என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு அருகே சித்தோட்டில் கொங்கு மண்டல பா.ஜனதா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கிறார். #AmitShah #BJP

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பாரதிய ஜனதாவினர் தமிழகத்தை குறிவைத்து கூட்டணி தொடர்பாகவும், தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாளை(ஞாயிற்றுக் கிழமை) திருப்பூர் மாவட்டம் பெருமா நல்லூரில் நடக்க உள்ள பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க மோடி வரும் போது அ.தி.மு.க.-பாரதிய ஜனதா இடையே பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு குறித்தும் பிரதமர் மோடியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடையே பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    பிரதமர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டம் முடிந்ததும் பாரதிய ஜனதாவின் முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    அந்த வகையில் ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வரும் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த தகவலை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பவானியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    மேலும் வானதி சீனிவாசன் கூறும் போது, பிரசாரத்துக்காக வரும் அமித்ஷா முன்னதாக நெசவாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். அமித் ஷாவின் வருகையால் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி உள்ளது.

    சித்தோட்டில் நடக்கும் பொதுக்கூட்டம் கொங்கு மண்டல பா.ஜ.க. கூட்டமாக நடக்கும். ஈரோடு, நாமக்கல், திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பிரசார கூட்டமாக இருக்கும் லட்சக்கணக்கான பேர் இதில் கலந்து கொள்வார்கள் என்று கூறினார். #AmitShah #BJP

    சிவகிரி அருகே கும்பாபிஷேக விழாவில் கோபுரத்தில் இருந்து செம்பு விழுந்ததில் காயம் அடைந்த குழந்தை பலியான சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சிவகிரி:

    நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே தேவி பட்டினத்தில் உள்ள பாக்கிய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அந்த விழாவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

    இதில் தேவிபட்டினத்தை சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவரின் மனைவி காயத்திரி (வயது25), தனது 3 மாத கைக்குழந்தை கிஷோருடன் சென்றிருந்தார். அவர் கோபுரத்திற்கு கீழே நின்று விழாவை பார்த்துக் கொண்டிருந்தார். கோபுர கலசத்தில் புனித நீர் தெளிப்பதற்கு செல்ல கோபுரத்தில் ‘சாரம்’ கட்டப்பட்டிருந்தது.

    அதில் புனித நீர் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்த செம்புகளில் ஒன்று பூஜையின் போது திடீரென்று தவறி கீழே விழுந்தது. அந்த செம்பு கூட்டத்தில் நின்று கொண்டிருந்த காயத்திரியின் கைக்குழந்தை கிஷோர் தலையின் மீது விழுந்தது. இதனால் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் கும்பாபிஷேக விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

    காயம் அடைந்த குழந்தை கிஷோர் அங்கிருந்து மீட்கப்பட்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே குழந்தை கிஷோர் பரிதாபமாக இறந்தது. இதனால் குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் கதறி துடித்தனர்.

    கும்பாபிஷேக விழாவில் கோபுரத்தில் இருந்து செம்பு விழுந்ததில் காயம் அடைந்து குழந்தை பலியான சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில் விழாவில் நடந்த இந்த பரிதாப சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #PublicExam
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் 174 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு இலவச ஆடுகள் வழங்கினர்.

    பிறகு அமைச்சர் செங்கோட்டையன் கோபி கரட்டூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்.ஜி.ஆர். நுழைவு வாயிலையும் பார்வையிட்டார். அதில் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டையும் பார்வையிட்டார்.

    அதன் பிறகு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:

    கோபி நகராட்சி நுழைவு அலங்கார வளைவில் காமராஜரின் பெயர் பொறித்த கல்வெட்டு இடம்பெறும். காமராஜருக்கு புகழ்சேர்க்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    காமராஜரின் பிறந்தநாளில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய தலைவர்கள் அத்தனை பேருக்கும் புகழ் சேர்க்கின்ற அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    சுற்றுச்சூழல் துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தூய்மை பாரதம் இந்தியா என்றாலும் கூட தமிழகம் தான் பாலித்தீன் இல்லாத மாநிலமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பள்ளிக் கல்வித்துறையில் வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் 1500 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

    மாணவ- மாணவிகளின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது அரசின் நிதிநிலையை பொறுத்து படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.

    பள்ளிகளுக்கு தனியாக துப்புரவு தொழிலாளர்களை அமர்த்த முடியாத சூழல் உள்ளது. இது குறித்து அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும்.



    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யும். பொறுத்திருந்து பாருங்கள். நல்ல பதில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterSengottaiyan #PublicExam

    சென்னிமலை அருகே லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகில் உள்ள ஈங்கூரில் மாரியம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் முருகேசன் (51). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகவும் விரக்தியடைந்து காணப்பட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். குடும்பம் நடத்த பணம் எதுவும் தராமல் இருந்ததால் இதுகுறித்து இவரது மனைவி இவரிடம் கேட்டுள்ளார். அப்போது வீட்டை விட்டு வெளியில் சென்ற முருகேசன் இரவு வீட்டிற்கு திரும்பவில்லை.

    பின்னர் அதிகாலையில் சென்று தேடியபோது ஈங்கூரில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் அருகில் வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தது தெரிந்தது.

    இதுகுறித்து இவரது மகன் கவுரிசங்கர் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    ஈரோடு அருகே ஆட்டோ டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள வெள்ளோட்டை சேர்ந்தவர் லோகு சாமி (வயது 48) இவர் ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் டிரைவராக பணி புரிந்தார்.

    இவரது மனைவி பெயர் ராதா மணி (35) இவர்களுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை.

    இதனால் மன வேதனையில் இருந்த லோகு சாமி வீட்டில் வி‌ஷம் குடித்து விட்டார் உடனடியாக அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார் இது குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூரில் திருமண ஏற்பாடு நடந்து வந்த நிலையில் இளம்பெண் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே எலத்தூரை சேர்ந்தவர் மணி. இவரது மகள் கவுசல்யா (வயது 24). நம்பியூர் பெரியார் நகரில் இவர்கள் வசித்து வருகிறார்கள். கவுசல்யா நம்பியூரில் உள்ள ஒரு துணி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 4 ஆண்டுகளாக கவுசல்யாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கவுசல்யாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்தாராம்.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது கவுசல்யா தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார்.

    அப்போது கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய கவுசல்யாவின் தாயார் சகுந்தலா வீட்டு கதவு பூட்டி கிடப்பதை கண்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.

    அங்கு மகள் தூக்கில் தொங்கியதை கண்டு திடுக்கிட்டு சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து கவுசல்யாவை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிறகு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தற்கொலை செய்வதற்கு முன் கவுசல்யா எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் ‘‘என்னால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று எழுதி உள்ளார்.

    ஈரோட்டில் குடும்ப தகராறு காரணமாக மனைவியுடன் போலீஸ்காரர் விஷம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு பூந்துறை ரோடு ஸ்ரீநகரை சேர்ந்தவர் பூமலை (வயது 31). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் தம்மநாயக்கன் பட்டி.

    ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பூமலை பணிபுரிகிறார். இவரது மனைவி பெயர் கலைசெல்வி (26). இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    பூமலை பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த பூமலை மனைவி கலைச்செல்வி திடீரென வீட்டில் இருந்த வி‌ஷத்தை (எலி மருந்து) குடித்து விட்டார். இதனால் மயங்கி விழுந்தார்.

    2 மணி நேரம் கழித்து போலீஸ்காரர் பூமலை வீட்டுக்கு வந்தார். அங்கு தன் மனைவி வி‌ஷம் குடித்ததை கண்ட அவரும் வி‌ஷத்தை குடித்து விட்டார்.

    இதனால் இருவரும் மயங்கி கிடந்தனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கணவன் மனைவி இருவரையும் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போலீஸ்காரரின் மகள் சம்பவத்தின்போது வெளியே விளையாட சென்று விட்டதால் தப்பினாள். இந்த சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு சோலாரில் அருகே தடுப்பு சுவரில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் இருந்து கரூருக்கு மக்காச்சோளம் ஏற்றி கொண்டு நேற்று இரவு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை செல்வராஜ் (வயது 45) என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த லாரி நேற்று இரவு 10.30 மணி அளவில் ஈரோடு சோலாரில் சென்ற போது திடீரென தடுப்பு சுவரில் மோதியது.

    மோதிய வேகத்தில் லாரி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் இடிபாட்டுக்குள் சிக்கி பழனிசாமி உடல் நசுங்கினார். அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு ஈரோடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.

    இடிபாட்டுக்குள் சிக்கி பலியான பழனிசாமி உடல் மீட்கப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விபத்தால் சோலார் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. #tamilnews
    ஈரோடு அருகே திருமண ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வழக்கில் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கை செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் மேல்வரலசாங் காட்டை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் நந்தகுமார் (வயது 19). கட்டிடத் தொழிலாளி.

    அந்த பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட நந்தகுமார் அவருக்கு ஆசை வார்த்தை கூறினார். நாம் திருமணம் செய்து கொள்ளலாம் சந்தோ‌ஷமாக வாழலாம் என ஆசை வார்த்தைகளை அள்ளி தெளித்தார்.

    பிறகு அவரை நந்தகுமார் கடத்தி சென்று விட்டதாக கூறப்பட்டது. இதையொட்டி காஞ்சிகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    காஞ்சிகோவில் போலீசார் இந்த வழக்கை ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு பரிந்துரைத்தனர்.

    மகளிர் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி கடத்தப்பட்ட மாணவியை மீட்டனர்.

    மேலும் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றதாக கூறப்படும் வாலிபர் நந்தகுமாரை “போக்சோ” சட்டத்தில் கைது செய்தனர்.
    ஈரோடு அருகே உள்ள வீரப்பன்சத்திரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் ஆயிரக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் பணம் வைத்து சூதாடிய ஈரோடு மாவட்டம் பொய்க்குற்றம் சாட்டி கணவருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து எஸ்.பி. சக்தி கணேசன் உத்தரவின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஈரோடு வீரப்பன்சத்திரம் அதியமான் வீதியில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தது தெரியவந்தது இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் சுந்தரமூர்த்தி (40), குமார் (42), பழனிச்சாமி (48), தன்சுக் (44), தங்கராஜ் (40) என தெரியவந்தது. இவர்களிடமிருந்து சீட்டு கட்டுகளும் ரூ.78 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ஈரோடு கொல்லம்பாளையத்தில் பஸ்சை வழிமறித்து கண்டக்டர் மீது தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு அரசு பஸ் ஒன்று நேற்று புறப்பட்டது. டிரைவராக பழனிசாமியும், கண்டக்டராக சந்திரசேகரும் இருந்தனர்.

    இந்த பஸ் சென்று கொண்டிருக்கும்போது முன்னே ஒரு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அதை ஈரோடு கொல்லம்பாளையம் கோபாலநாதபுரத்தை சேர்ந்த பிரதீஸ் (வயது 28) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    பஸ்சுக்கு மோட்டார் சைக்கிள் வழிவிடாததால் டிரைவர் ஆரன் அடித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த பஸ் ஈரோடு கொல்லம்பாளையம் ரவுண்டானா அருகே வரும் போது மோட்டார் சைக்கிளில் வந்த பிரதீஸ் பஸ்சின் முன்னே பைக்கை மறித்து பஸ்சை நிறுத்தினார். அவருடன் கொல்லம் பாளையம் எல்.ஜி.எஸ்.காலனியை சேர்ந்த இம்தியாஸ் (27), மோகன் (28) ஆகிய 2 வாலிபர்கள் வந்திருந்தனர்.

    மொத்தம் 3 பேரும் அரசு பஸ்சை மறித்து டிரைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கண்டக்டர் சந்திரசேகர் அவர்களை சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 இளைஞர்களும் கண்டக்டரை தாக்கினர். மேலும் பஸ்சின் முன்புற முகப்பு விளக்குகளை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கொல்லம்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்டக்டர் பேக்கில் இருந்த ரூ.2 ஆயிரத்தையும் அவர்கள் பறித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களையும் போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    பஸ்சை மறித்து கண்டக்டரை தாக்கி ரூ.2 ஆயிரம் பறித்ததாக அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வரும் தேர்தலில் எந்த கட்சி தேர்தல் அறிக்கையில் வணிகர்களுக்கு சாதகமாக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறதோ அந்த கட்சிக்கு தான் வணிகர்கள் வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று விக்கிரமராஜா கூறியுள்ளார். #Parliamentelection

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட வணிகர்களின் தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது.

    இதில் அதன் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு தொகுப்பை வெளியிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வணிகர்களுக்கு எந்தவித சலுகையும் அளிக்கப்படவில்லை. மாநில அரசு கொண்டு வந்துள்ள பிளாஸ்டிக் தடை விதிப்புக்கு வணிகர்கள் ஆதரவு தர வேண்டும்.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து அதிகாரிகள் சோதனைக்கு வரும் போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    வணிகர்களை மிரட்டி வரும் அதிகாரிகள் தங்களது தவறை நிறுத்தி கொள்ளாவிட்டால் வணிகர்கள் சாலையில் இறங்கி போராடவும் தயாராக உள்ளனர். அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டினால் அவர்களை தண்டிக்க பேரமைப்பின் உதவியை வணிகர்கள் நாட வேண்டும்.

    வணிகர் சங்கங்களின் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    18 மற்றும் 28 சதவீத வரி விதிப்பை அறவே அகற்றப்பட வேண்டும். திருப்பி செலுத்தக்கூடிய வகையில் நிலுவையில் உள்ள 93 ஆயிரம் கோடி உள்ளீட்டு வரி பணத்தை அரசு திருப்பி அளிக்க வேண்டும்.

    ஆன்லைன் வர்த்தகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள தடை சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். ரூ.5 லட்சம் வரை முழுமையாக வரி விலக்கு கொடுக்கப்பட வேண்டும். 60 வயதை கடந்த வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

    வரும் தேர்தலில் எந்த கட்சி தேர்தல் அறிக்கையில் வணிகர்களுக்கு சாதகமாக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறதோ அந்த கட்சிக்கு தான் வணிகர்கள் வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு விக்கிரமராஜா கூறினார். #Parliamentelection

    ×