என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானிகள்- பயணிகள் வராததால் 42 விமானங்கள் தாமதம்
    X

    விமானிகள்- பயணிகள் வராததால் 42 விமானங்கள் தாமதம்

    சென்னையில் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் எற்பட்டது. இதனால் விமான நிலையத்துக்கு செல்லும் விமானிகள், பணிப்பெண்கள், பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக 42 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
    ஆலந்தூர்:

    சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. சாலையில் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்துக்கு செல்லும் விமானிகள், பணிப்பெண்கள், பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியவில்லை.

    இதன் காரணமாக உள்ளூர், வெளிநாடுகளுக்கு செல்லும் 42 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. விமானிகள், பயணிகள் வந்த பிறகு விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்றன.
    Next Story
    ×