என் மலர்

  செய்திகள்

  கேளம்பாக்கம் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை
  X

  கேளம்பாக்கம் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேளம்பாக்கம் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 2 பேரை பிடித்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருப்போரூர்:

  கேளம்பாக்கத்தை அடுத்த தாழம்பூர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 45). தொழிலாளி. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

  நேற்று மாலை இவரது அண்ணன் மகளின் கணவரான சந்தானம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் மோட்டார் சைக்கிளில் தாழம்பூரில் உள்ள தனியார் தோட்டம் அருகே சென்று கொண்டு இருந்தார்.

  அப்போது 4 பேர் கும்பல் அவரை வழிமறித்து தாக்கினர். இதுபற்றி அறிந்ததும் கஜேந்திரன் அங்கு வந்தார். உடனே அவரை 4 பேரும் சேர்ந்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே கஜேந்திரன் பலியானார்.

  இது குறித்து தாழம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கஜேந்திரன் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நீலகண்டன், கார்த்திக், மணி, சபாபதி ஆகிய 4 பேரும் கஜேந்திரனை தீர்த்துக் கட்டியது தெரிந்தது.

  நேற்று காலை கமலக்கண்ணன் மானாம்பதியில் உள்ள மனைவியை பார்க்க நண்பர் ஒருவருடன் வந்து இருக்கிறார். அப்போது கமலக்கண்ணனின் நண்பர் மட்டும் தனியாக தாழம்பூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பெண் ஒருவரிடம் பேசி இருக்கிறார்.

  இதனை நீலகண்டன் உள்பட 4 பேரும் கண்டித்துள்ளனர். இதில் ஏற்பட்ட மோதலில் மோட்டார் சைக்கிளை பறித்து அவரை விரட்டியடித்தனர்.

  இதுபற்றி அறிந்த கஜேந்திரன், 4 வாலிபர்களையும் தாக்கி மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளார். இந்த மோதலில் கமலக்கண்ணனை தாக்கி கஜேந்திரன் வெட்டி கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

  இந்த கொலை தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

  Next Story
  ×