என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான ஸ்ரீபெரும்புதூர் ஏரி, மணி மங்கலம் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி ஆகியவை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 136 ஏரிகள் உள்ளன.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குன்றத்தூர் ஒன்றியம் பகுதியில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 79 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. இதனால் கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான ஸ்ரீபெரும்புதூர் ஏரி, மணி மங்கலம் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி ஆகியவை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
மணிமங்கலம் ஏரியால் 2,029 ஏக்கர் விவசாய நிலங்களும், ஸ்ரீபெரும்புதூர் ஏரியால் 1,423 ஏக்கர், பிள்ளைப்பாக்கம் ஏரியால் 1096 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இதில் மணிமங்கலம் ஏரி 225 மில்லியன் கன அடியும், ஸ்ரீபெரும்புதூர் ஏரி 234 மில்லியன் கனஅடியும், பிள்ளைப்பாக்கம் ஏரி 122 மில்லியன் கன அடியும் கொள்ளளவு கொண்டது.
மணிமங்கலம் ஏரியால் இருந்து வெளியேறும் தண்ணீர் வரதராஜபுரம் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் வெள்ளம் சூழ்ந்தது. இந்த தண்ணீர் அடையாறு ஆறுவழியாக செல்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிமங்கலம் ஏரியை தூர்வாரும் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தற்போது இந்த ஏரி நிரம்பி உள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடம்பத்தூரை அடுத்த பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் சப்பார் ஏரி உள்ளது. இதனை நம்பி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 300 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.
ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி போதிய பராமரிப்பு இல்லாததால் இதன் இரண்டு மதகுகளும் சேதமடைந்துள்ளன. தற்போது ஏரி முழுவதும் நிரம்பி கலங்கல் வழியே தண்ணீர் வீணாக கூவம் ஆற்றுக்குள் செல்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆண்டாவது சப்பார் ஏரியை தூர்வாரி மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
தாம்பரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளால் மழைநீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கிறது.
இதைபோல் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. திரும்பிய திசை எல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
நேற்று காலை முதல் மழை இல்லாததால் புறநகர் பகுதி மக்கள் நிம்மதி அடைந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கனமழை கொட்டியது. இன்று காலையும் பலத்த மழை பெய்தது.
இதனால் வெள்ள நீர் வடிந்திருந்த இடங்களில் மீண்டும் மழைநீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் வெள்ள பீதியில் உள்ளனர்.
தாம்பரம் சி.டி.ஓ. காலனி, முடிச்சூர் கிருஷ்ணா நகர், வரதராஜபுரம், பி.டி.சி. காலனி, பார்வதி நகர், ராயப்பா நகர், அஷ்டலட்சுமி நகர் பகுதிகளில் தொடர்ந்து மழைநீர் தேங்கி கிடக்கிறது. கடந்த 5 நாட்களாக வீட்டில் இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். பெரும்பாலானோர் வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதேபோல் பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவ பெரியார் நகர் பகுதிகளில் தெருக்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இன்று காலையும் மழை பெய்ததால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.
பெங்களத்தூரில் உள்ள அரசு பள்ளி நிவாரண முகாமில் 400 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆதனூர் முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் திருமண மண்டபத்தில் தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தொடர் மழை காரணமாக ஆதனூர், மணிமங்கலம், மதனபுரம், மகாலட்சுமி நகர், செம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஏரிகள் முழுவதும் நிரம்பி வழிகிறது. ஏரிகளில் இருந்து வெளியேறும் நீர் அருகில் உள்ள குடியிருப்புகளில் புகுந்துள்ளன.
வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

முடிச்சூரில் மழை நீரை வடிய வைப்பது பெரும் சவாலாக இருக்கிறது என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியுள்ளார்.
சென்னை:
சென்னையை அடுத்த தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் அங்குள்ள சித்தேரி, மாடம்பாக்கம் ஏரி, செம்பாக்கம் ஏரி, சேலையூர் ஏரி, இரும்புலியூர் ஏரி, பீர்க்கன்கரணை ஏரி, ராஜகீழ்ப்பாக்கம் ஏரி, கூடுவாஞ்சேரி ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியும் நிரம்பி விட்டது. இதனால் ஆங்காங்கே மழை நீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னை புறநகர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பார்வையிட்டு தண்ணீர் வேகமாக வழிந்தோட அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவு பிறப்பித்து வருகிறார். அவருடன் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் உடன் சென்று நிவாரண பணிகளை முடுக்கி விடுகிறார்.
மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அமுதா, கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகளும் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர்.
மதுராந்தகம் ஏரி நிரம்பி உள்ளதால் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் ஏரி பகுதிக்கு இன்று நேரில் சென்று பார்த்தனர். ஏரி திறக்கப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசித்தனர். அதன் பிறகு சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிக்கும் சென்று மழை நீரை வடிய வைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் கே.பி. அன்பழகன் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியில் 20.5 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இதன் கொள்ளளவு 23.3 அடியாகும். தற்போது வரும் உபரி நீர் கிளியாற்றில் விடப்படுகிறது. இதனால் கிளியாற்று கரையில் உள்ள முள்ளி, முன்னூத்திகுப்பம், கே.கே.புதூர், உழுதமங்கலம், விழுதமங்கலம், தச்சூர், அருங்குணம், தேவாதூர் உள்ளிட்ட 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் பகுதிகளில் உள்ள சிறிய ஏரிகள் நிரம்பி தண்ணீர் வழிந்தோடுவதால் சுற்று வட்டார பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்ற ஏரிகளின் உபரி நீர் தொடர்ந்து வருவதால் இப்பகுதியில் மழை நீரை வடிய வைப்பது பெரும் சவாலாக அமைந்துள்ளது. அதிகாரிகள் மீட்பு குழு வினருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
தற்போது ஆதனூரில் உள்ள நிவாரண முகாமில் 48 பேரும், பெருங்களத்தூர் முகாமில் 250 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான சாப்பாடு, குழந்தைகளுக்கு பால், பிரட் போன்றவற்றை வழங்கி வருகிறோம்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண ரூ.600 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரூ.263 கோடியில் உபரி தண்ணீரை கடலில் விட மற்றொரு திட்டமும் தயாரிக்கப்படுகிறது.
தற்போது மழை நீர் சூழ்ந்துள்ள ஊர்களில் வெள்ளத்தை வடிய வைக்க அரசு இயந்திரங்கள் வேகமாக செயல்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் அதிகாரிகள் குழுவினர் ரோந்து சுற்றி நிலைமைகளை கண்காணித்து வருகின்றனர். நாங்களும் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தாம்பரம் ஏரி, வடகால், ஆத்தூர், சோமங்கலம், வையாவூர் உள்ளிட்ட 170 ஏரிகள் நிரம்பியது.
காஞ்சீபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் ஏரிகள் உள்ளதால் இதனை ஏரி மாவட்டம் என்று அழைக்கின்றனர்.
மாவட்டத்தில் சுமார் 924 ஏரிகள் பொதுக்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தாம்பரம் ஏரி, வடகால், ஆத்தூர், சோமங்கலம், வையாவூர், உள்ளாவூர், புத்தேரி, அவளுர், களியனூர் உள்ளிட்ட 175 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளது.
மேலும் தாமல், தென்னேரி, உத்திரமேரூர் ஏரி, செங்கல்பட்டு கொளவாய் ஏரி, மணிமங்கலம் ஏரி, தையூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5800 ஏக்கர் பரப்பளவில் உள்ள தென்னேரி ஏரியின் கொள்ளளவு 18 அடி. இந்த ஏரியை நம்பி பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி நடைபெறுகிறது.
ஏரியில் தற்போது நீர் இருப்பு 14.5 அடியாக உயர்ந்து உள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பள்ளிப்பாக்கம், மணிமங்கலம் ஏரிகள் மற்றும் திருப்போரூரை அடுத்த மானாம்பதி, தய்யூர் ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் செங்கல்பட்டு தாலுகாக்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள் 75 சதவீதம் நிரம்பி விட்டன. ஏரிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து அதனை சுற்றி உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக குடியிருப்புப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஏரியின் முழு கொள்ளவான 23 அடியில் தற்போது 20 அடி நீர் உள்ளது. இதன் காரணமாக அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர் கிளியாற்றின் வழியாக திறந்து விடப்பட்டு வருவதால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அணையின் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும், புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.

நீலாங்கரையில் இளம்பெண் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
சோழிங்கநல்லூர்:
திருவான்மியூர் மருதீஸ்வரர் தெருவை சேர்ந்த சினேகா (17). அடையாறு எல்.பி. சாலையில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2-ந் தேதி சினேகா நீலாங்கரையில் பிணமாக கிடந்தார். உடலை போலீசார் கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சினேகா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
விசாரணையில் சினேகாவும், அவருடன் பணி புரியும் பிரபாகரன் என்பவரும் காதலித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே சினேகா மரணத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர்.
இதைதொடர்ந்து காதலன் பிரபாகரன், சீத்தாராமன் இருவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சீத்தா ராமனை தேடி வருகின்றனர்.

சென்னையில் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் எற்பட்டது. இதனால் விமான நிலையத்துக்கு செல்லும் விமானிகள், பணிப்பெண்கள், பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக 42 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆலந்தூர்:
சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. சாலையில் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்துக்கு செல்லும் விமானிகள், பணிப்பெண்கள், பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியவில்லை.
இதன் காரணமாக உள்ளூர், வெளிநாடுகளுக்கு செல்லும் 42 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. விமானிகள், பயணிகள் வந்த பிறகு விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்றன.

கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பழைய கட்டிடத்துக்குள் மழை தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டன.
தாம்பரம்:
கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பழைய கட்டிடத்துக்குள் மழை தண்ணீர் புகுந்தது.
கீழ் தளத்தில் உள்ள மகப்பேறு பிரிவு வார்டுகளுக்குள் தண்ணீர் சென்றதால் அங்கிருந்த 50 பெண்கள் மற்றும் குழந்தைகள் உடனடியாக முதல் தளத்துக்கு மாற்றப்பட்டனர்.
இதே போல் மருந்து, மாத்திரைகள் கொடுக்கும் இடம் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. மருத்துவமனைக்குள் புகுந்த தண்ணீரை மோட்டார் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.
‘‘இந்த ஆஸ்பத்திரி பழைய கட்டிடம். தாழ்வான பகுதி என்பதால் மழை நீர் புகுந்து உள்ளது. நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

புதிய கட்டிடம் கட்ட ஏற்கனவே ரூ.10 கோடி நிதியை அரசு ஒதுக்கி உள்ளது. இந்த பணி விரைவில் தொடங்கப்படும். மழை வெள்ளப்பாதிப்பை தடுக்கவும், உபகரணங்கள் வாங்கவும் ஆஸ்பத்திரிக்கு உடனடியாக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வெளிநோயாளிகள் பிரிவு வார்டு முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடக்கிறது.
இதே போல் அருகில் உள்ள காசநோய் தடுப்பு மருத்துவமனைக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

மழை பாதிப்பு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை என்று குற்றம்சாட்டி முடிச்சூர் சாலையில் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் ரோட்டில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் செல்கிறது.
பெருங்களத்தூர் மற்றும் இரும்புலியூர் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் அடையாறு ஆற்றுக்கு செல்ல முடியாததால் முடிச்சூர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்து செல்கின்றன.
இந்த நிலையில் முடிச்சூர் சாலையில் இன்று காலை பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மழை பாதிப்பு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை என்று குற்றம் சாட்டினர்.
தகவல் அறிந்ததும் தாம்பரம் போலீசார் ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து அவ்வழியே வாகனங்கள் செல்ல பொது மக்கள் அனுமதித்தனர். தொடர்ந்து அங்கு பொது மக்கள் திரண்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
இதேபோல் திருநீர்மலை ஏரி, ராஜகீழ்ப்பாக்கம் ஏரி, மதனபுரம் ஏரிகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உள்ளது.
வரதராஜபுரம், பி.டி.சி. காலனி, மகாலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகர், ராயப்பா நகர், அமுதம் நகர் பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
பெருங்களத்தூர் கண்ணன் அவின்யூ, செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம், சிட்லபாக்கம், பொழிச்சலூர் தாங்கல் பகுதி, அனகாபுத்தூர், மப்போடு, திருவஞ்சேரி, இரும்புலியூர் உள்ளிட்ட இடங்கள் மழை வெள்ளத்தில் மிதக்கிறது.
பெருங்களத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பொது மக்கள் தங்குவதற்கு நிவாரண முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பூந்தமல்லி அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
பஸ்நிலையம், எம்.ஜி.ஆர். நகர், மாங்காட்டில் சாதிக் நகர், ஜனனி நகர், அம்மாள் நகர், செல்வகணபதி நகர், காட்டுப்பாக்கத்தில் செந்தூர்புரம், பி.ஜி.அவின்யூ பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.
இதேபோல் ஆவடி- பூந்தமல்லி சாலையில் சென்னீர் குப்பத்தில் மழை நீருடன் கழீவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
பழவேற்காட்டில் தொடர்ந்து கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. சூறைகாற்றும் வீசுகிறது.
பழவேற்காடு ஏரிக்கு மழை தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் சாட்டாங்குப்பம், பசியாவரம், இடமனிகுப்பம், ரகமத் நகர், இடையன் குப்பம், தாங்கல் பகுதியில் சாலைகளை வெள்ளம் மூழ்கடித்து உள்ளது. இதனால் மீனவ கிராம மக்கள் பழவேற்காடுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் படகுகளில் செல்லும் நிலை உருவாகி உள்ளது.
பழவேற்காடு ஏரியில் இருந்து முகத்துவாரம் வழியாக கடலுக்கு அதிவேகத்தில் மழைநீர் பாய்கிறது. தொடர்ந்து மழை நீடித்தால் மேலும் தண்ணீர் வரத்து அருகில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மீனவர்கள் தொடர்ந்து 4-வது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
திருநின்றவூர், பெரியார் நகர், முத்தமிழ்நகர், திருவெங்கட நகர், ராமதாஸ்புரம், கோமதிபுரம், இந்திரா நகர் இடங்களில் ஆயிரம் வீடுகள் மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. வீடுகளுக்குள் பாம்புகள், விஷபூச்சிகள் வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தண்டுரை ஏரிக்கு செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் குடியிருப்புக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது.
ஆவடி, கோவில்பதாகை, வசந்தம் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, திருமுல்லைவாயில் வைஷ்ணவி நகர், தென்றல்நகர், சரஸ்வதி நகர் பகுதியில் சாலையில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருநின்றவூர் ஈஷா ஏரி, தண்டுரை ஏரி, சேக்காடு ஏரி, கன்னடபாளையம் ஏரி, பருத்திப்பட்டு ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.
இன்னும் 2 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் ஏரி தண்ணீர் வெளியேறி குடியிருப்புக்குள் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஏரிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
கன மழையால் பொன்னேரி, கொக்குமேடு, ஏமதூர், ஏறுசிவன், பெரிய காவனம், தேவம்பட்டு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுமார் 600 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.

தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புகார்களுக்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்னர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும், உதவிகள் கோரவும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு பொது மக்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது. 3 நாட்களில் 350-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த 2015-ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் காஞ்சீபுரம் மாவட்டமே வெள்ளத்தில் மிதந்தது. நீர்வழிக்கால் வாய்கள் ஆக்கிரமிப்பே வெள்ளத்திற்கு காரணமாக இருந்தது.
இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டதிற்குட்பட்ட புறநகர் பகுதிகளான தாம்பரம், ஆலந்தூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழை பாதிப்புகள் குறித்த புகார்கள் அதிக அளவில் குவிகின்றன.
பெறப்படும் புகார்கள் மீது அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் பொன்னையா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது, “மழை வெள்ள முன்எச்சரிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. புகார் மீதும் நடவடிக்கை இல்லை” என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் வெளியே செல்ல முடியாமல் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
தாம்பரம்:
கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் சென்னை புறநகர் பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. குறிப்பாக தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
இன்று மழை இல்லாததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் மழை நீர் செல்ல வழியில்லாமல் அப்படியே உள்ளது.
முடிச்சூர், வரதராஜபுரம், மகாலட்சுமி நகர், ராயப்பநகர், அமுதம் நகர், பி.டி.பி. காலனி, அஷ்டலட்சுமி நகர் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. முடிச்சூர் சாலையில் இன்னும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் வெளியே செல்ல முடியாமல் தேங்கி கிடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மழை நீர் அடையாறு ஆற்றில் கலக்க வசதியாக வரதராஜபுரம் அருகே வெளிவட்ட சாலையில் உள்ள கால்வாயை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதற்கிடையே முடிச்சூர் பகுதியில் இன்றும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். அப்போது முடிச்சூர் பகுதியை தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தாம்பரம் சானட் டோரியத்தில் உள்ள வருவாய் கோட்ட அலுவலகத்தில் இன்று மதியம், வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

தொடர்மழை காரணமாக ஆவடி, பள்ளிக்கரணை, சேலையூரில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தாம்பரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
தொடர்மழை காரணமாக காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தாம்பரத்தை அடுத்த சேலையூர் ஏரி, திருநீர்மலை ஏரி, ராஜகீழ்ப்பாக்கம் ஏரி, மதனபுரம் ஏரி உள்பட 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. திருநீர்மலை பெரிய ஏரியில் உபரிநீர் நாட்டு கால்வாய் வழியாக வெளியேறுகிறது.
ஆவடியை அடுத்த கோவில் பதாகை ஏரி முழுவதும் நிரம்பி வழிகிறது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் லட்சுமிபுரம் ஏரி நிரம்பி உபரிநீர் சாலை வழியாக வெளியேறி புழல் ஏரிக்கு செல்கிறது.
சாலையில் இருந்து அருவி போல் கொட்டும் தண்ணீரில் பொது மக்கள் உற்சாக குளியல் போடுகின்றனர்.
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீரை மதகுகள் வழியாக மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றினர்.
ஆனால் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததால் தண்ணீர் செல்ல வழியின்றி அருகே உள்ள பள்ளிக்கரணை ஸ்ரீநகர், காந்தி நகர், லட்சுமி நகர், எல்.ஐ.சி. நகர், ராஜேஷ் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது.
இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது.
ஏரிகளின் நீர்மட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். கரைகளை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம் (மி. மீட்டரில்) வருமாறு:-
ஆர்.கே.பேட் - 2
செங்குன்றம் - 15