என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரத்தில் ஷேர் ஆட்டோ - கார் மோதல்: 13 பேர் படுகாயம்
    X

    மாமல்லபுரத்தில் ஷேர் ஆட்டோ - கார் மோதல்: 13 பேர் படுகாயம்

    மாமல்லபுரத்தில் ஷேர் ஆட்டோ - கார் மோதிய விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த போது அவ்வழியே மற்ற வாகனங்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
    மாமல்லபுரம்:

    மணமையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி ஷேர் ஆட்டோ வந்தது. அதில் 9 பேர் பயணம் செய்தனர்.

    பூஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த கார் திடீரென ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து சுமார் 20 அடி தூரத்துக்கு ரோட்டில் உரசியபடி சென்றது.

    இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் இருந்த ஒருவரது கால் முறிந்தது. மேலும் 8 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதேபோல் காரில் பயணம் செய்த ராயப்பேட்டையை சேர்ந்த சுரேந்தர் உள்பட 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து நடந்த போது அவ்வழியே மற்ற வாகனங்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
    Next Story
    ×