என் மலர்
ஈரோடு
மொடக்குறிச்சி:
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு 260 மூட்டைகள் தேங்காய்பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 83 ரூபாய் 65 காசுக்கும், அதிகபட்ச விலையாக 85 ரூபாய் 16 காசுக்கும், சராசரி விலையாக 84 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.
இதேபோல் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 66 ரூபாய் 39 காசுக்கும், அதிகபட்ச விலையாக 80 ரூபாய் 29 காசுக்கும், சராசரி விலையாக 77 ரூபாய் 9 காசுக்கு ஏலம் போனது.
மொத்தமாக 12,741 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.10 லட்சத்து 21 ஆயிரத்து 839 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
- பழையபாளையம் இந்திரா காந்தி வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இதையடுத்து அந்த கடையில் இருந்த சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மது விலக்கு சிறப்பு இன்ஸ்பெக்டர் செந்தில், சூரம்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா என பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பழையபாளையம் இந்திரா காந்தி வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு கடையாக தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒரு மளிகை கடையில் சோதனை செய்த போது அங்கு மூட்டை மூட்டையாக ஹான்ஸ், புகையிலை பொருட்கள், பான் மசாலா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த கடையில் இருந்த சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கரோல் பிரான்சிஸ் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். யார் யாரிடம் இருந்து புகையிலை பொருட்கள் வாங்கப்பட்டது. என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் சூரம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி கேயன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சூரம்பட்டி பெட்ரோல் பங்க் அருேக 2 பேர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்கள், பான் மசாலா 90 பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சாஸ்லிங் (55), செல்வராஜ் (56) என தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஹான்ஸ் -புகையிலை பொருட்களை பறி முதல் செய்தனர்.
- கோபிசெட்டிபாளையம் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் மகனுடன் மாயமானார்.
- இது குறித்து ரங்கநாதன் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அடுத்த பொம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி கவுசல்யா (வயது 27). இவர்களுக்கு அவந்திகா (7) என்ற மகளும், அனீஷ் (4) என்ற மகனும் உள்ளனர். கவுசல்யா வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ரங்க நாதன் வேலைக்கு சென்ற பிறகு அவரது மனைவி கவுசல்யா அடிக்கடி செல்போனில் பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தெரிய வந்ததும் கவுசல்யாவை அவரது கணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கவுசல்யா மகளை பள்ளியில் விட்டு விட்டு மகன் அனீசை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ரங்கநாதன் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு மனைவி மற்றும் மகன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரை பற்றி அக்கம் பக்கம் மற்றும் உறவினர்களிடமும் விசாரித்தார். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து ரங்கநாதன் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காஞ்சிக்கோயில் குப்பை கிடங்கு அருகே தரைப்பாலம் கட்டும் வேலை நடக்கும் இடத்தில் இரும்பு சட்டர்களை யாரோ திருடி சென்று விட்டனர்.
- இதனையடுத்து ஆறுமுகம் இது தொடர்பாக காஞ்சிகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்கு பதிவு செய்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
பெருந்துறை:
பவானி ஊராட்சி கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). இவர் தனியாருக்கு சொந்தமான கட்டுமான கம்பெனியில் சப்-கான்ட்ராக்டராக வேலை எடுத்து செய்து வருகிறார்.
கடந்த 3 மாதங்களாக காஞ்சிக்கோயில் முதல் சித்தோடு வரை தார் ரோட்டை அகலப்படுத்தும் பணி செய்து வந்துள்ளார். இவர் பணி செய்து வந்த இடத்தில் அடிக்கடி இரும்பு பொருட்களை யாரோ திருடி சென்று வந்தனர்.
இந்நிலையில் சம்ப வத்தன்று ஆறுமுகம் காஞ்சிக்கோயில் குப்பை கிடங்கு அருகே தரைப்பாலம் கட்டும் வேலை செய்து வந்தனர். பின்னர் வேலை முடித்து வீட்டிற்கு சென்று விட்டார்.
மீண்டும் இரவு 9 மணி அளவில் வந்து பார்த்தபோது 5 இரும்பு ஷட்டர்களை யாரோ திருடி சென்று விட்டது தெரிய வந்தது. கடந்த 3 மாத காலத்திற்குள் 90 இரும்பு சட்டர்களை யாரோ திருடி சென்று விட்டனர்.
இதன் மொத்த மதிப்பு ரூ.90 ஆயிரம் இருக்கும்.
இதனையடுத்து ஆறுமுகம் இது தொடர்பாக காஞ்சிகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்கு பதிவு செய்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
- போலீசார் சம்பவயிடம் சென்று சோதனை செய்தனர். அப்போது செல்லப்பன் வீட்டில் 2 நாட்டு துப்பாக்கி, மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை இருந்தது தெரிய வந்தது.
- போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை பறிமுதல் செய்து செல்லப்பனை கைது செய்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி கால்வாரை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (32). இவர் வீட்டில் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவயிடம் சென்று சோதனை செய்தனர். அப்போது செல்லப்பன் வீட்டில் 2 நாட்டு துப்பாக்கி, மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை இருந்தது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை பறிமுதல் செய்து செல்லப்பனை கைது செய்தனர். மேலும் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. தினமும் 10 முதல் 12 டன் தக்காளி லோடு வந்தது.
இந்நிலையில் சமீபகா லமாக தக்காளி விலை கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனையானது.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மீண்டும் வரத்து குறைய தொடங்கியது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக மீண்டும் தக்காளி அதிக அளவில் வரத்தாகி வருகிறது. இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் தக்காளி அதிகளவில் விற்பனைக்கு வந்தது.
இன்று தாளவாடி, சத்தியமங்கலம், ஆந்திரா பகுதியில் இருந்து 25 டன் தக்காளி வந்தது. இதனால் தக்காளி விலை கிடுகிடு என குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- 1,122 பயனாளிகளுக்கு ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
- ரூ.4.84 லட்சம் மதிப்பீட்டில் பாரவலசு முதல் வாய்க்கால்மேடு வரை உள்ள சாலையை ஓரடுக்கு கப்பி சாலையாக அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
ஈரோடு:
ஈரோட்டில் 1,122 பயனாளிகளுக்கு ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
ஈரோடு மற்றும் சென்னிமலை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தி ற்கென பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அமைச்சர் முத்துசாமி சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1000 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகளையும் வழங்கினார்.
மேலும் 34 பயனாளி களுக்கு ரூ.23,35,050 மதிப்பீ ட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 88 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் முத்ராகடன், மாற்றுத்திறனாளிகடன், சிறுவணிகக் கடன், சம்பளக்கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்கு ழுக்கடன், பயிர்கடன், நடைமுறை மூலதனக்கடன், கூட்டுப்பொறுப்புக் குழு பயிர்கடன், சுயஉதவிக்கு ழுகடன் என மொத்தம் 1,122 பயனாளிகளுக்கு ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் பல்வேறுஅரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து ஈரோடு ஊராட்சி ஒன்றியம், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி லட்சுமி நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணியினையும், பேரோடு ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு த்துறையின் சார்பில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தக கட்டிடம் கட்டும் பணியினையும்,
கதிரம்பட்டி ஊராட்சி பவளத்தாம் பாளையத்தில் 15-வது நிதிக்குழு மற்றும் ஊரகவளர்ச்சி நிதியின் கீழ் ரூ.8.52 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கதொட்டி அமைக்கும் பணியினையும், ஊரக வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் தங்கம் நகரில் சாலை மேம்பாட்டு பணியினையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சி பாளையம் ஊராட்சி கரட்டுபாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.32.20 லட்சம் மதிப்பீட்டில் கரட்டுபாளையம் முதல் அண்ணமார் கோவில் வரை ஓரடுக்கு கப்பிசாலை அமைக்கும் பணியினையும், புங்கம்பாடி ஊராட்சி பாரவலசு பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.84 லட்சம் மதிப்பீட்டில் பாரவலசு முதல் வாய்க்கால்மேடு வரை உள்ள சாலையை ஓரடுக்கு கப்பி சாலையாக அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
வடமுகம் வெள்ளோடு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் பெருந்துறை ஆர்.எஸ் ஊராட்சி ஒன்றி ய நடுநிலைப்பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியினையும், முகாசி புலவன்பாளையம் ஊராட்சி ஆரிய காட்டு வலசு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.21.34 லட்சம் மதிப்பீட்டில் அரியங்காட்டு வலசு முதல் தண்ணீர்பந்தல் வரை ஓரடுக்கு கப்பி சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் ஆர்.டி.ஓ. சந்தோஷினிசந்திரா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், துணைமேயர் செல்வராஜ், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பிரகாஷ் (ஈரோடு), காயத்திரி இளங்கோ (சென்னிமலை), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், இணை இயக்குநர்கள் சின்னசாமி (வேளாண்மை), பழனிவேல் (கால்நடை பராமரிப்பு த்துறை), ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி மற்றும் ஈரோடு, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட தொடர்புடையதுறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- கொடிவேரி அணை நுழைவுவாயில் அருகே கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனன், மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
கோபி:
கோபிசெட்டிபாளையம அருகே கொடிவேரி அணை நுழைவுவாயில் அருகே கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனன், மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஒட்டர்பாளையத்தை சேர்ந்த மோகன் குமார் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா பொட்டலங்களும், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
- ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்த னர்.
- வருகின்ற 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 12-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்த னர். இதில் 3 மனுக்கள் தள்ளுபடியானது. மீதமுள்ள 39 மனுக்கள் ஏற்கப்பட்டன.
இதில் அந்தியூர் யூனியன் குப்பாண்டம்பாளையம் பஞ்சாயத்து வார்டு– 4, நம்பியூர் யூனியன் கெட்டி செவியூர் பஞ்சாயத்து வார்டு எண்– 10, பொலவபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 5, பெருந்துறை யூனியன் கருக்குபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 6, சத்தியமங்கலம் யூனியன் உக்கரம் பஞ்சாயத்து வார்டு எண்– 4, டி.என்.பாளையம் யூனியன் பெருமுகை பஞ்சாயத்து வார்டு எண்– 11, கணக்கம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 1, புஞ்சைளியம்பட்டி பஞ்சாயத்து வார்டு எண்– 3, தாளவாடி யூனியன் தலமலை பஞ்சாயத்து வார்டு எண் –2 என 9 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதுதவிர அம்மா பேட்டை யூனியன் சிங்கம் பேட்டை பஞ்சாயத்து வார்டு எண்–2-ல் 2 பேர், பவானி யூனியன் பெரியபுலியூர் பஞ்சாயத்து வார்டு எண்– 3-ல் 4 பேர், பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 3-ல் 2 பேர், கோபிசெட்டி பாளையம் யூனியன் கோட்டுபுள்ளாம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண் –1-ல் 2 பேர்,
மொடக்குறிச்சி யூனியன் 46 புதூர் பஞ்சாயத்து வார்டு எண்– 1-ல் 4 பேர், அத்தாணி டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–3-ல் 3 பேர், அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து, வார்டு எண்– 2-ல் 3 பேர் என 7 பதவிக்கு 20 பேர் போட்டியில் உள்ளனர்.
இந்த பகுதியில் வருகின்ற 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 12-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
- சித்தோடு நால்ரோட்டில் செல்போன் கடையில் நூதன முறையில் பணம் மோசடி செய்த வாலிபர்.
- இதனைத் தொடர்ந்து சண்முகத்தை சித்தோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சித்தோடு:
பவானி அருகே உள்ள சித்தோடு நால் ரோட்டில் அரவிந்தன் என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு அடிக்கடி ஒரு வாலிபர் வந்து செல்வார்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவிந்தன் கடைக்கு அந்த வாலிபர் தனது வங்கி கணக்குக்கு ரூ.25 ஆயிரம் மணி டிரான்ஸ்பர் செய்ய சொன்னார்.
இதனைத் தொடர்ந்து அரவிந்தன் ரூ.25 ஆயிரம் வாலிபரின்வங்கி கணக்கில் மணி டிரான்ஸ்பர் செய்தார். பின்னர் அரவிந்தன் போன் மூலம் அவரை தொடர்பு கொண்டு பணம் கேட்க முயன்றார்.
ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இது குறித்து அரவிந்தன் சித்தோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் எடப்பாடி, புதுப்பாளையம் மணியன்காரன் வலசு பகுதியைச் சேர்ந்த சண்முகம் (27) என்பதும் இவர் மணி டிரான்ஸ்பர் மூலம் பண மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சண்முகத்தை சித்தோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சண்முகம் இது போல் யாராரிமாவது பணம் மோசடியில் ஈடுபட்டாரா? என போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஈரோடு மாவட்ட செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருக்கப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை நல அலுவலர் பூங்கோதை அங்கு வந்து அவர்களிடம் கோரிக்கை குறித்து விசாரித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் சங்கத்தின் தலைவர் மோகன்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.
அவர்கள் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் ஒரு சதவீதம் வேலை வழங்க வேண்டும். வறுமை கோட்டின் கீழ் உள்ள எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வழங்க முகாம் அமைக்க வேண்டும். மாதாந்திர உதவி தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றுத்தி றனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். ஆவின் பாலகம் அமைத்து கொடுக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.
அனைத்து கல்வி நிறுவனங்களில் அனுபவம் மிக்க சைகை மொழி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி காத்திருக்கப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை நல அலுவலர் பூங்கோதை அங்கு வந்து அவர்களிடம் கோரிக்கை குறித்து விசாரித்தார்.
அப்போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலெக்டர் அலுவலகத்திற்கு காரில் வந்து இறங்கினார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த செவித்திறன் குன்றிய மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கோரிக்கை குறித்து கேட்டு அறிந்தார். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து உள்ளனர்.
- அந்தியூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் மனவேதனையில் இருந்த வாலிபர் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குபோட்டு கொண்டார்.
- இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (20). இந்நிலையில் மணிகண்டன், திவ்யதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திவ்யதர்ஷினி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி கண்டன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மணிகண்டனுக்கு அவரது தாய் ஆறுதல் கூறி வந்துள்ளார்.
சம்பவத்தன்று மணிகண்டன் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குபோட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது தாய் அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மணிகண்டனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அந்தியூர் உள்ள அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






