என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று 22-ந் தேதி நடைபெற்றது. இதில் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 2 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும், 2 மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.
இதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு 1 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் லத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கும், துணைத் தலைவர் தேர்தல் பதவிக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த படப்பை மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த நித்யா போட்டியின்றி வெற்றி பெற்றார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த டி.செம்பருத்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஏ.காயத்ரி போட்டியின்றி வெற்றி பெற்றார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த மலர்கொடி வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த திவ்ய பிரியா வெற்றி பெற்றார்.
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஹேமலதா வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த வசந்தி வெற்றி பெற்றார்.
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கருணாநிதி வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த மாலதி வெற்றி பெற்றார்.
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சரஸ்வதி வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த உமாமகேஸ்வரி வெற்றி பெற்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கே.கண்ணன் வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கே.விஜயலட்சுமி வெற்றி பெற்றார்.
சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த வி.ஏழுமலை வெற்றி பெற்றார்.
காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த உதயா வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த வி.எஸ்.ஆராமுதன் வெற்றி பெற்றார்.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த கே.கீதா வெற்றி பெற்றார். துணைத் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ஏ.குமரவேல் வெற்றி பெற்றார்.
பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த எஸ்.சங்கீதா வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த பி.பிரசாத் வெற்றி பெற்றார்.
திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க. வை சேர்ந்த ஆர்.டி.அரசு வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஏ.பச்சையப்பன் வெற்றி பெற்றார்.
திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த எல்.இதயவர்மன் வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த எஸ்.சத்யா வெற்றி பெற்றார்.
காஞ்சீபுரம் மாவட்ட தனியார் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களுடன் தமிழ்நாடு உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அரசு துறை செயலாளர் நசிமுதீன் ஆலோசனை நடத்தினார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தலைமை தாங்கினார்.
அப்போது, அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்யும் போது உள்ள குறைகள் குறித்து அரிசி ஆலை உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தரமான அரிசியை உற்பத்தி செய்துதர வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் வாலாஜாபாத் அருகே உள்ள நெய்குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், கலெக்டர் மா.ஆர்த்தி, கூட்டுறவுத்துறை அரசு துறை செயலாளர் நசிமுதீன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நிர்வாக இயக்குனர் ராஜாராமன், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் நாகூர் மீரான் (வயது 32) பிரபல ரவுடி. காங்கிரஸ் கட்சியில் இளைஞர் அணி தென் சென்னை மாவட்ட துணைத்தலைவராகவும் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகர் 3-வது தெருவில் உள்ள காதலி ஒருவரது வீட்டுக்கு நாகூர் மீரான் வந்தார். பின்னர் அவர் காதலியுடன் தனியாக அறையில் இருந்தார்.
இதனை அறிந்த எதிர் தரப்பை சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பல் 10-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து காதலியுடன் இருந்த நாகூர் மீரானை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர்.
இதில் கழுத்து, தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த நாகூர் மீரான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்ட காதலி அலறியடித்து வெளியே ஓடினார்.
இதைத் தொடர்ந்து கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பலியான நாகூர் மீரானின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ரவுடி ராபின், பிரபாகரன், விமல்ராஜ், இருளா காத்திக், காணிக்கை ராஜ் ஆகிய 5 பேர் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
அவர்களிடம் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2013-ம் ஆண்டு சுங்க அதிகாரியை கொலை செய்த வழக்கு நாகூர் மீரான் மீது உள்ளது. இதன் பின்னர் அவர் ரவுடியாக வலம் வந்துள்ளார். ஆதம்பாகக்கத்தில் 2 கொலை வழக்கு உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இதேபோல் பரங்கிமலை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களிலும் குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இதற்கிடையே ஏரியாவில் யார் பெரிய ரவுடி? என்ற போட்டியால் அவருக்கும் எதிர் தரப்பை சேர்ந்த ரவுடி ராபினுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
எதிர் தரப்பினர் கொலை செய்ய திட்டமிடுவதை அறிந்த நாகூர் மீரான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலம்பாக்கம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் குடியேறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் காதலி வீட்டுக்கு நாகூர் மீரான் வந்திருப்பதை அறிந்த எதிர் தரப்பினர் தீர்த்துக்கட்டி விட்டனர். இந்த கொலை தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் கடந்த 4-ந் தேதி இரவு டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி விட்டது. இதில் டாஸ்மாக் விற்பனையாளர் துளசிதாஸ் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த மற்றொரு ஊழியருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டமாக நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 5 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்தூர், மதுராந்தகம், சித்தாமூர், லத்தூர், திருக்கழுக்குன்றம், பரங்கிமலை, திருப்போரூர், அச்சரப்பாக்கம் ஆகிய 8 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர்கள், 98 ஒன்றிய கவுன்சிலர்கள், 269 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 1,793 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2,171 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 மாவட்ட கவுன்சிலர்கள், 154 ஒன்றிய கவுன்சிலர்கள், 348 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 2,495 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3,013 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 இடங்களிலும் நேற்று காலை முதல் ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 14 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. ஒரு இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 9 இடங்களை கைப்பற்றியுள்ளது. ம.தி.மு.க. ஒரு இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 23 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 98 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 78 இடங்களை கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. 14 இடங்களிலும், பா.ம.க. 2 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியத்தில் 15 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 9 இடங்களை கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. 5 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் 18 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 12 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 4 இடங்களிலும், பா.ஜனதா 1 இடத்திலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.
சித்தாமூர் ஒன்றியத்தில் 16 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 10 இடங்களை கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க. 3 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.
திருப்போரூர் ஒன்றியத்தில் 22 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதுவரை 10 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தி.மு.க. 4 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. பா.ம.க. ஒரு இடத்தையும், சுயேட்சை ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 24 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 18 இடங்களிலும், அ.தி.மு.க. 5 இடங்களிலும், வெற்றிபெற்றுள்ளன. ஒரு இடத்தை பா.ம.க. கைப்பற்றியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 16 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 8 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அ.தி.மு.க. 5 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேட்சை 2 இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.
குன்றத்தூர் ஒன்றியத்தில் 21 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 18 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 2 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 18 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 14 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதி.மு.க. 2 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் 22 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 3 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியத்தில் 21 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 15 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும், காங்கிரஸ், பா.ஜனதா தலா ஒரு இடத்திலும், சுயேட்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டமாக நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 5 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்தூர், மதுராந்தகம், சித்தாமூர், லத்தூர், திருக்கழுக்குன்றம், பரங்கிமலை, திருப்போரூர், அச்சரப்பாக்கம் ஆகிய 8 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர்கள், 98 ஒன்றிய கவுன்சிலர்கள், 269 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 1,793 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2,171 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 மாவட்ட கவுன்சிலர்கள், 154 ஒன்றிய கவுன்சிலர்கள், 348 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 2,495 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3,013 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 இடங்களிலும் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் ஓட்டுப்பெட்டிகள் சீல் திறக்கப்பட்டு ஓட்டு எண்ணும் பணிகள் நடந்தது.

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 18 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 5 இடங்களில் தி.மு.க. முன்னிலையில் இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தபால் ஓட்டுகளிலும் தி.மு.க. முன்னிலை வகித்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க 3 ஏ.டி.எஸ்.பி., 4 டி.எஸ்.பி., 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 560 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்தல் முடிவுகளை டிஜிட்டல் பேனர்கள் மூலம் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தேர்தல் முகவர்கள், வேட்பாளர்கள் செல்போன்களை கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை.
குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொழுமணிவாக்கம் ஊராட்சியில் நேற்று முன்தினம் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவின்போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறி 1-வது வார்டு வாக்காளர்களுக்கு வார்டு உறுப்பினராக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தங்க நாணயங்களை பரிசாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் வாக்களித்துவிட்டு அந்த நாணயத்தை அடகு வைக்க சென்றபோது, அது பித்தளை என தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் முன்பு கொடுத்தால் போலி என தெரிந்துவிடும் என்பதால் வாக்களிக்க செல்லும்போது வாக்காளர்களை அழைத்து அவர்கள் கைகளில் மறைவாக தங்க நாணயம் என பித்தளையை கொடுத்து ஏமாற்றி விட்டதாகவும், இதனால் வேறு ஒருவருக்கு வாக்களிக்கும் மனநிலையில் வாக்குச்சாவடிக்கு சென்ற வாக்காளர்களும் குறிப்பிட்ட அந்த கட்சி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்து விட்டதாகவும், இந்த நூதன மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஊராட்சியில் மறுதேர்தல் நடத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என மற்ற வேட்பாளர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
மராட்டிய மாநிலத்தில் புகழ்பெற்ற சாய்பாபா கோவில் இருப்பதால், அங்குள்ள சீரடி விமான நிலையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சீரடிக்கு 2 தனியார் விமான நிறுவனங்கள் தினமும் 3 விமான சேவைகளை நடத்தி வந்தன.
2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா முதல் அலை பரவல் அதிகரித்ததால் சென்னை-சீரடி விமான சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டன. தற்போது தமிழ்நாடு, மராட்டியம் உள்பட நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக குறைந்து வருவதால் சென்னையில் இருந்து சீரடிக்கு மீண்டும் விமான சேவையை தொடங்க தனியார் விமான நிறுவனம் முன்வந்தது. சிவில் விமான போக்குவரத்து துறையும் அதற்கு அனுமதி அளித்தது.
இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் சீரடி விமானத்துக்கு முன்பதிவு தொடங்கியது. சுமார் 19 மாதங்களுக்கு பிறகு நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து சீரடிக்கு 165 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகள், 48 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்திய சான்றிதழ்களை பரிசோதித்த பிறகே விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனா். பின்னர் சீரடியில் இருந்து 35 பயணிகளுடன் அந்த விமானம் மாலை 6 மணிக்கு சென்னைக்கு திரும்பி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியை சேர்ந்தவர் இந்திரா (வயது 54). இவர் நேற்று பென்னலூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்ற போது, 2 வடமாநில வாலிபர்கள் அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓட முயன்றனர்.
இதனால் அச்சத்தில் இந்திரா கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.
அப்போது, வழிப்பறி கொள்ளையர்களில் ஒருவன் திடீரென மறைத்து வைத்து இருந்த கைத்துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டினான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பின்வாங்கியதும், வழிப்பறி கொள்ளையர்கள் கண்இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி பென்னலூர் ஏரி அருகே காட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் காட்டுக்குள் பதுங்கிய கொள்ளையர்களை பிடிப்பதற்காக 10 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையர்களை வலைவீசி தேடினர்.
இதற்கிடையே கொள்ளையர்கள் தப்பி ஓடும்போது துப்பாக்கியில் இருந்து கீழே விழுந்த தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர். கொள்ளையர்கள் பதுங்கிய இடம் அடர்ந்த மரம், செடி கொண்ட காட்டுப்பகுதி என்பதால் தனிப்படை போலீசார் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் டிரோன் கேமரா (பறக்கும் கேமரா) உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.






