என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sholinganallur IT Company"

    சோழிங்கநல்லூர் ஐ.டி. நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர் மேடவாக்கம் பிரதான சாலையில் 133 ஏக்கரில் எல்காட் நிறுவனம் உள்ளது. இதில் சுமார் 50 சாப்ட்வேர் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.டி. ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை சேர்ந்த சையத் இப்ராஹீம் என்ற பெயரில் எல்காட் நிறுவனத்திற்கு இ-மெயில் ஒன்று வந்தது.

    அதில், நான் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை சேர்ந்த சையத் இப்ராஹீம். இன்னும் 7 மணி நேரத்திற்குள்ளாக வெடிகுண்டு வெடிக்கும். முடிந்தால் அனைவரும் தப்பித்துவிடுங்கள் என்று குறிப்பிட்டிருந்தது.

    இதுகுறித்து எல்காட் நிறுவனம் சார்பில் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையிட்டனர். ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். எல்காட் நிறுவனம் முழுவதும் சோதனை நடத்தியும் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. எனவே இது புரளி என்பது தெரிய வந்தது. இதனால் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

    வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? எங்கே இருந்து இ-மெயில் வந்தது? சையது இப்ராஹிம் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர் தானா? என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இ-மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இ-மெயில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து எல்காட் நிறுவனத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ×