என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரம்-திருவள்ளூரில் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திலும் போராட்டம் நடந்தது.
காஞ்சீபுரம் தலைமை அரசு ஆஸ்பத்திரி முன்பு இன்று டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதேபோல் செங்கல்பட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபட்ட டாக்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதை புறக்கணித்தனர். அவர்கள் கறுப்பு பேட்ஜ் திருவள்ளூர் அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பிரபுசங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த போராட்டத்தில் தனியார் மருத்துவர்கள், மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். டாக்டர்கள் போராட்டத்தால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Next Story