என் மலர்
காஞ்சிபுரம்
தாம்பரம் அருகே வியாபாரி மீது தாக்குதல் நடத்திய கர்நாடக வாலிபர்கள் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
பல்லாவரம் நேரு நகரை சேர்ந்தவர் பாபு. பழைய இரும்பு வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர் பல்லாவரம் ரேடியல் சாலையில் புதிதாக கட்டப்பட்ட கட்டுமான நிறுவனத்தில் பழைய பொருட்களை வாங்க காண்டிராக்ட் எடுத்து இருந்தார்.
நேற்று இரவு பாபு உள்பட ஊழியர்கள் சிலர் அங்கிருந்த பழைய இரும்புகளை வண்டிகளில் ஏற்றினர். அப்போது 5 கார்களில் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அங்கு வந்தனர்.
அவர்கள் பாபுவிடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கினர். அங்கிருந்த ஊழியர்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பல்லாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட 11 பேரை மடக்கி பிடித்தனர். மேலும் 3 கார்களில் சிலர் தப்பி சென்று விட்டனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. பழைய இரும்பு பொருட்கள் வாங்குவது தொடர்பாக பாபாவுக்கும், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் தாக்குதல் நடந்திருப்பது தெரிய வந்தது.
கைதான 11 பேரிடம் இருந்து கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கைபற்றப்பட்டன. 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காஞ்சீபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை அவசர அவசரமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் பேட்டி அளித்தார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக சிவபக்தர் அண்ணாமலை என்பவர் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் 20-ந்தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி மனுவை புகார் மனுவாக பதிவு செய்யும்படி சிவகாஞ்சி போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஏகாம்பரநாதர் கோயில் மற்றும் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து சிலை செய்த தலைமை ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் வை.முருகேசன், கோவில் ஸ்தானிகர் ராஜப்பா உள்பட 9 பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த சிலை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பி.எம்.ஐ. என்ற அமெரிக்க எந்திரம் மூலம் சோதனை செய்யப்பட்டது. இந்த சிலையில் எள்ளளவு கூட தங்கம் இல்லை என்று சிலைகடத்தல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த சிலை தொடர்பாக காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த சிவபக்தர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சிற்ப ஆகம சாஸ்திரங்களை முறையாக பின்பற்றாமல் அவசரம் அவசரமாக பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி புதிய சோமஸ்கந்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவிலில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யும்போது அரசுக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தகவல் அளிக்கப்பட வேண்டும்.
புதிய சிலை பிரதிஷ்டை செய்ய உரிய ஏற்பாடுகள் செய்ய ஏறத்தாழ ஒரு மாதம் ஆகும். ஆனால் சோமஸ்கந்தர் சிலை பிரதிஷ்டை செய்ய மூன்றே நாட்களில் அனுமதி அளிக்கப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கடந்த 2016 டிசம்பர் மாதம் 5-ந்தேதி புதிய சிலை பிரதிஷ்டை செய்ய கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருக்கோவிலில் ஆகம விதிகளை மீறி நிகழ்ச்சி நடப்பதாக பக்தர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் போலீசாரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். தற்போது புதிய சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு அம்பலமாகி உள்ளது.
மேலும் திருக்கோவிலில் உள்ள பைரவர் விநாயகர், முருகர், திருவாட்சி சிலைகளும் மாயமானதாக சந்தேகப்படுகிறோம். எனவே அரசு இது குறித்தும் கோவில் நகைகள் குறித்தும் முழுமையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் காஞ்சீபுரத்தை சுற்றியுள்ள சிறு கிராம கோவில்களில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பஞ்சலோக சிலைகள் உள்ளது. அனைத்து கோவில்களிலும் அரசு ஆய்வு செய்து சிலைகள் மற்றும் ஆபரணங் களை கணக்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வழக்கில் பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். புலன் விசாரணை முடிந்து மோசடி கண்டுபிடிக்கப்பட்டால் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினி டுவிட்டரில் கருத்து கூறுவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனவும் களத்தில் இறங்கி சேவை செய்ய வேண்டும் எனவும் பிரமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி நிலையான ஆட்சி இல்லை. ஒக்கி புயல் பற்றி கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கை தவலும் கொடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதன் காரணமாக மத்திய- மாநில அரசுகள் மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் தமிழகம் வேண்டாம் கேரளாவுக்கு சென்று விடுகிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர். ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.
கவர்னர், தமிழகத்தில் பல இடங்களில் ஆய்வு செய்து வருகிறார். இதில் தவறு இல்லை. நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது செய்யட்டும். இதுவரை தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. யாராவது நல்லது செய்யட்டும்.
ஜனநாயக நாட்டில் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அவர்களை தேர்ந்து எடுப்பது மக்கள் சக்தி. ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு டுவிட்டரில் கருத்து கூறுவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. களத்தில் பேச வேண்டும், வாயில் அல்ல.

ரஜினியும் அரசியலுக்கு வரட்டும். அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் இல்லை. அவர் களத்தில் இறங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி செய்ததாக 9 பேரை கைது செய்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
காஞ்சீபும்:
காஞ்சீபுரத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சுமார் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமஸ்கந்தர் சிலை உள்ளது. இந்த சிலை சிதில மடைந்து காணப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த சிலையை புதிதாக தங்கத்தில் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான தங்கத்தை பெறுவதற்கு தமிழக இந்து சமய அறநிலையதுறை ஆணையரிடம் முறைப்படி அனுமதி கோரப்பட்டது.
இதன்படி கடந்த 2015-ம் ஆண்டு உரிய அனுமதி கிடைத்ததும் ஏகாம்பரேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சிலை செய்வதற்கு தங்கத்தை பெறுவதற்கான பொது அறிவிப்பை வெளியிட்டார்.
சோமாஸ்கந்தர் சிலையை செய்வதற்கு 5.75 கிலோ தங்கம் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டது. இந்த தங்கத்தை பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெற திட்டமிடப்பட்டது.
இதற்கான அறிவிப்பு வெளியானதும் பொதுமக்களும் சாமி சிலை செய்ய தங்களால் இயன்ற அளவு தங்கத்தை வழங்கினர். வசதி படைத்த பக்தர்கள் பலர் தங்கத்தை வாரி வழங்கினர்.
இதுபோன்று பெறப்பட்ட தங்கத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டினர். இதில் கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாகவும் புகார் கூறப்பட்டது.
இதற்கிடையே சோமாஸ் கந்தர் சிலை புதிதாக தங்கத்தால் செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 5.75 கிலோ தங்கத்தில் சிலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
புதிய சாமி சிலை கும்பகோணத்தை அடுத்த சுவாமி மலையில் தலைமை ஸ்தபதி முத்தையா தலைமையில் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
சோமாஸ்கந்தர் சிலையை செய்ததில் பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாக காஞ்சீபுரத்தைச் சேர்ந்த சிவபக்தர் அண்ணாமலை சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் செய்யப்பட்டது. ஆனால் இதுபற்றி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதனை தொடர்ந்துஅவர் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் 20-ந் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி மீனாட்சி வழக்குப்பதிவு செய்யும்படி சிவகாஞ்சி போலீசுக்கு உத்தரவிட்டார்.
இதன் பிறகும் 19 நாட்கள் வரையில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 10-ந்தேதி தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார்தாரர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தினார். வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
இதன்படி நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர் பின்னர் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் வைத்து சிலை செய்த தலைமை ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் முருகேசன், கோயில் ஸ்தானிகர் ராஜப்பா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதியதாக செய்யப்பட்ட சோமஸ்கந்தர் சிலை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பி.எம்.ஐ. என்ற அமெரிக்க எந்திரம் மூலம் சோதனை செய்யப்பட்டது.
அந்த சிலையில் எள்ளளவு கூட தங்கம் இல்லை. இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் தகவல்படி இந்த சிலையில் 5.75 கிலோ தங்கம் இருக்க வேண்டும். இந்த சிலையை தயாரித்த குஸ்தபதி முத்தையா இதில் 5.75 கிலோ தங்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதில் உண்மை இல்லை.
இதனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் கொண்ட குழு புலன்விசாரணை நடத்தி வருகிறது. புலன் விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டபோது எடுத்த படம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் முருகேசன் மற்றும் ராஜப்பா செந்தில், கிருஷ்ணமூர்த்தி, சங்கர்பரத், மாசிலாமணி, வினோத்குமார் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் இவர்களை கைது செய்யவும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சிவகாஞ்சி போலீசார் சிலை மோசடி விவகாரத்தில் அமைதி காத்து வந்த நிலையில் சிலை தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக களத்தில் இறங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடியின் பின்னணியில் இருக்கும் யாரும் தப்ப முடியாது. அனைவரும் சிக்குவார்கள் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
சோமாஸ்கந்தர் சிலையை தங்கத்தில் செய்யப் போவதாக கூறி 5.75 கிலோ தங்கத்தை சுருட்டி இருப்பதன் மூலம் ரூ.1½ கோடி அளவுக்கு இதில் மோசடி நடந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சிலையை செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து தாராளமாக தங்கம் பெறப்பட்டுள்ளது. இதுபோன்று பெறப்பட்ட தங்கம் 100 கிலோ வரையில் இருக்கும் என்றும் பக்தர்கள் புகார் கூறி உள்ளனர். இதுபற்றியும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஏகாம் பரநாதர் கோவில் நகைகள் முழுவதையும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மோசடி விவகாரம் பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏற்கனவே 2 சிலைகளும் மாயமாகியுள்ளன. கோவில் பள்ளியறையில் உள்ள சிவன் - பார்வதி சிலை கடந்த 1992-ம் ஆண்டு திருட்டு போனது. இதன் தொடர்ச்சியாக 1993-ம் ஆண்டு பாலமுருகர் சிலையும் காணாமல் போனது. இதிலும் எந்த துப்பும் துலங்காமலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews

காஞ்சீபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் புதிதாக செய்த சோமஸ்கந்தர் சிலையில் எள்ளளவு கூட தங்கம் இல்லை என்று போலீஸ் அதிகாரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்த பழமையான சோமஸ்கந்தர் சிலை சேதம் அடைந்து காணப்பட்டது. அதை பயன்படுத்த முடியாது என்பதால் புதிய சிலை செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அறநிலையத்துறையும் அனுமதி அளித்தது.
அந்த சிலையை செய்ய பக்தர்களிடம் இருந்து தங்கம் காணிக்கையாக பெறப்பட்டது. இதையடுத்து 5¾ கிலோ தங்கத்தால் கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் தலைமை ஸ்தபதி முத்தையா தலைமையில் சிலை செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு சோமஸ்கந்தர் சிலை உற்சவர் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அப்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்ததாகவும், பக்தர்களுக்கு தெரியும்படி விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் சிலை தயாரிப்பில் முறைகேடு நடந்து உள்ளதாக காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் அண்ணாமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி இதனை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சிலை செய்த தலைமை ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் முருகேசன், கோவில் ஸ்தானிகர் ராஜப்பா ஆகியோரை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர்.
இதனிடையே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் போலீசார், ஏகாம்பரநாதர் கோவிலில் ஏற்கனவே காணாமல் போன சிலைகள், ஆபரணங்கள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நிருபர்களிடம், ரகுபதி கூறியதாவது:-
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிதாக செய்யப்பட்ட சோமஸ்கந்தர் சிலை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பி.எம்.ஐ. என்ற அமெரிக்க எந்திரம் மூலம் சோதனை செய்யப்பட்டது. அந்த சிலையில் எள்ளளவு கூட தங்கம் இல்லை.
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் தகவலின்படி அந்த சிலையில் 5¾ கிலோ தங்கம் இருக்க வேண்டும். எனவே இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விசாரணை முடிவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தகவல் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
ஸ்ரீபெரும்புதூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் தேரடி சாலையில் கனரா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லை.
இன்று அதிகாலை ஏ.டி.எம். மையத்துக்கு வாடிக்கையாளர்கள் சென்ற போது ஏ.டி.எம். எந்திரம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் பெட்டியை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் தங்களது திட்டத்தை கைவிட்டு சென்று இருப்பது தெரிந்தது. இதனால் அதில் இருந்த பல லட்சம் தப்பியது.
அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தபோது நள்ளிரவு 12 மணியளவில் மர்ம வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பதும், பின்னர் பணத்தை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதும் பதிவாகி இருந்தது.
இந்த கொள்ளை முயற்சியில் மேலும் பலர் கூட்டாக செயல்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக கண்காணிப்பு காமிராவில் பதிவான வாலிபரின் உருவத்தை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திலும் போராட்டம் நடந்தது.
காஞ்சீபுரம் தலைமை அரசு ஆஸ்பத்திரி முன்பு இன்று டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதேபோல் செங்கல்பட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபட்ட டாக்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதை புறக்கணித்தனர். அவர்கள் கறுப்பு பேட்ஜ் திருவள்ளூர் அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பிரபுசங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த போராட்டத்தில் தனியார் மருத்துவர்கள், மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். டாக்டர்கள் போராட்டத்தால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை கைது செய்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிக்காடு மீனவ குப்பத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வாலிபர்கள் சிலர் மது போதையில் தகராறில் ஈடுபட்ட னர். இதனை அதே பகுதியை சேர்ந்த சல்ஜா நாராயணன் கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் அவரை தாக்கி தப்பிச்சென்றுவிட்டனர். இது குறித்து மாலமல்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ், ஹரியை கைது செய்தனர்.

ஆங்கில புத்தாண்டையொட்டி வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் குவிந்தனர். நேற்று மட்டும் 24 ஆயிரத்து 280 பேர் பூங்காவை சுற்றிப்பார்த்து உள்ளனர்.
வண்டலூர்:
சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள நடுத்தர மக்கள் குறைந்த பட்ஜெட்டில் குடும்பத்துடன் சுற்றி பார்க்கக்கூடிய சுற்றுலா தலம் வண்டலூர் உயிரியல் பூங்கா என்று கூறலாம். வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா பூங்காவுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
ஆங்கில புத்தாண்டு என்பதால் நேற்று சென்னை, தாம்பரம், வேளச்சேரி, மேடவாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, பூந்தமல்லி, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாமல்லபுரம் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து கூட்டம் கூட்டமாக பொதுமக்கள், குடும்பத்துடன் வந்து வண்டலூர் பூங்காவில் குவிந்தனர்.
அவர்கள் தங்கள் குடும்பத்துடன் பூங்காவில் உள்ள சிங்கம், புலி, யானை, கரடி, நீர்யானை, சிறுத்தை மற்றும் பறவைகள் ஆகியவற்றை சுற்றிப்பார்த்து ரசித்து, புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.
புத்தாண்டு தினமான நேற்று மட்டும் வண்டலூர் பூங்காவை 24 ஆயிரத்து 280 பேர் சுற்றிப்பார்த்தனர். வண்டலூர் பூங்காவை சுற்றிப்பார்த்த பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து அருகில் உள்ள கோவளம், மாமல்லபுரம், கடற்கரையை நோக்கி சென்றனர்.
புத்தாண்டு தினத்தில் பூங்காவுக்கு கூட்டம் அதிகமாக வரும் என்பதால் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் பூங்கா நிர்வாகம் செய்து இருந்தது. பொதுமக்கள் எந்தவிதமான சிரமமும் இன்றி வந்து செல்வதற்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணைந்து பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்களை இயக்கியது.
2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி ‘வார்தா’ புயலில் சிக்கி வரலாறு காணாத அளவுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா சேதம் அடைந்ததால், கடந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டு அன்று பூங்கா திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டுள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டதால் கவர்னர் கிரண்பேடி சென்னை விமான நிலையத்தில் தவித்தார்.
ஆலந்தூர்:
டெல்லியில் கடுமையான பனி மூட்டம் ஏற்பட்டுள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் ஏற்பட்ட பனி மூட்டம் காரணமாக சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமான சேவையிலும் சென்னை வரும் விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. 5-க்கும் மேற்பட்ட விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
புதுவை கவர்னர் கிரண்பேடி டெல்லி செல்வதற்காக இன்று காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அவர் 10.30 மணி அளவில் ‘ஜெட்ஏர்வேஸ்’ விமானம் மூலம் டெல்லி செல்ல இருந்தார்.
அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதால் அவர் சென்னை விமான நிலையத்தில் தவித்தார்.

வெளி மாநில பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு காண்டாமிருகம், இந்திய ராஜநாகம் கொண்டுவர தீவிர ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
வண்டலூர்:
வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த காண்டாமிருகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தது. இதே போல குளிர் சாதன அறையில் பராமரிக்கப்பட்டு வந்த இந்திய ராஜநாகமும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பரிதாபமாக இறந்தது.
ஆசியாவிலேயே மிக பெரிய பூங்காவான வண்டலூர் பூங்காவில் காண்டாமிருகம் மற்றும் இந்திய ராஜநாகம் இல்லாமல் இருப்பது பார்வையாளர்களுக்கு மிக பெரிய குறையாக இருந்து வருகிறது.
காண்டாமிருகம், இந்திய ராஜநாகம் ஆகியவற்றை மீண்டும் பூங்காவில் பார்வையாளர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பூங்கா அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது:-
இயற்கையான சூழலில் அமைந்துள்ள வண்டலூர் பூங்காவில் காண்டாமிருகம், இந்திய ராஜநாகம் போன்றவற்றை மீண்டும் பார்வையாளர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்படும்.
அதற்காக விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின்படி அசாம், பீகார் போன்ற வெளி மாநிலத்தில் உள்ள பூங்காவில் இருந்து காண்டாமிருகத்தை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதே போல இந்திய ராஜநாகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பூங்காவில் இருந்து கொண்டு வருவதற்கான பணிகள் தொடர்ந்து நடக்கிறது. மிக விரைவில் காண்டாமிருகம், இந்திய ராஜநாகத்தை வண்டலூர் பூங்காவில் பார்வையார்கள் பார்த்து ரசிக்கலாம்.
வண்டலூர் பூங்காவில் கடந்த ஆண்டு மட்டும் பூங்கா அடைப்பிடங்கள் மூலம் நெருப்புக்கோழி, சருகுமான், ஒநாய், காட்டுப்பூனை, காட்டெருமை, சாம்பல் நிற மலை அணில், நீல மான், நீர்யானை, சதுப்பு நிலமான், வெளிமான், கேளையாடு, தங்க நீல பஞ்சவர்ணக்கிளி, ஆப்பிரிக்க பழுப்பு நிறக்கிளி, காட்டுப்பன்றி போன்றவை வெற்றிகரமாக இனவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
சினிமாவில் நடித்து அரசியலுக்கு வந்தால் தலைவனாக்கி நாட்டை ஆள வைப்பார்கள் என்று நினைப்பதா?. கர்நாடகா, மராட்டியத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்க முடியுமா? என சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
ஆலந்தூர்:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுத்து உள்ளோம். திருக்குறள் இதைத்தான் கூறுகிறது. ரஜினி, படங்களில் நடிப்பதில் பிரச்சினை இல்லை. தலைவராக, முதல்- அமைச்சராக எங்களை ஆளுவதில்தான் சிக்கல் உள்ளது.
நான் ஆள்வது என்பது, என் உரிமை. வேறு ஒருவர் ஆள்வது என்பது, நான் அடிமை. நாங்கள் அடிமையாக வாழ தயாராக இல்லை. மன்னராட்சி காலத்தில் படை எடுத்து வந்து ஆண்டார்கள். இவர், படம் நடித்துவிட்டு வந்து ஆளுவாரா?.
காவிரியில் தண்ணீர் கேட்டபோது லட்சக்கணக்கானவர்களை சொந்த நாட்டில் அகதியாக அடித்து விரட்டினார்கள். அந்த ஜனநாயகத்தை யாரும் விவாதிக்கவில்லையே. யாரும் அப்போது பேசவில்லையே ஏன்?.
ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம். அவரை எதிர்த்துதான் அரசியல் செய்வோம். ரஜினி வருகை தமிழகத்தில் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வராது. எந்தந்த இடத்தில் ‘சிஸ்டம்’ சரி இல்லை என்பதை கூறமுடியுமா?.
பெங்களூரு, கோலார்தங்கவாயல், மராட்டியத்தில் வசித்தாலும் தமிழர்கள்தான். நீ தமிழன் என்று சொல்லி இனத்தை மாற்றினால் ஏமாற்றுகிறாய் என்றுதான் அர்த்தம். ரஜினி, விஷால் தமிழர்களாகி விட்டால், நாங்கள் யார்?.
வெள்ளைக்காரன் பல ஆண்டுகள் இந்தியாவில் ஆண்டதால் இந்தியன் ஆகிவிடமுடியுமா?. வெள்ளைக்காரன் நல்லவன் இல்லையா?. நாட்டில் பல திட்டங்களை கொண்டு வந்தது யார்?. 8 கோடி தமிழனில் நாட்டை ஆள யாருக்கு தகுதியில்லை, எல்லாரும் நேர்மையற்றவர்கள் என்று கூறுவதா?.
உலகத்திலேயே தமிழன்தான் சிறந்தவன். தமிழக மக்கள் ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றை விட்டுவிட்டு செத்துக்கொண்டு இருக்கிறார்கள். 2021-ம் ஆண்டு கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக ரஜினி கூறி உள்ளார். வரட்டும். தமிழகத்தை பார்த்து தற்போது எல்லாரும் சிரிக்கத்தான் செய்கின்றனர்.
ரஜினியை பாரதிய ஜனதா கட்சி இயக்குவதாக நினைக்கிறேன். அவரை பாரதிய ஜனதாதான் இறக்குகிறது. கமல்ஹாசன் மவுனமாக இருக்கும்போது இவர் பேசுவதும், இவர் மவுனமாக இருக்கும்போது அவர் பேசுவதற்கும் உத்தரவு வேறு இடத்தில் இருந்து வருகிறது.

ஆன்மிக அரசியல் எப்படி என்று எனக்கு தெரியவில்லை. சித்தர்கள், யோகிகள் வாழ்ந்த நிலம் தமிழகம். தன்னலமற்ற மக்களுக்கும், மண்ணுக்கும் உழைத்த மாபெரும் மேதைகள், தியாக செம்மல்கள் வாழ்ந்த பூமி இது. ஒரு தலைமுறை இளைஞர்கள் தன்னலமற்று உழைக்கத் தயாராகி வருகின்றனர். ஒரே நாளில் கட்சியை தொடங்கி, ஆட்சியை பிடிப்பது என்பது தமிழகத்தில் இனி சாத்தியமில்லை.
மன, இன உணர்வு கொண்ட இளைஞர்கள் எழுந்து வந்துவிட்டனர். ஆன்மிக அரசியல் புதிதாக இருக்கிறது. எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்போம். என்ன சேவை செய்யப்போகிறார். 2021-ம் ஆண்டு வரை வாய்த்திறக்கப் போவதில்லை.
‘ஒக்கி’ புயலில் சிக்கிய மீனவர்கள் இதுவரை திரும்பவில்லை. அவர்களை மீட்காமல் இந்த அரசு கைவிட்டு விட்டது. அனிதா இறப்புக்கு எல்லோரும் போனார்கள். நீங்கள் போகாதது ஏன்?. உங்களுக்கு தேவையென்றால் வருவீர்கள். இந்த மண்ணை என்னவாக நினைக்கிறீர்கள்.
சினிமாவில் நடித்து அரசியலுக்கு வந்தால் நம்மை தலைவராக்கி நாட்டை ஆள வைத்துவிடுவார்கள் என்று நினைப்பதா?. தமிழக மக்களை ஒரு இழிவான பார்வையாக பார்ப்பதா?. மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் கேடு கெட்ட ஒரு கூட்டம் அலைகிறது. கர்நாடகா அல்லது மராட்டியத்தில் அரசியல் கட்சி தொடங்க முடியுமா?.
மக்களுக்காக போராட்டங்களை நாங்கள் நடத்துவோம். நீங்கள் கோட்டைக்கு போய் ஆட்சி, அதிகாரம் செய்வீர்களா?. மக்களுடன் மக்களாக நின்று போராடுபவன்தான் மக்களின் வழிகாட்டியாக, தலைவனாக இருக்க முடியும். கட்சி ஆரம்பிக்க வேண்டும் என நினைப்பவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்த்து இருக்கலாமே. ஒரு அறிக்கையாவது தந்து இருக்கலாமே. ஏன் செய்யவில்லை.
நாட்டில் ஜனநாயகமே இல்லை. கேடு கெட்ட பணநாயகம்தான் இருக்கிறது. இந்தியாவில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று தமிழகத்தில் மட்டும் பேசுவது ஏன்?. 45 வருடம் நடித்துவிட்டேன். இனி ஒன்றும் செய்ய முடியாது என்பதால் தனக்கு கிடைத்த புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி ஒரு இன கூட்டத்துக்கு தலைவனாக வேண்டும் என்பது சந்தர்ப்பவாதம்தான்.
நாங்கள் சினிமாவில் இருந்துதான் வந்தோம். ஆனால் மக்களுக்காக போராடி சிறைக்கு சென்று பல தலைவர்களுடன் பழகி அரசியலுக்கு வந்தோம். என் இன வரலாறு தெரியாதவனுக்கு இங்கு என்ன வேலை. தமிழில் எத்தனை எழுத்துக்கள் இருக்கிறது. அதில் உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை, எதையும் பார்க்காமல் ரஜினி சொல்ல முடியுமா?.