என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு இடையன்காட்டு வலசு சின்னமுத்து முதல் வீதியை சேர்ந்த மூதாட்டி ராஜாமணி (வயது 65). இவர் இன்று அதிகாலை சம்பத்நகரில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார். காய்கறி வாங்கி விட்டு வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    நசியனூர் ரோடு ஒற்றைப்பனை மரப்பகுதியில் சென்றபோது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர்.

    கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் ராஜாமணி அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர். இதை சற்றும் எதிர்பாராத ராஜாமணி திருடன்... திருடன்... என்று சத்தமிட்டார்.

    அதிகாலை நேரம் என்பதால் அந்த பகுதியில் அதிக ஆள் நடமாட்டம் இல்லை. எனவே ராஜாமணியின் சத்தம் கேட்டு அங்கு யாரும் உடனே வரவில்லை.

    ஆட்கள் வருவதற்குள் ராஜாமணியிடம் நகை பறித்த மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ராஜாமணி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    மத்திய நிதி அமைச்சரின் பட்ஜெட் அறிக்கை, தேர்தல் வாக்குறுதிகள் போலவே அமைந்திருக்கிறது என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.
    ஈரோடு:

    மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் குறித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியிருப்பதாவது:-

    தனி நபர் வருமானத்தின் வரி விலக்கு அளவை உயர்த்தாதது மிகப்பெரிய ஏமாற்றம். இந்திய தொழில் துறையின் முதுகெலும்பே சிறு, குறு தொழில்கள் தான். அந்த துறையை மேம்படுத்துவதற்கான தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. திட்டங்களும் இல்லை.

    விவசாயம், சுகாதாரம், கல்வி உள்பட துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் அதன் மூலம் அந்தந்த துறைகளில் வளர்ச்சியை கொண்டு வருவதற்கான திட்டங்கள் இல்லை.

    2014 பாராளுமன்ற தேர்தலிலேயே நதிகளை இணைப்போம் என்று வாக்குறுதி அளித்தவர்கள் கடைசி நிதி அறிக்கையிலும் திட்டங்களை தீட்டாதது ஏமாற்றம் அளிக்கிறது. அடுத்த தேர்தலில் இது எதிரொலிக்கும்.

    மொத்தத்தில் மத்திய நிதி அமைச்சரின் பட்ஜெட் அறிக்கை, தேர்தல் வாக்குறுதிகள் போலவே அமைந்திருக்கிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உருவாவதற்கான திட்டங்கள் தெளிவாக இல்லை.

    இவ்வாறு ஈஸ்வரன் கூறியுள்ளார். #tamilnews
    கவுந்தப்பாடி அருகே விபத்தில் வயிற்றில் மறைத்து கொண்டு வரப்பட்ட மது பாட்டில் குத்தியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் மதுரைவீரன் காலனியை சேர்ந்த தொழிலாளி மயில்சாமி (வயது 51). மதுகுடிக்கும் பழக்கம் கொண்டவர்.

    இவர் இரவு அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக் கடையில் மதுகுடித்து விட்டுமேலும் ஒரு மது பாட்டில் வாங்கினார். அந்த பாட்டிலை யாருக்கும் தெரியாமல் சட்டை உள்ளே வயிற்றுப் பகுதியில் மறைத்து வைத்துக் கொண்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே பெத்தாக் கவுண்டர் என்பவர் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மயில்சாமி மீது மொபட் நேருக்கு நேர் மோதியது. இதில் அவரது வயிற்றுப்பகுதியில் மறைத்து வைத்திருந்த மது பாட்டில் உடைந்து அவரது வயிற்றில் குத்தி கிழித்தது. வயிற்றிலிருந்து ரத்தம் சொட்டச்... சொட்ட ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை அருகே பெண்ணை கொன்றவரை மர்ம நபர்கள் கட்டி வைத்து அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் அடுத்த பெத்தாம்பாளையம், நரிப்பாளையம் பிரிவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). விவசாயி.

    இவரது வீட்டின் பின்புறத்தில் ஆறுமுகத்தின் சித்தி மாராயம்மாய் (78), தனது மகன் தங்கவேலுடன் (55) வசித்து வந்தார். தங்கவேல் அந்த பகுதியில் தறி குடோன் நடத்தி வருகிறார். ஆறுமுகம் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். எனவே அவரை தங்கவேல் கோவைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

    அங்கு மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 25 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனால் டாக்டர்கள் கூறியபடி ஆறுமுகம் சரியாக மருந்து சாப்பிடவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை தங்கவேலுவின் வீட்டுக்கு ஆறுமுகம் சென்றார்.

    அங்கு தங்கவேலு இல்லை. மாராயம்மாள் மட்டும் இருந்தார். அவரிடம் ஆறுமுகம் தகராறில் ஈடுபட்டார்.

    ‘‘என்னை ஏன் மனநிலை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றீர்கள்? நான் நன்றாகத்தானே இருந்தேன். உங்களால் எனக்கு ஊருக்குள் கெட்ட பெயராகிவிட்டது. ஊரார் என்னை ஒரு மாதிரி பேசுகிறார்கள்’’ என்று கூறி வாக்குவாதம் செய்தார்.

    இந்த வாக்குவாதம் முற்றி மாராயம்மாளுக்கும், ஆறுமுகத்துக்கும் இடையே மோதலானது. ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மாராயம்மாளை தாக்கினார்.

    இதில் மாராயம்மாள் நிலை குலைந்து கீழே மயங்கி விழுந்தார். அந்த நேரத்தில் தங்கவேலுவும், அக்கம் பக்கத்தினரும் அங்கு வந்தனர்.

    தங்கவேலு மயங்கி கிடந்த தனது தாயை தூக்கிக் கொண்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மாராயம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே மாராயம்மாளை தாக்கிய ஆறுமுகத்தை அந்த பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் சிலர் பிடித்தனர். ஆறுமுகத்தின் கைகளை துண்டால் கட்டினர்.

    பின்னர் கம்பு, தடி, கைகளால் சரமாரியாக ஆறுமுகத்தை தாக்கினர். இதில் ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை அங்கிருந்து தூக்கி சென்று 100 அடி தூரத்தில் உள்ள ரோட்டோரம் வீசினர்.

    இது பற்றி காஞ்சிக் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆறுமுகத்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆறுமுகத்தை தாக்கி கொலை செய்த மர்ம நபர்கள் யார்-யார்? என்பது தெரியவில்லை. அவர்கள் யார்? என்று கண்டு பிடித்து அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையுண்ட ஆறுமுகத்துக்கு ஜெயமணி என்ற மனைவியும், கோவிந்தசாமி என்ற மகனும், சுகுணா என்ற மகளும் உள்ளனர்.

    இந்த இரட்டை கொலை சம்பவம் பெருந்துறை, காஞ்சிக்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    தங்களின் வாழ்வாதாரத்துக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள பிடித்தம் என்பது நியாயமற்ற செயல் என்று செந்தில் பாலாஜி கூறினார்.
    ஈரோடு:

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தினகரன் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு மாணவர் அணி இணைச் செயலாளர் பிரவு தலைமை தாங்கினார். அவைத் தலைவர் நடராஜன், பொருளாளர் சண்முகம், மாநகர் மாவட்ட செயலாளர் பருவாச்சி பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், டி.டி.வி. தினகரன் ஆதரவாளருமான செந்தில்பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது.-

    போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட 7 நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். இது நியாயமற்ற செயல். அவர்களுக்கு முழுமையாக சம்பளத்தை கொடுக்க வேண்டும்.

    தினகரனால் முகவரி கொடுக்கப்பட்ட பன்னீர் செல்வமும், சசிகலா மற்றும் தினகரனால் முதல்வரான எடப்பாடி பழனிசாமியும் நன்றி மறந்து செயல்பட்டனர். இதை மக்கள் உணர்ந்ததால் தான் ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றார். அவர்கள் படுதோல்வி அடைந்தனர். டிடிவி தினகரன் பக்கம் தான் உண்மையான தொண்டர்களும், இளைஞர் படையும் உள்ளனர்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமான பதில் வரும். வரும் 24-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட உள்ளோம். அதற்குள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Tamilnews
    ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக குழு அமைத்து ஆய்வு நடத்தமாறு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மூலக்கரை, ராயபாளையம், சின்னமேடு, புதுக்காலனி, காரப்பாறை, செங்கோடம் பள்ளம், தெற்குபள்ளம், ராமமூர்த்தி வீதி, பழைய பூந்துறை ரோடு, மரப்பாலம், பிச்சைக்காரன்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு இன்று திரண்டு வந்தனர்.

    அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வரதராஜன், மாவட்ட செயலாளர் ரகுராமன் ஆகியோரும் வந்திருந்தனர்.

    அவர்கள் மாநகராட்சி முன்பு சிறிது நேரம் அமர்ந்தனர். பின்னர் அலுவலகத்துக்குள் சென்றனர். ஆனால் அங்கு மாநகராட்சி கமி‌ஷனர் இல்லை. எனவே அலுவலக உதவியாளரிடம் மனு கொடுத்தனர்.

    நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் நாங்கள் வசிப்பதாக எங்களை காலி செய்ய கூறி மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் நோட்டீசு கொடுத்து வருகிறார்கள்.

    நாங்கள் இந்த பகுதியில் 50 வருடமாக வசித்து வருகிறோம். ஆனால் எங்களை திடீரென காலி செய்ய சொன்னால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    நாங்கள் நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வந்தால் காலி செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் மாற்று இடம் தராமல் எங்களை காலி செய்ய சொல்ல வேண்டும்.

    ஆக்கிரமிப்பில் இல்லாதவர்களுக்கும் நோட்டீசு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வசிக்கும் இடத்துக்கும் நீர் நிலைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே சரியான ஆக்கிரமிப்புகள் பற்றி அறிய குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.

    நீர் நிலைகளை ஆக்கிரமிக்கவில்லை என்றால் அவர்களுக்கு பட்டா கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர். இதே கோரிக்கை மனுவை தாசில்தார் அலுவலகத்திலும் கொடுத்தனர்.
    பவானி அருகே நள்ளிரவில் பெண்ணை அடித்து கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பவானி:

    பவானி அருகே உள்ள ஜம்பை சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் ஏற்கெனவே இறந்து விட்டார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 54).

    ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகிறார்கள். தனலட்சுமி அப்பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் 4½ ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் நிலக்கடலை, குச்சிக்கிழங்கு, சோளம் பயிரிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமி வெளியே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    மர்ம ஆசாமிகள் அவரை அடித்து கொன்று பிணத்தை வெளியே போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து உள்ளனர். இந்த கொடூர சம்பவம் நேற்று இரவு நடந்து உள்ளது.

    தனலட்சுமியை இப்படி கொடூரமாக கொன்று உடலை எரித்த கொலையாளிகள் யார் என்று தெரியவில்லை.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட தனலட்சமி உடலை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வீட்டில் நகையோ பணமோ வேறு எந்த பொருட்களோ கொள்ளையடிக்கப்படவில்லை. இதையொட்டி நகை-பணத்துக்காக இந்த சம்பவம் நடக்கவில்லை என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதனால் தனலட்சுமியை யாரோ முன்பகை காரணமாக கொலை செய்திருக்க கூடும் என போலீசார் கருதுகிறார்கள்.

    மர்மமான முறையில் நடந்துள்ள இந்த கொலை குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் பவானி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பவானி அருகே பெண் ஒருவரை மர்ம ஆசாமிகள் அடித்து கொன்று பிணத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து உள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி:

    பவானி அருகே உள்ள ஜம்பை சின்னியம் பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் ஏற்கெனவே இறந்து விட்டார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 54).

    ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகிறார்கள். தனலட்சுமி அப்பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் 4½ ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் நிலக்கடலை, குச்சிக்கிழங்கு, சோளம் பயிரிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமி வெளியே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    மர்ம ஆசாமிகள் அவரை அடித்து கொன்று பிணத்தை வெளியே போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து உள்ளனர். இந்த கொடூர சம்பவம் நேற்று இரவு நடந்து உள்ளது.

    தனலட்சுமியை இப்படி கொடூரமாக கொன்று உடலை எரித்த கொலையாளிகள் யார் என்று தெரியவில்லை.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட தனலட்சமி உடலை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வீட்டில் நகையோ பணமோ வேறு எந்த பொருட்களோ கொள்ளையடிக்கப்படவில்லை. இதையொட்டி நகை-பணத்துக்காக இந்த சம்பவம் நடக்கவில்லை என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதனால் தனலட்சுமியை யாரோ முன்பகை காரணமாக கொலை செய்திருக்க கூடும் என போலீசார் கருதுகிறார்கள்.



    மர்மமான முறையில் நடந்துள்ள இந்த கொலை குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் பவானி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் துன்பப்பட்டு வரும் போது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் பஸ் கட்டணத்தை உயர்த்தி மக்களை துன்புறுத்தி வருகிறார்கள் என செந்தில் பாலாஜி பேசினார்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலத்தில் டி.டி.வி. தினகரன் அணியினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.ஆர்.செல்வம் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், சின்னம்மாவுக்கும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி பெரும் துரோகம் இழைத்து விட்டது. வரும் 24-ந்தேதிக்குள் இந்த ஆட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும்.

    பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் துன்பப்பட்டு வரும் போது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் பஸ் கட்டணத்தை உயர்த்தி மக்களை துன்புறுத்தி வருகிறார்கள்.

    இந்த ஆட்சியில் நிர்வாக திறமை இல்லாததால் நிதி சுமை ஏற்பட்டு அந்த சுமையை மக்கள் மீது திணித்து உள்ளார்கள். இது நியாயமா? மக்கள் எவ்வளவு நாள் தான் இந்த ஆட்சியின் அலங்கோலத்தை, சீர் கேட்டை பார்த்து கொண்டிருப்பார்கள்?.

    அம்மா இருக்கும் போது ஒவ்வொரு மாதமும் பஸ் தொழிலாளர்களுக்கு சம்பளம் உள்பட தேவைகளுக்கு நிதித்துறை மூலம் வழங்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசு மாறாக மக்களிடத்தில் அந்த சுமையை சுமத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.

    தனிக்கட்சி ஆரம்பிப்போம் என எந்த இடத்திலும் துணை பொதுச்செயலாளர் சுட்டி காட்டவில்லை. நீதிமன்ற உத்தரவை பெற்று அ.தி.மு.க. அம்மா அணி என்ற பெயரில் செயல்பட தயார் நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

    இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார். #Tamilnews
    பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு:

    தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து தே.மு.தி.க. சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்தார்.

    அதன்படி ஈரோடு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக அரசு உயர்த்திய கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இனி பஸ் பயணத்தை கைவிட்டு மாட்டு வண்டியில் செல்ல வேண்டியதுதான் என வலியுறுத்தி மாட்டு வண்டியில் ஏறி நின்றும் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் கட்சியின் அவைத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அழகாபுரம் மோகன்ராஜ் கண்டன உரையாற்றினார். பகுதி செயலாளர் கே.கே.நைனாமலை உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #tamilnews

    மக்கள் இனி மாட்டு வண்டி, குதிரை வண்டியில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியில் காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் கோபி நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி அலுவலக புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

    அறக்கட்டளை தலைவர் டாக்டர் தில்லைநாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் நல்லசாமி வரவேற்றார். காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இதில் கலந்து கொண்டு புதியகட்டித்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி நன்கு வளர்ந்து வருகிறது. நடந்து முடிந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. அடுத்து வரும் 8 மாநில சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

    பிரதமர் மோடி வெளி நாடுகளுக்கு செல்வதிலேயே குறிக்கோளாக உள்ளார். நாட்டு மக்களின் கஷ்டங்களை எண்ணிப் பார்ப்பதில்லை. பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால், விலைவாசி உயர்ந்து வருகிறது.

    மேலும் ஜி.எஸ்.டி. போன்ற வரிகளைப் விதித்ததால், ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் உள்ள அதிமுக எம்.பி.க்கள் தமிழக மக்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை.

    தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. ஓட்டை உடைசல் பஸ்கள் தான் ஓடுகின்றன. ஆனால், பஸ் கட்டணத்தை வி‌ஷம் போல் உயர்த்தியுள்ளார்கள். இதனால், ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    இனி மாட்டு வண்டி, குதிரை வண்டியில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பஸ் கட்டண குறைப்பு என்பது கண் துடைப்பு வேலை. மக்களை ஏமாற்றும் செயலாகும். மீண்டும் அரசு பஸ்களில் பழைய கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் நிம்மதியடைவார்கள்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஒருவர் வெற்றி பெற்று இருக்கிறார். இது மிக கேவலமாக உள்ளது. இவர்கள் எல்லாம் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை தான் கொடுத்துள்ளார்கள் என்பதை வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஓட்டுக்காக பணம் வாங்கும் போது நாம் நமது சுய மரியாதையை இழக்கிறோம். அதன் பிறகு நாம் அவர்களிடம் நமது குறைகளை போய் கூற முடியாது. பணம் வாங்கிக் கொண்டு தான் ஓட்டு போட்டாயல்லவா எனக்கூறி நம்மை மதிக்க மாட்டார்கள், இழிவுபடுத்துவார்கள் என்பதை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பொது மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். இதன் மூலம் அடுத்து வருகின்ற அனைத்து தேர்தல்களுக்கும் நம்மை நாம் தயார் படுத்திக்கொள்ள முடியும்.

    என்னைப் பொருத்த வரை நான் சாதாரண காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக இருந்து உங்களோடு ஒருவராகப் பணியாற்றவே விரும்புகிறேன். நான் பதவிக்கு ஆசைப்படுவதில்லை. எம்.எல்.ஏ. எம்.பி. மத்திய அமைச்சர், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் போன்ற அனைத்து பதவிகளையும் வகித்து விட்டேன். அதை எல்லாவற்றையும் விட உங்களின் பாசமும், அன்பும் தான் நிரந்தரம்.

    காங்கிரஸ் கட்சியில் சிலருக்கு பதவி கிடைக்கும். பலருக்கு கிடைக்காது. இதை கட்சியில் உள்ளவர்கள் வேற்றுமை பாராமல் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். மேலும், இதை தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் 3 வாரங்களில் நான் ஒவ்வொரு நகர, வட்டாரமாக வந்து உங்களை சந்தித்து பேச உள்ளேன்.

    கோபியில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் அரசியல் கேள்விகளுக்கு பதில் கூறமாட்டார். ஏனென்றால் அவருக்கு அரசியல் தெரியாது.

    இவ்வாறு இளங்கோவன் பேசினார்.  #tamilnews



    ஈரோட்டில் ஆதரவாக இருந்த வாலிபரின் பிரிவை தாங்கமுடியாததால் 2 மகன்களை கொன்று தற்கொலை செய்து கொள்வதாக பெண் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
    ஈரோடு:

    ஈரோடு சம்பத் நகரை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 32). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார்.

    இவரது கணவர் ரவீந்திரன் கடந்த 3 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். பிரனீத் (8), சதீஸ் (4) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த ஸ்ரீஜா நேற்று முன்தினம் தனது 2 மகன்களை வி‌ஷ ஊசிபோட்டு கொலை செய்தார்.

    பிறகு ஸ்ரீஜாவும் தனக்குத்தானே வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் ஈரோடு நகரில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இது குறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீஜா பணிபுரியும் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததால் ஸ்ரீஜா இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிய வந்தது.

    போலீசார் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்வதற்கு முன் ஸ்ரீஜா எழுதி வைத்து உள்ள ஒரு பக்க கடிதம் சிக்கி உள்ளது.

    அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    அந்த கடிதத்தில் ஸ்ரீஜா எழுதி இருப்பதாவது:-

    என் கணவர் மறைவுக்குப் பிறகு நான் பணிபுரியும் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டது. இதுவே நாளடைவில் எங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது.

    இருவரும் கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்தோம். இந்த நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடு நடந்தது. அவர் என்னை விட்டு பிரிந்து விடுவதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவரது ஆதரவு தொடர்ந்து கிடைக்காததால் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். நான் இறந்த பிறகு என் பிள்ளைகள் அனாதையாகி விடக்கூடாது என நினைத்து அவர்களை வி‌ஷ ஊசி போட்டு என்னுடனேயே அழைத்து கொண்டு போகிறேன்.

    இவ்வாறு ஸ்ரீஜா அந்த கடிதத்தில் எழுதி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். #Tamilnews
    ×