என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தற்போது பா.ஜனதா அரசை புரிந்து கொண்டுள்ளதாக கனிமொழி கூறியுள்ளார். #Thambidurai #ADMK #BJP #kanimozhi #DMK
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் இருக்கும் பா.ஜனதா அரசு தனக்கு எதிராக குரல் கொடுக்கும் பா.ஜனதா அல்லாத மாநில அரசுகளில் சி.பி.ஐ.யை ஏவி பிரச்சினை கொடுத்து வருகிறது.

    அப்படித்தான் மேற்கு வங்காளத்திலும் செய்து வருகிறது. அதற்கு எதிராக மம்தா பானர்ஜி குரல் கொடுத்து வருகிறார். இது பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும். எதிர்க்கட்சிகளும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்கும்.



    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தற்போது பா.ஜனதா அரசை புரிந்து கொண்டு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று சொல்லி இருக்கிறார். தற்போது பா.ஜனதாவை ஒருவர் புரிந்து கொண்டார். இதேபோல் அவருடன் இருக்கும் ஒவ்வொரு வரும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #ADMK #BJP #kanimozhi #DMK
    ஓ.பி.எஸ்.சை நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுப்பு தெரிவித்தது வேதனை அளிப்பதாகவும் அ.தி.மு.க.விடம் பாரதிய ஜனதா நட்பு காட்டவில்லை எனவும் தம்பிதுரை கூறியுள்ளார். #Thambidurai #ADMK #BJP #NirmalaSitharaman
    ஆலந்தூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வி.ல் எந்த ஒரு ஜனநாயக முடிவும் எடுப்பதாக தெரியவில்லை. மு.க.ஸ்டாலினை தவிர வேறு யாரும் பேசுவதாக இல்லை. மு.க.ஸ்டாலின் மற்ற கட்சிகளை பற்றி பேசுகிறார். மற்ற கட்சிகளுக்கு ஆலோசனை சொல்கிறார்.

    ஆனால் இவரைப் பற்றி யாரும் பேசுவது இல்லை. இது வேடிக்கையாக இருக்கிறது. தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

    ஒரு மத்திய அரசு பட்ஜெட்டை 5 முறை தாக்கல் செய்ய வேண்டும். மத்தியில் இருக்கும் பா.ஜனதா அரசு அதை ஏற்கனவே செய்து முடித்துவிட்டது. தற்போது 6-வது முறையாக தாக்கல் செய்தது. இதை வாக்கு வங்கிக்காகவும், தேர்தல் ஆதாயத்துக்காகவும் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்.

    பிரதமர் மோடி பட்ஜெட்டை ஒரு டிரெய்லர் என்றுதான் சொல்லி இருக்கிறார். சில நேரத்தில் டிரெய்லர் நன்றாக இருந்தாலும் படம் நன்றாக இருக்காது. இந்த பட்ஜெட்டை போல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு செய்திருக்கலாம். கடந்த 5 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் பட்ஜெட்டில் வரவில்லை. மாறாக தமிழகத்தின் உரிமைகள் தான் பறிபோய் இருக்கிறது.

    கஜா புயல் நிவாரண நிதி வரவில்லை, நீட் பிரச்சினை, காவிரி மேகதாது அணை பிரச்சினை எல்லாம் வேதனை அளிக்கிறது. ஜி.எஸ்.டி. என்று வந்ததோ அன்றே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எல்லாம் போய்விட்டது. பா.ஜனதாவினர் திராவிட கட்சிகளை வளரவிட மாட்டோம் என்று சொல்லி வருகிறார்கள்.



    அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்றபோது அவர் சந்திக்க முடியாது என்று சொன்னது வேதனை அளிக்கிறது. பா.ஜனதா அ.தி.மு.கவிடம் நட்புகாட்டவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #ADMK #BJP #NirmalaSitharaman
    மெரினா கடலில் குளிக்கும் போது மூழ்கிய 3 மாணவர்கள் உடல் கரை ஒதுங்கியது. மாணவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    தாம்பரம்:

    சேலையூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 14). இவர் தாம்பரத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் மதியம் உடன் படிக்கும் கிண்டியை சேர்ந்த வினோத் குமார் (14), சென்னை எம்.ஜி. ஆர். நகரை சேர்ந்த சதீஷ் (14) உள்பட 10 பேருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். பின்னர் அனைவரும் கலங்கரைவிளக்கம் அருகே குளித்தனர்.

    அப்போது ராட்சத அலை ஒன்று சதீஷ், செந்தில்குமார், வினோத்குமார் ஆகிய 3 பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. உடன் வந்த மாணவர்கள் காப்பாற்ற முயன்றும் முடிய வில்லை.

    கடலில் மூழ்கிய 3 பேரையும் கடலோர காவல் படை உதவியுடன் மெரினா போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மாணவர் செந்தில்குமார் உடல் பட்டினப்பாக்கம் கடற்கரையிலும், சதீசின் உடல் திருவான்மியூர் கடற்கரையிலும், வினோத் குமாரின் உடல் நீலாங்கரை கடற்கரையிலும் பிணமாக கரை ஒதுங்கியது. 3 பேரின் உடல்களும் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    பலியான 3 மாணவர்களும் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுவிட்டு மதியத்திற்கு பின்னர் நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்து உள்ளனர்.

    அப்போது அவர்கள் ஆபத்தான இடத்தில் கடலில் குளித்ததால் தண்ணீரில் மூழ்கி பலியாகிவிட்டனர். மாணவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இதற்கிடையே எச்சரிக்கையை மீறி சிறுவர்கள் கடலில் குளித்ததால் அவர்களுடைய பெற்றோர் மீதும், பள்ளி மாணவர்கள் குளித்தால் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் பள்ளிக்கு மாணவர்கள் வரவில்லை என்றால் அவர்களது பெற்றோருக்கு ஆசிரியர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    மதுராந்தகம் அருகே மதுவில் தண்ணீர் கலந்து விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த பவுஞ்சூரில் உள்ள சூரியன் காடு பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இதன் அருகே சிலர் அனுமதியின்றி மது பார் நடத்தி வருவதாகவும், டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி அதில் தண்ணீரை கலந்து விற்பனை செய்து வருவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் போலீசார் சூரியன்காடு பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் டாஸ்மாக் கடை அருகே உள்ள கட்டிடத்தில் அனுமதியின்றி மதுபார் நடத்தி வந்ததும் மதுவில் தண்ணீர் கலந்து விற்றதும் தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த 370 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக தஞ்சையை சேர்ந்த திவாகர், மணிகண்டன், ராகுல், சிவகுமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு சிறுத்தை குட்டியை விமானத்தில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு தாய் ஏர்வேஸ் விமானம் வந்தது. இதில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த முகைதீன் என்பவர் கையில் மூங்கில் கூடை எடுத்து வந்தார்.

    அதில் என்ன உள்ளது என்று சுங்க அதிகாரிகள் கேட்டபோது ‘வளர்ப்பு பிராணி’ உயர் ரக நாய் குட்டியை கொண்டு வருகிறேன் என்றார். அதன் மீது கர்ச்சீப் போட்டு மூடி இருந்ததால் அதை அதிகாரிகள் அகற்றி பார்த்தனர்.

    அப்போது கூடைக்குள் சிறுத்தை குட்டி இருந்ததை கண்டு பிடித்தனர். இதை விமானத்தில் கொண்டு வருவதற்கு உரிய சான்றிதழ் ஏதும் இல்லாததால் அதை அங்கேயே பறிமுதல் செய்தனர்.

    உடனடியாக மத்திய வன காப்பக குற்றபிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்து முகைதீனை ஒப்படைத்தனர். அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுத்தை குட்டியை வீடுகளில் வளர்க்க இந்தியாவில் தடை உள்ள நிலையில் இதை சென்னையில் யாருக்காக கொண்டு வந்தார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    வன உயிரின காப்பக அனுமதியோ, சுகாதார துறை அனுமதி சான்றிதழ் எதுவும் இல்லாததால் சிறுத்தை குட்டியை தாய்லாந்து நாட்டுக்கு விமானத்தில் திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
    சென்னை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா பிரமுகர் கல்யாண ராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    தாம்பரம்:

    சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் கல்யாண ராமன் பா.ஜனதா பிரமுகரான இவர் காக்கைச் சித்தர் கல்யாணராமன் என்ற பெயரில் முகநூலில் உள்ளார்.

    அவரது முகநூலில் ஒரு மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக கல்யாணராமன் மீது பல புகார்கள் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வந்தது.

    இதையடுத்து அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கல்யாணராமன் 153ஏ, 295,505 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருந்தனர்.

    இன்று காலை அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த கல்யாணராமனை விமான நிலையத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    அவரை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செங்கல்பட்டு அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள வில்லியம்பாக்கத்தை சேர்ந்தவர் முத்து. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

    சில தினங்களுக்கு முன்பு முத்து தனது குடும்பத்துடன் சோழிங்கநல்லூரில் இருக்கும் மகன் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் இன்று காலை வில்லியம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்த போது வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.35 ஆயிரம் ரொக்கப்பணம், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி.டி.வி. ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு அடுத்துள்ள நெம்மேலியில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல், அங்குள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதை கண்டு கூச்சலிட்டனர்.

    அப்போது, அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த போலீசார், கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர். இதில் ஒரு கொள்ளையன் போலீசாரிடம் சிக்கினான். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட கொள்ளையனிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
    பனையூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர் அடுத்த ஈசிஆர் சாலை பனையூர் நைனார் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா தொழிலதிபர்.

    இவர் கடந்த 27-ந்தேதி சென்னையில் உள்ள வங்கிக்கு காரில் சென்று ரூ.25 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

    காரை வீட்டின் எதிரே உள்ள காலி மைதானத்தில் நிறுத்தி விட்டு பணத்தை எடுக்காமல் வீட்டிற்கு சென்று விட்டார்.

    பின்னர் காரில் இருந்த பணத்தை எடுக்காமல் மறந்து வந்ததை உணர்ந்த பாத்திமா பணத்தை எடுக்க சென்றார். அப்போது கார் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு ரூ. 25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது

    அதிர்ச்சி அடைந்த பாத்திமா கானாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அன்று பாத்திமாவின் எதிர்வீட்டில் காவலாளியின் மருமகன் சிரஞ்சீவியை விசாரித்தபோது கூட்டாளிகளுடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து அவரது கூட்டாளிகளான பாண்டிச்சேரி சூனாம்பேடு பகுதியை சேர்ந்த முத்து, குமார், வேலு ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான 4 பேரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்

    குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 1½ கிலோ தங்கத்தை கடத்திய பெண்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    குவைத்தில் இருந்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னைக்கு விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில் வந்த 2 பெண்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுங்கத்துறை பெண் அதிகாரிகள் அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அவர்கள் இருவரும் உள்ளாடையில் 5 தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த தங்க கட்டிகள் 1½ கிலோ எடை கொண்டவை. அதன் மதிப்பு ரூ.53½ லட்சமாகும். இதுதொடர்பாக 2 பெண்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். #ChennaiAirport
    மடிக்பாக்கத்தில் மிளகுத்தூள் ‘ஸ்பிரே’ அடித்து தப்ப முயன்ற கொள்ளையனை போலீஸ்காரர் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம், ஆதம் பாக்கம் மற்றும் பள்ளிக்கரணை பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சிறப்புபிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதில் மடிப்பாக்கம் போலீஸ் ஏட்டு விஜய்காந்த் பணிபுரிகிறார்.

    நேற்று வேளச்சேரி டான்சி நகரில் இவர் சாதாரண உடையில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது சைதாப்பேட்டையை சேர்ந்த சுந்தரம் (35) என்பவன் சுற்றித்திரிந்தான். இவன் ஒரு பழைய குற்றவாளி. பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவன். எனவே அவனை பிடிக்க விஜயகாந்த் முயற்சி செய்தார்.

    அப்போது தபிக்க கொள்ளையன் சுந்தரம் தான் மறைத்து வைத்திருந்த மிளகுதூள் ‘ஸ்பிரே’யை போலீஸ்காரர் விஜயகாந்த் முகத்தில் அடித்தான். இதனால் அவரது கண்கள் மற்றும் முகத்தில் கடும் எரிச்சல் ஏற்பட்டது.

    இருந்தும் அவனை தப்பிக்கவிடாமல் அவர் இறுக்கமாக பிடித்து கொண்டார். மடிப்பாக்கம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாண்டிதுரை, போலீஸ்காரர் கவுதம் ஆகியோர் விரைந்து வந்து கொள்ளையன் சுந்தரத்தை கைது செய்தனர்.

    மிளகுத்தூள் ‘ஸ்பிரே’ அடித்து தப்ப முயன்ற கொள்ளையனை மடக்கி பிடித்த ஏட்டு விஜயகாந்தை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

    பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த மோடி அகற்றப்பட வேண்டும். மத்தியில் மோடி இல்லாத ஆட்சியை உருவாக்குவோம் என்று வைகோ கூறியுள்ளார். #vaiko #pmmodi #sterliteplant

    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் ஆஜர் ஆவதற்காக டெல்லி சென்றேன். இருதரப்பு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் எனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு என்ன வேலை செய்ய வேண்டுமோ அத்தனை வேலையையும் தமிழக அரசு செய்துள்ளது. 13 பேர் படுகொலை செய்யப்பட்டதால், மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர்.

    ஏற்கனவே ஸ்டெர்லைட் தொடர்பான 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதை கூட தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வில்லை. இப்போது அவற்றை இந்த வழக்குடன் சேர்த்துவிட்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் அதற்கு தமிழக அரசு தான் முழு காரணமாக இருக்கும். என்னை ஸ்டெர்லைட் நிர்வாகம் சந்திக்க முயற்சி செய்தது. அதற்கு நான் இடம் கொடுக்கவில்லை. எனவே, என் மீது அவர்கள் கோபமாக இருக்கிறார்கள்.


    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது. மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்க முயற்சி செய்கிறது.

    பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த மோடி அகற்றப்பட வேண்டும். மத்தியில் மோடி இல்லாத, ஆட்சியை உருவாக்குவோம்.

    இவ்வாறு வைகோ கூறினார். #vaiko #pmmodi #sterliteplant

    சோழிங்கநல்லூர் ஐ.டி. நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர் மேடவாக்கம் பிரதான சாலையில் 133 ஏக்கரில் எல்காட் நிறுவனம் உள்ளது. இதில் சுமார் 50 சாப்ட்வேர் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.டி. ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை சேர்ந்த சையத் இப்ராஹீம் என்ற பெயரில் எல்காட் நிறுவனத்திற்கு இ-மெயில் ஒன்று வந்தது.

    அதில், நான் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை சேர்ந்த சையத் இப்ராஹீம். இன்னும் 7 மணி நேரத்திற்குள்ளாக வெடிகுண்டு வெடிக்கும். முடிந்தால் அனைவரும் தப்பித்துவிடுங்கள் என்று குறிப்பிட்டிருந்தது.

    இதுகுறித்து எல்காட் நிறுவனம் சார்பில் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையிட்டனர். ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். எல்காட் நிறுவனம் முழுவதும் சோதனை நடத்தியும் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. எனவே இது புரளி என்பது தெரிய வந்தது. இதனால் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

    வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? எங்கே இருந்து இ-மெயில் வந்தது? சையது இப்ராஹிம் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர் தானா? என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இ-மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இ-மெயில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து எல்காட் நிறுவனத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ×