search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றபோது எடுத்த படம்
    X
    ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றபோது எடுத்த படம்

    மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவி- காஞ்சிபுரம் மாவட்டத்தில் தி.மு.க. முன்னிலை

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க 3 ஏ.டி.எஸ்.பி., 4 டி.எஸ்.பி., 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 560 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டமாக நடந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 5 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்தூர், மதுராந்தகம், சித்தாமூர், லத்தூர், திருக்கழுக்குன்றம், பரங்கிமலை, திருப்போரூர், அச்சரப்பாக்கம் ஆகிய 8 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர்கள், 98 ஒன்றிய கவுன்சிலர்கள், 269 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 1,793 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2,171 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 மாவட்ட கவுன்சிலர்கள், 154 ஒன்றிய கவுன்சிலர்கள், 348 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 2,495 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3,013 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 இடங்களிலும் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் ஓட்டுப்பெட்டிகள் சீல் திறக்கப்பட்டு ஓட்டு எண்ணும் பணிகள் நடந்தது.

    ஓட்டுப்பெட்டிகள்

    காலை 10.30 மணி முதல் முன்னணி நிலவரங்கள் தெரியவந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 2 இடங்களில் தி.மு.க. முன்னிலையில் இருந்தது.

    காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 18 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 5 இடங்களில் தி.மு.க. முன்னிலையில் இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தபால் ஓட்டுகளிலும் தி.மு.க. முன்னிலை வகித்தது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க 3 ஏ.டி.எஸ்.பி., 4 டி.எஸ்.பி., 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 560 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்தல் முடிவுகளை டிஜிட்டல் பேனர்கள் மூலம் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தேர்தல் முகவர்கள், வேட்பாளர்கள் செல்போன்களை கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை.


    Next Story
    ×