search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "because"

    • வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்தார்.
    • இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் கன்னிதேவன்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 39). இவர் கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லவில்லை. வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்த அவரை குடும்பத்தினர் கண்டித்ததாக கூறப்படு கிறது.

    இதில் மனமுடைந்த அவர் விஷம்குடித்து மந்தையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லை மாவட்டம் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி அவரது தம்பி முத்துப்பாண்டி கீழராஜ குலராமன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையம் ஈரோட்டில் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தினமும் உள்ளூர்-வெளியூர் மாவட்ட பஸ்கள் இயங்கி வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    தற்போது பஸ் நிலையத்தில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாகபஸ் நிலையத்தில் மினி பஸ் நிறுத்தம் ரேக் பகுதியில் குடிமகன்கள் மது அருந்திவிட்டு செய்யும் அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமல்ல. மது அருந்திவிட்டு அங்கேயே தூங்குகின்றனர். சில சமயம் வாந்தி எடுக்கின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் குறிப்பாக பெண் பயணிகள் முகம் சுளிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    இதனை அடுத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பஸ் நிலையத்தில் தேவையில்லாமல் சுற்றி கொண்டிருப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். எனினும் குடிமகன்கள் ரகளையில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று காலை நாமக்கல் சேலம் ரேக்கில் ஒரு குடிமகன் மது போதையில் அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தார். அப்போது கல்லூரி மாணவிகள் கல்லூரி செல்வதற்காக பஸ்சுக்கு காத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு மாணவியை பார்த்து அந்த குடிமகன் ஆபாச வார்த்தையில் பேசினார். இதனால் அந்த மாணவி அழுதார். இதே போன்று பஸ் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் குடிமகன்கள் அட்டகாசத்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் மகனுடன் மாயமானார்.
    • இது குறித்து ரங்கநாதன் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த பொம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி கவுசல்யா (வயது 27). இவர்களுக்கு அவந்திகா (7) என்ற மகளும், அனீஷ் (4) என்ற மகனும் உள்ளனர். கவுசல்யா வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ரங்க நாதன் வேலைக்கு சென்ற பிறகு அவரது மனைவி கவுசல்யா அடிக்கடி செல்போனில் பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தெரிய வந்ததும் கவுசல்யாவை அவரது கணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கவுசல்யா மகளை பள்ளியில் விட்டு விட்டு மகன் அனீசை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ரங்கநாதன் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு மனைவி மற்றும் மகன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரை பற்றி அக்கம் பக்கம் மற்றும் உறவினர்களிடமும் விசாரித்தார். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து ரங்கநாதன் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×