என் மலர்tooltip icon

    செய்திகள்

    (உள்படம்: கொலை செய்யப்பட்ட தனலட்சுமி) வீட்டின் முன் குவிந்த மக்கள்
    X
    (உள்படம்: கொலை செய்யப்பட்ட தனலட்சுமி) வீட்டின் முன் குவிந்த மக்கள்

    பவானி அருகே பெண்ணை அடித்து கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்

    பவானி அருகே நள்ளிரவில் பெண்ணை அடித்து கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பவானி:

    பவானி அருகே உள்ள ஜம்பை சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் ஏற்கெனவே இறந்து விட்டார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 54).

    ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகிறார்கள். தனலட்சுமி அப்பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் 4½ ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் நிலக்கடலை, குச்சிக்கிழங்கு, சோளம் பயிரிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமி வெளியே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    மர்ம ஆசாமிகள் அவரை அடித்து கொன்று பிணத்தை வெளியே போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து உள்ளனர். இந்த கொடூர சம்பவம் நேற்று இரவு நடந்து உள்ளது.

    தனலட்சுமியை இப்படி கொடூரமாக கொன்று உடலை எரித்த கொலையாளிகள் யார் என்று தெரியவில்லை.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட தனலட்சமி உடலை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வீட்டில் நகையோ பணமோ வேறு எந்த பொருட்களோ கொள்ளையடிக்கப்படவில்லை. இதையொட்டி நகை-பணத்துக்காக இந்த சம்பவம் நடக்கவில்லை என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதனால் தனலட்சுமியை யாரோ முன்பகை காரணமாக கொலை செய்திருக்க கூடும் என போலீசார் கருதுகிறார்கள்.

    மர்மமான முறையில் நடந்துள்ள இந்த கொலை குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் பவானி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×