search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.விடம் பாஜக நட்புகாட்டவில்லை - தம்பிதுரை
    X

    அ.தி.மு.க.விடம் பாஜக நட்புகாட்டவில்லை - தம்பிதுரை

    ஓ.பி.எஸ்.சை நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுப்பு தெரிவித்தது வேதனை அளிப்பதாகவும் அ.தி.மு.க.விடம் பாரதிய ஜனதா நட்பு காட்டவில்லை எனவும் தம்பிதுரை கூறியுள்ளார். #Thambidurai #ADMK #BJP #NirmalaSitharaman
    ஆலந்தூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வி.ல் எந்த ஒரு ஜனநாயக முடிவும் எடுப்பதாக தெரியவில்லை. மு.க.ஸ்டாலினை தவிர வேறு யாரும் பேசுவதாக இல்லை. மு.க.ஸ்டாலின் மற்ற கட்சிகளை பற்றி பேசுகிறார். மற்ற கட்சிகளுக்கு ஆலோசனை சொல்கிறார்.

    ஆனால் இவரைப் பற்றி யாரும் பேசுவது இல்லை. இது வேடிக்கையாக இருக்கிறது. தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

    ஒரு மத்திய அரசு பட்ஜெட்டை 5 முறை தாக்கல் செய்ய வேண்டும். மத்தியில் இருக்கும் பா.ஜனதா அரசு அதை ஏற்கனவே செய்து முடித்துவிட்டது. தற்போது 6-வது முறையாக தாக்கல் செய்தது. இதை வாக்கு வங்கிக்காகவும், தேர்தல் ஆதாயத்துக்காகவும் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்.

    பிரதமர் மோடி பட்ஜெட்டை ஒரு டிரெய்லர் என்றுதான் சொல்லி இருக்கிறார். சில நேரத்தில் டிரெய்லர் நன்றாக இருந்தாலும் படம் நன்றாக இருக்காது. இந்த பட்ஜெட்டை போல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு செய்திருக்கலாம். கடந்த 5 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் பட்ஜெட்டில் வரவில்லை. மாறாக தமிழகத்தின் உரிமைகள் தான் பறிபோய் இருக்கிறது.

    கஜா புயல் நிவாரண நிதி வரவில்லை, நீட் பிரச்சினை, காவிரி மேகதாது அணை பிரச்சினை எல்லாம் வேதனை அளிக்கிறது. ஜி.எஸ்.டி. என்று வந்ததோ அன்றே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எல்லாம் போய்விட்டது. பா.ஜனதாவினர் திராவிட கட்சிகளை வளரவிட மாட்டோம் என்று சொல்லி வருகிறார்கள்.



    அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்றபோது அவர் சந்திக்க முடியாது என்று சொன்னது வேதனை அளிக்கிறது. பா.ஜனதா அ.தி.மு.கவிடம் நட்புகாட்டவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #ADMK #BJP #NirmalaSitharaman
    Next Story
    ×