என் மலர்
செய்திகள்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் வந்து தே.மு.தி.க. நூதன ஆர்ப்பாட்டம்
ஈரோடு:
தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து தே.மு.தி.க. சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்தார்.
அதன்படி ஈரோடு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக அரசு உயர்த்திய கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள்.
பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இனி பஸ் பயணத்தை கைவிட்டு மாட்டு வண்டியில் செல்ல வேண்டியதுதான் என வலியுறுத்தி மாட்டு வண்டியில் ஏறி நின்றும் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் கட்சியின் அவைத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அழகாபுரம் மோகன்ராஜ் கண்டன உரையாற்றினார். பகுதி செயலாளர் கே.கே.நைனாமலை உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #tamilnews






