என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுராந்தகம் ஏரி"

    • உத்திர மேரூர் ஏரி நிரம்பி நெல்வாய் மதகு வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • தனியார் பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கி வருவதால் மாணவர்கள் தண்ணீரில் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி, இந்த ஏரியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

    ஏரிதூர்வாரும் பணி 50 சதவீதம் நிறைவுற்று தற்போது மழை பெய்து வருவதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வந்தவாசி, செய்யார், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் செய்யாற்றில் இருந்தும் உத்திர மேரூர் ஏரி நிரம்பி நெல்வாய் மதகு வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஏரியில் கட்டுமான பணியின் காரணமாக ஏரியின் கரையை உடைத்து நீர் கிளியாற்றின் வழியாகவும் வெளியேற்றி வருகின்றனர்.

    தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை பரவலாக கனமழையாக பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு 1000 மி.கன அடி நீர் வருகிறது. தற்பொழுது, விநாடிக்கு 750 மில்லியன் கனஅடி நீர் வெளியேறி கிளியாற்றின் வழியாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து உள்ளது.

    அங்குள்ள தனியார் பள்ளியை சுற்றியிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இடுப்பளவு நீரில் தங்களது வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்குள்ள தனியார் பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கி வருவதால் மாணவர்கள் தண்ணீரில் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

    குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணவர்கள் தண்ணீரில் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
    • உத்திரமேரூர் ஏரி நிரம்பி நெல்வாய் மதகு வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி, இந்த ஏரியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

    ஏரி தூர்வாரும் பணி 50 சதவீதம் நிறைவுற்று தற்போது மழை பெய்து வருவதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வந்தவாசி, செய்யார், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் செய்யாற்றில் இருந்தும் உத்திரமேரூர் ஏரி நிரம்பி நெல்வாய் மதகு வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஏரியில் கட்டுமான பணியின் காரணமாக ஏரியின் கரையை உடைத்து நீர் கிளியாற்றின் வழியாகவும் வெளியேற்றி வருகின்றனர்.

    தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை பரவலாக கனமழையாக பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு 1000 மி.கன அடி நீர் வருகிறது. தற்பொழுது, விநாடிக்கு 750 மில்லியன் கன அடி நீர் வெளியேறி கிளியாற்றின் வழியாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து உள்ளது.

    அங்குள்ள தனியார் பள்ளியை சுற்றியிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இடுப்பளவு நீரில் தங்களது வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்குள்ள தனியார் பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கி வருவதால் மாணவர்கள் தண்ணீரில் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

    குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உழவர்களின் வாழ்வாதாரமாக திகழும் மதுராந்தகம் ஏரியை தூர்வாரி, சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
    • வரும் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சோழர் காலத்தில் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நான்காண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவடைய வில்லை.

    சீரமைப்புப் பணிகளால் கடந்த நான்காண்டுகளாக பயிர் சாகுபடி செய்யமுடியாமல் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், இதுகுறித்த அக்கறையும், கவலையும் சிறிதும் இல்லாமல் ஏரி சீரமைப்புப் பணிகளை தமிழக அரசின் நீர்வளத்துறை தமதப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

    மதுராந்தகம் ஏரி சீரமைப்புப் பணிகள் தாமதமாவதால், வேளாண்மை மட்டுமின்றி குடிநீர் வழங்கலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மதுராந்தகம் ஏரியை நம்பி முப்போகம் சாகுபடி செய்து வந்த விவசாயிகள், வாழ்வாதாரத்தையும் இழந்து, குடிநீருக்கும் திண்டாடும் நிலைமை இனியும் தொடர அனுமதிக்கக்கூடாது.

    பல்லாயிரக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரமாக திகழும் மதுராந்தகம் ஏரியை தூர்வாரி, சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். வரும் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பாண்டையும் சேர்த்து தொடர்ந்து 4 ஆண்டுகளாக மதுராந்தகம் ஏரி பாசன நிலங்களில் சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாலும், வயல்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டியிருப்பதாலும் ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.25,000 வீதம் நான்காண்டுகளுக்கு சேர்த்து ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வீதம் உழவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மதுராந்தகம் ஏரியின் மொத்த பரப்பளவு 2,561 ஏக்கர் ஆகும்.
    • ஏரிக்கு மழைக்காலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது.

    சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரி ஆகும். இந்த ஏரி 1000 ஆண்டுகளுக்கு முன்பு மதுராந்தகன் உத்தம சோழனால் கட்டப்பட்டது. அதன் பிறகு கடந்த 1798-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு இந்த ஏரியின் கரைகளை வலுப்படுத்தி உயர்த்தியது.

    கடந்த 1969-ம் ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்ட போது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இங்கு வந்து பார்வையிட்டார். அப்போது மதுராந்தகம் ஏரி இவ்வளவு பெரிய ஏரியாக உருவானதன் சிறப்புக்களை அறிந்து ஏரியை உடனடியாக தூர்வார உத்தரவிட்டார். அதன்பிறகு 50 ஆண்டுகளுக்கும் மேலாக மதுராந்தகம் ஏரி தூர் வாரப்படாமல் காணப்பட்டது.

    மதுராந்தகம் ஏரியின் மொத்த பரப்பளவு 2,561 ஏக்கர் ஆகும். இங்கு 694 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது. மேலும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து பாயும் கிள்ளியாறு மற்றும் உத்திரமேரூர் ஏரியில் இருந்தும் தண்ணீர் வருகிறது.

    இந்த ஏரி தண்ணீரின் மூலம் 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடப்பேரி, கத்தரிச்சேரி, அருங்குணம், மாரிபுத்தூர், திருவாதூர், நெசப்பாக்கம், கடுக்காப்பட்டு, நெல்வாய்பாளையம், மேல்பட்டு, மலையம்பாக்கம், பொன்னேரிதாங்கல் உள்ளிட்ட 60 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நீரை பயன்படுத்தி வருகிறார்கள்.

    மேலும் இந்த ஏரியில் இருந்து 30 சிறிய ஏரிகளுக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை பயிர் செய்கிறார்கள். இந்த ஏரி நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் இருந்ததால் ஏரி படுகையில் வண்டல் மண் படிந்து கடந்த 50 வருடத்தில் இந்த ஏரியானது அதன் மொத்த தண்ணீர் சேமிப்பில் பாதியை இழந்து விட்டது.

    இதன் கொள்ளளவு குறைந்ததால் வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாத ஆண்டுகளில் கூட இந்த ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி சிறிய நீர் நிலைகள் நிரம்பிய பின் வயல்களில் வெள்ளம் புகுந்தது. எனவே ஏரியை தூர்வாரி முழு கொள்ளளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது ஏரியை தூர்வாரி மதகுகளை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இதன் தண்ணீர் சேமிப்பு கொள்ளளவை 794 மில்லியன் கன அடியாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தூர்வாரும் பணிகள் தொடங்கியது.

    அதன் பிறகு சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதால் பணிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு மீண்டும் தூர்வாரும் பணிகள் தொடங்கியது. ஆனால் தூர் வாரும் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் இன்னும் முடிவடையாததால் தொடர்ந்து 4-வது ஆண்டாக பருவமழையின் போது மதுராந்தகம் ஏரியில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டு கோடையில் விவசாயிகள் இந்த ஏரி தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 60 கிராம மக்களும் வேதனைக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுராந்தகம் ஏரியில் வண்டல் மண்ணை தோண்டி தூர் வாரும் பணி 22 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மதகுகளை பலப்படுத்தும் பணி 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. உபரி நீரை வெளியேற்றுவதற்காக வடிகால் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. 1,500 மீட்டர் தூரத்துக்கு கான்கிரீட் சுவர் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 1,500 மீட்டர் நீளத்துக்கு 10 அடி உயரத்தில் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த ஏரியின் தூர்வரும் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×