகள் தூக்கி கொண்டு வந்து ஏரியில் போட்டு விடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கூடுவாஞ்சேரியில் கள்ளக்காதல் தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடுவாஞ்சேரி:

    சின்ன காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் அருள்பதி (35). இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்தார்.

    நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இவர் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் அவரை உருட்டுக் கட்டையால் சரமாரி அடித்து உதைத்தது. பிறகு அவரை வெட்டி படுகொலை செய்தனர்.

    இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சலிடவே கும்பல் தப்பி ஓடிவிட்டது.

    அருள்பதிக்கும், மாடம்பாக்கம் வள்ளலார் நகரை சேர்ந்த உஷா என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது.

    இதனால் உஷாவின் உறவினர்கள் அருள்பதியை கண்டித்தனர். ஆனால் அவர் கேட்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வேறு சிலருடன் சேர்ந்து அருள்பதியை வெட்டி கொன்றது தெரிய வந்தது.

    எடப்பாடி பழனிசாமி அரசு பா.ஜனதா கட்டுப்பாட்டில் உள்ளது என்று தி.மு.க மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    தி.மு.க மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு தானாக இயங்கவில்லை. மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்குவதாக ஏற்கனவே நாங்கள் கூறியிருந்தோம்.

    தற்போது பா.ஜனதாவின் சில தலை வர்கள் இதை வெளிப் படை யாகவே ஒப்புக் கொண்டிருக் கின்றனர். இந்த அரசு சுயமாக சிந்தித்து மக்களுக்காக நடை பெறும் ஆட்சியாக தெரிய வில்லை. இது பா.ஜனதா கட்டுப்பாட்டில் தாக் உள்ளது.

    அ.தி.மு.க எம்.எல்.ஏ.க் களுக்கு பணம் தந்த விவகாரம் பற்றி விசா ரணை நடத்தப்பட வேண் டும். கவர்னரை சந்தித்து அதற்காக மனு தரப்படும். தேவைப்பட்டால் ஜனாதி பதியை சந்திப்போம் என தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.


    ஜனாதிபதி தேர்தல் குறித்து பா.ஜனதா கட்சி தற்போது தான் எதிர்க்கட்சி மற்றும் மற்ற கட்சி தலைவர்களை சந்தித்து பேச தொடங்கியுள்ளது. எல்லோரும் ஒன்றுகூடி வேட்பாளரை நிறுத்துவதற்கு பிரச்சினை இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆதார் அட்டை கட்டாயம் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. ஆதார் அட்டை இன்னும் அனைவருக்கும் முழுமையாக கிடைக்க வில்லை. அரசு உதவித் தொகை பெறவும், வங்கி கணக்கு தொடங்குவது போன்ற வற்றுக்கும் கட்டாயம் என கூறியுள்ளனர். ஆதார் அட்டை இல்லாதவர்களின் நிலையை மத்திய அரசு நினைத்து பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×